Published:Updated:

இஸ்ரேலின் சாக்கடலில் அற்புத மூலிகை குளியல்! - ஒரு சாமானியனின் புனிதப் பயணம் -2 | My Vikatan

Israel

பாலஸ்தீனத்தில் அங்கங்கே சிவப்பு நிற எழுத்துகள் கொண்ட எச்சரிக்கை பலகைகள் இஸ்ராயேலருக்கு என்று வைக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்டுக்கு ஒரு விதமான சராசரி வரவேற்பு கிடைக்கிறது.

Published:Updated:

இஸ்ரேலின் சாக்கடலில் அற்புத மூலிகை குளியல்! - ஒரு சாமானியனின் புனிதப் பயணம் -2 | My Vikatan

பாலஸ்தீனத்தில் அங்கங்கே சிவப்பு நிற எழுத்துகள் கொண்ட எச்சரிக்கை பலகைகள் இஸ்ராயேலருக்கு என்று வைக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்டுக்கு ஒரு விதமான சராசரி வரவேற்பு கிடைக்கிறது.

Israel

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

முதலில் ஜெருசலேம் பெத்லகேம் பற்றிய ஒரு அறிமுகம். இந்த இரு ஸ்தலங்களும் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமன்றி யூதர்களுக்கும் இஸ்லாமியருக்கும் முக்கியம் வாய்ந்த ஸ்தலங்களாய் உள்ளன.

இந்த இரு புனித தலங்களும் தங்களுக்குள் தீராப்பகை கொண்டு போராடி வரும் இஸ்ராயேல் பாலஸ்தீன நாடுகளுக்குள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் எவ்வளவோ முறை செய்யப்பட்டிருந்தாலும் குண்டு வெடிப்புகள் அதிகம் நிகழக்கூடிய பகுதி.

இந்த புனித பயணத்தின் பொழுது அடிக்கடி இந்த இருநாட்டு எல்லைகளையும் கடக்க வேண்டி வரும்.

கடக்கும் ஒவ்வொரு பொழுதிலும் சமாதானம் என்ற பொருள் படும் ஷலோம் என்ற சொல்லை நாம் நமது பயணம் செய்யும் வண்டியில் ஆய்வு செய்ய வரும் இளம் வயது ஸ்டென் கன் ஏந்திய வீர வீரங்கனைகளுக்குடன் பகிர்ந்து கொள்ள அறிவுறித்தப்படுகிறோம்.

Jerusalem
Jerusalem

ஆம். இஸ்ராயேலிலும் சரி, பாலஸ்தீனியத்திலும் சரி, பதினெட்டு வயது நிரம்பிய ஆண்களும் பெண்களும் கட்டாய ராணுவ சேவை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இஸ்ரேலையும் பாலஸ்தீன எல்லையையும் பிரித்து அறிந்துகொள்ள நமக்கு உதவக்கூடிய சில அடையாளங்கள்.

வண்டிகளின் பதிவு எண் பாலஸ்தீனத்தில் P என்று வலது பக்கம் எண்களின் பக்கத்தில் கொண்டு இருக்கும்.

பாலஸ்தீன சாலைகள் சரிவர பராமரிக்க படாமல் குப்பையும் கூளமுமாய் இருக்கும்.

மேலும் பாலஸ்தீனத்தில் அங்கங்கே சிவப்பு நிற எழுத்துகள் கொண்ட எச்சரிக்கை பலகைகள் இஸ்ராயேலருக்கு என்று வைக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்டுக்கு ஒரு விதமான சராசரி வரவேற்பு கிடைக்கிறது.

இரண்டு இடங்களுமே சுற்றுலா முக்கியத்துவம் பெற்றவைகளாக இருப்பதால் தங்குமிடங்களும் ஹோட்டல்களும் எல்லொருடைய பட்ஜெட்டுக்கேற்ப கிடைக்கின்றன. பயணம் செல்வோருக்கு தங்குமிடங்கள் ஜெருசலேம் பெத்லகேமிலேயே தேர்ந்துகொள்வது உசிதம்.

உணவும் பலதரப்பட்ட பன்னாட்டு பயணிகளை கருத்தில் கொண்டு கிடைக்கின்றது.

Israel market
Israel market

நாங்கள் சென்ற பயண கோஷ்டி ஜெருசலத்தில் இருந்து எங்கள் புனித பயணத்தை தொடங்கியது. இரண்டு நாடுகளுமே தங்கள் சொந்த நாணயத்தை கொண்டிருந்தாலும் அமெரிக்க டாலரும் ஐரோப்பிய யூரோக்களும் சாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. அதாவது சாதாரண கடைகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அங்கு நீங்கள் பயணம் செல்லுமுன் ஞாபகத்தில் கொள்ள சிறு குறிப்புகள்

ஒரு டாலர் நோட்டுகள் அதிகம் வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடின் சில்லறைக்கு அதிக கஷ்டப்படுவீர்கள். சில்லறை மாற்ற கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும்.

குடிநீர் விலை அதிகம். அரை லிட்டர் பாட்டில் ஒரு அமெரிக்க டாலர்.

பயணிகள் அதிகம் வருவதால் பிக் பாக்கெட்டுகளும் ஏமாற்று சில்லறை வியாபாரிகளும் அதிகம்.

குழுவாக சென்றீர்கள் என்றால் குழுவை தவற விட்டு விடாதீர்கள். டாக்சி செலவு அதிகம். மேலும் நீங்கள் தொகுப்புலாவில் சென்றீர்கள் என்றால் அவர்களே உங்களுக்கு ஒரு குறிப்பிட்டநிறம் கொண்ட தொப்பி கொடுத்துவிடுவர். அந்த குழுவில் உள்ள அனைவரும் ஒரே நிறம் கொண்ட தொப்பியே அணிந்திருப்பதால் அந்த தொப்பி நிறத்தை பின்பற்றி சென்றாலே தொலைவதற்கு சந்தர்ப்பங்கள் கம்மி.

Jerusalem market
Jerusalem market

மேலும் ஜெருசலேம் பெத்லகெத்துடன் பக்கத்து நாடான எகிப்தும் வரலாற்று முக்கியம் கொண்ட இடங்கள் சில கொண்டுள்ளன. ஆனால் அவை பழைய வேதாகம சம்பந்தம் கொண்டவைகளாக இருப்பதால் அவை அதிக மத கவர்ச்சி கொண்டிருப்பதில்லை.

பழைய வேதாகமம் கிறிஸ்துவர்களின் நம்பிக்கை படி இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு வருகை பற்றி இந்த உலகிற்கு முன் அறிவிக்க வந்த தீர்க்கதரிசிகளையும் அவரின் முன்னோரின் வரலாற்றையும் பற்றியது.

புதிய வேதாகமம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றியும் அவர் செய்த புதுமைகள் பற்றியும் அவர் சுற்றியலைந்து போதனைகள் செய்த இடங்கள் பற்றியும் கூறுவது.

நாங்கள் எகிப்தை ஒதுக்கிவிட்டோம். புதிய வேதாகம சம்பந்தம் கொண்ட இடங்களையே இந்த முறை தரிசிக்க முடிவெடுத்தோம்.

இரண்டு இடங்களுக்கும் தொடு புள்ளி இடம் இஸ்ராயேல் நாட்டின் தலைநகரான டெல் அவீவ்.

டெல் அவீவ் விமான நிலையத்தில் மற்ற விமான நிலையங்களில் கிடைப்பது போல் பொருட்கள் கொண்டு செல்ல ட்ராலி இலவசம் கிடையாது. கார்ட் மூலம் பணம் செலுத்தி ட்ராலி வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

இஸ்ரேலிய நாட்டு தலைநகரான டெல் அவீவ் மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஒரு சிறிய நகராகும்.

டெல் அவீவை அபு தாபி மூலமும் சென்று அடையலாம். துபாய் மூலமும் சென்று அடையலாம்.

நாங்கள் அபு தாபி மூலம் சென்றடைந்தோம்.

Tel Aviv
Tel Aviv

அங்கு சென்றவுடன் எங்கள் குழுவினரை வரவேற்க இரு வழிகாட்டிகள் இருந்தனர். குழுவினர் அனைவருக்கும் நீல நிற தொப்பி கொடுக்கப்பட்டது. இந்த தொப்பி வெயிலின் தாக்கம் தணிக்க அல்ல. அடையாள குறியீடாகவே அதிகம் உபயோகப்பட்டது.

நாங்கள் டெல் அவீவ் சென்றது ஜூன் மாதம். 35 டிகிரீ இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியவில்லை.

எங்களை வரவேற்ற வழிகாட்டிகள் இருவரும் எங்களை இரு பேருந்துகளுக்கு வழிநடத்தினர்.

நாங்கள் (மீரா, லாஸ்யா, மருமகன் ஃப்ரான்க்கோ, பேத்தி லாஸ்யா, பேரன் இன்பா) அனைவரும் சேர்ந்து ஒரு பேருந்தில் இடம்பிடித்து கொண்டோம்.

மதிய உணவாக அனைவருக்கும் பாக்கெட் செய்யப்பட்டிருந்த ஹாம்பர்கர் தண்ணிருடன் வழங்கப்பட்டது.

பின்னர் எங்கள் புனித பயணம் ஆரம்பமானது.

ரோமன் கத்தோலிக்கர்கள் தங்கள் வழிபாட்டில் இயேசு கிறிஸ்துவின் தாயான அன்னை மேரி மாதாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பர். கிறிஸ்துவர்களில் மற்ற பிரிவினர் இயேசு கிறிஸ்துவிற்கு அளிக்கும் முக்கியத்துவம் மேரி மாதாவிற்கு அளிப்பதில்லை.

முதலிலேயே நான் சொல்லியிருந்தது போல் நாங்கள் சென்ற குழு ரோமன் கத்தோலிக்கர்கள் அடங்கிய குழுவாய் இருந்ததால் எங்கள் புனித பயணம் மேரி மாதாவின் பிறப்பிடத்தில் இருந்து ஆரம்பமானது.

Airport
Airport

அன்னை மாதாவைப் பற்றி பிற மதத்தினர் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர் பெற்றோரைப் பற்றி அறிந்து இருப்பதில்லை.

மாதாவின் தகப்பனார் பெயர் சுவாக்கிம். தாயார் பெயர் அன்னம்மாள். சுவாக்கிம் ஜெருசலேம் நகரில் பெத்சதா என்று அழைக்கப்படும் குளத்தின் அருகில் இருந்த ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டில் தான் அன்னை மாதா பிறந்தார். அந்த வீட்டில் இருந்து தான் எங்கள் பயணம் ஆரம்பமானது. அந்த வீட்டின் அருகில் உள்ள மாதா குளம் என்று அழைக்கப்படும் அந்த குளம் வரண்டு காணப்படுகிறது. அதில் இருந்து பெறப்படும் சிறிதளவு நீர் விசுவாசிகளால் புனித நீராக சேகரித்து கொள்ளப்படுகிறது.

மரியம் என்று அழைக்கப்படும் மேரி மாதா கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் பெயர் இடம் பெற்றிருப்பதை விட இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் அதிக முறை பெயர் இடம் பெற்றுளார். ஆம் குரானில் மரியம் என்ற பெயர் எழுபது முறைக்கும் மேல் இடம் பெற்றுள்ளது.

ஜெருசலேம் பெத்லகேம் மற்றும் அதை சுற்றியுள்ள புனித ஸ்தலங்கள் சம வெளியில் இல்லை. அவை மலைப்பாதைகளில் அமைந்துள்ளன. ஒரு இடத்தை அடைய மேல் நோக்கி சென்றால் இன்னொரு இடம் அடைய கீழ் நோக்கி செல்ல வேண்டும். அதனால் தான் ஜுடேயா என்று பரவலாக அழைக்கப்படும் அந்த இடங்களில் குதிரையும் அல்லாத கழுதையும் அல்லாத கோவேறு கழுதைகள் உபயோகத்தில் இருந்துள்ளன.இப்பொழுதும் உபயோகத்தில் இருக்கின்றன.

Bethlehem
Bethlehem

பைபிளில் இடம் பெற்றுள்ள கலீலியில் உள்ள கடல் உண்மையில் கடல் அல்ல. அது ஒரு பெரிய ஏரியே ஆகும். இதில் இருக்கும் நீர் உப்பு நீரும் இல்லை. கலீலீ செல்பவர்கள் பீட்டர் ஃபிஷ் என்று அழைக்கப்படும் ஒருவகை மீனை சாப்பிடுவர். இந்த வகை மீன்கள் உலகிலேயே இரண்டு இடங்களில் மட்டும் தான் கிடைக்கிறது. ஒன்று கலீலீ கடல். மற்றது கருங்கடல். இவ்விரு இடங்களை தவிர உலகிள் வேறு எங்கும் இவ்வகை மீன்கள் கிடைப்பதில்லை.

இந்த மீன்கள் பீட்டர் ஃபிஷ் என்று அழைக்கப்படும் பெயர் காரணம், பைபிளில் சீசர் தொழில் வரி விதித்த பொழுது இயேசு கிறிஸ்து பீட்டர் என்று அழைக்கப்படும் ராயப்பரிடம்,” அந்த இடத்தில் உன் வலையை விரி. அதில் இருந்து கிட்டும் மீன் வாயில் கிடைக்கும் நாணயம் கொண்டு உனக்கும் எனக்கும் வரியை கட்டிவிடு” என்பார். அதே போல் ராயப்பரும் வலை விரிப்பார். வலையில் சிக்கிய மீனின் வாயில் நாணயமும் கிடைக்கும்.

யூதேயாவில் உள்ள ஜெரிக்கோ என்ற நகரமே உலகிலேயே பழமை வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது. அங்கு விற்கப்படும் பேரீச்சம் பழங்கள் அளவில் பெரியவையாகவும் நல்ல சுவை கூடியவையாகவும் இருக்கின்றன. இந்த வகை பேரீச்சம் பழங்கள் ஜெரிக்கோவில் மட்டுமே கிடைக்கின்றன.

Dates
Dates

இயேசு செய்த முதல் புதுமையாக கருதப்படுவது கானாவூர் கல்யாணத்தில் மதுரசம் தீர்ந்தவுடன் தண்ணீரை மதுரசமாக மாற்றியது தான். அந்த கானாவூரில் உள்ள கடைகளில் வையின் என்று அழைக்கப்படும் மதுரசம் கிடைக்கும். அனைவரும் சாம்பிள் இலவசமாக வாங்கி ருசி பார்க்கலாம்.

இதுநாள் வரை திராட்சையில் இருந்து உருவாக்கப்படும் மது ரசமே சிறந்ததென்று எண்ணம் கொண்டவர்கள் அவர்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆம் உலகிலேயே சிறந்த மதுரசம், நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள், மாதுளை சாறில் இருந்து பெறப்படுகிறதாம்.

இன்னொரு ருசிகரமான விஷயம். யூதர்களின் வீடுகளையும் முஸ்லிம்களின் வீடுகளையும் அடையாளம் கண்டு கொள்ள நமக்கு உதவக்கூடுயது. யூதர்களின் வீடுகளில் கிணறு இருக்கும். முஸ்லிம்களின் வீடுகளில், வீடுகளின் மேல் நீர் தொட்டி காணப்படும்.

உலகிலேயே மிக தாழ்ந்த தளப்பரப்பில் இருக்கும் டெட் சீ என்று அழைக்கப்படும் சாக்கடலும் பயணிகளை கவர்ந்திழுக் கூடிய இடங்களில் ஒன்றாக உள்ளது. சாக்கடலில் ஒரு குளியல் அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. சாக்கடலில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட இரசாயனங்கள் சரும வியாதிகளுக்கு நல்ல நிவாரணியாக கருதப்படுகிறது. ஆனால் சாக்கடல் நீர் கண்களில் படாதவாறு குளிக்க வேண்டும். கடல் நீரில் குளித்து முடித்த பின் அருகில் இருக்கும் நீச்சல் குளங்களிலோ அல்லது பொருத்தப்பட்டுள்ள நீர்குழாய்களிலோ குளித்து விடவேண்டும். இந்த சாக்கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் மிக்க குளியல் சோப்புகள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கின்றன.

Dead sea
Dead sea

சமீபத்தில் கிறிஸ்துவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு அன்று இயேசு கிறிஸ்து ஜெருசலெம் நகருள் தன்னைப் பின்பற்றுவர்களுடன் விமரிசையாக வருகை தருகிறார். இதுவே இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை என்று விசுவாசிகளால் நம்பப்படுகிறது. இந்த இடத்தின் குறியீடாக ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது.உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவர்கள் கடைசி தீர்வு என கருதப்படும் தீர்வை தினமன்று இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இந்த இடத்திலேயே நிகழும் என்று நம்புகிறார்கள். எனவே அந்த குறிப்பிட்ட இடத்தில் உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவர்கள் பல கோடி டாலர்கள் கொடுத்து அங்கே தங்களை தங்கள் இறப்பிற்கு பின் புதைக்க செய்கின்றனர். ஏனேனில் இரண்டாம் வருகையின் பொழுது அவர்கள் தீர்வையில் முன்னுரிமை பெறுவர் என்று நம்பிக்கை உள்ளது.

மேலும் கிறிஸ்துவர்கள் அல்லாதோரும் இயெசு கிறிஸ்துவின் பிரபல மலைப்பிரசங்கம் பற்றி அறிந்திருப்பர். இந்த மலைப்பிரசங்கத்தின் பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இயேசு மலைப்பிரசங்கம் செய்கிறார். பல்லாயிரக் கணக்கானோர் அதை கேட்கின்றனர். ஒலி பெருக்கிகள் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று பலரும் வியக்கலாம். மலைப்பிரசங்கம் நிகழப்பட்ட அந்த இடத்தில் நம்பினால் நம்புங்கள், இப்பொழுதும் ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பேசினால் ஒலி பெருக்கிகள் உதவி இன்றியே வெகு தூரம் அவர் குரல் சென்றடைகிறது.

மீண்டும் டெல் அவீவ் அடைந்தோம்.

டெல் அவீவில் இருந்து அபு தாபி-மஸ்கட்- திருச்சி. எங்கள் பயணம் இனிதே முடிவடைந்தது

அன்புடன்

எஃப்.எம். பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.