Published:Updated:

ஊட்டி: 2 லட்சம் மலர்ச் செடிகள், 7000 பூந்தொட்டிகள்... மெல்லத் துளிர்க்கும் சுற்றுலா!

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி
அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் பூந்தொட்டிகளில் சிறப்பு மலர் அலங்காரங்கள் நடைபெற்று வருகின்றன. 2 லட்சம் செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுபடுத்தும் வகையில், கடந்த மார்ச் மாதம் 17ம் தேதியே நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு, பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. மே மாதம் நடைபெற இருந்த கோடைவிழாவும் ரத்து செய்யப்பட்டது.

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி
அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நீலகிரியில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், சுற்றுலா வருவாயைச் சார்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.

தற்போது உள்ள தளர்வுகளின் அடிப்படையிலும், உள்ளூர் மக்களின் வேண்டுகோளை ஏற்றும் பொது பூங்காக்களை மட்டும் திறக்க அரசு அனுமதித்தது.

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி
அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற பூங்காக்கள் 176 நாள்களுக்குப் பிறகு கடந்த 9ம் தேதி முதல் திறக்கப்பட்டன.

தற்போது இ-பாஸ் முறையில் டூரிசம் என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி
அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்க உள்ள நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மற்றும் கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த இடத்துக்கெல்லாம் நிச்சயம் போயிருக்கமாட்டீங்க! டாப்-10 வீக் எண்ட் ஸ்பாட்ஸ்!

இது குறித்து பூங்கா நிர்வாகம் தரப்பில், "பூங்கா திறக்கப்பட்டது முதல் ஒரு நாளைக்கு 100 சுற்றுலாப் பயணிகள் வீதம் வருகின்றனர். செகன்ட் சீசனுக்காக 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துள்ளன. மேலும் டேலியா, சால்வியா, இன்காமேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. முறையான‌ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்" என்றனர்.

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி
அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

கோவையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "5 மாசமா வீட்லயே இருந்து ரொம்ப அழுத்தமா இருக்க மாதிரி ஃபீல் ஆச்சு.வெளிய எங்கயாவது போலாம்னு யோசிச்சி, ஊட்டிக்கு வர முடிவெடுத்து இங்க வந்தோம். கிளைமேட் சூப்பரா இருக்கு. ஃபிளவர்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு