Published:Updated:

ஆலி, காஜியார், நைனிட்டல் - மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்!

வருண்.நா

#RelationshipGoals ஹேஷ்டேக், தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த கோல்ஸில் மிக முக்கியமானது, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் அழகான இடங்களுக்குச் சென்று இயற்கையை ரசிப்பதும், எழில் மிகுந்த இடங்களில் புகைப்படம் எடுத்துக்கொள்வதும்தான். இந்தியாவில் அதற்கேற்ற சிறந்த 12 இடங்கள் இங்கே!

1
Taj Mahal

ஆக்ரா

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் காதலின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால். வெள்ளைக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதே காதலர்களின் அதிகபட்ச ஆசையாக இருக்கும்.

2
Auli ( Image by Jignesh Makwana from Pixabay )

ஆலி (Auli)

உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹிமாலய மலைத் தொடர்களில் இருக்கும் ஒரு சிறிய பனிப் பிரதேசம், ஆலி. ஆலியிலிருந்து பக்கத்து நகரமான ஜோஷிமத்திற்கு (Joshimath) ரோப் கார் மூலம் செல்லும் வசதி உள்ளது. உங்கள் மனதுக்கு விருப்பமானவருடன் பனி நிறைந்த மலைகளுக்கு நடுவே ரோப் காரில் பயணம் செய்யலாம்.

3
Simla Train

சிம்லா

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், கோடைக்கால தலைநகரமாக இருந்தது சிம்லா. உலகத்தில் இருக்கும் மிக அழகான ரயில் வழித்தடங்களில், சிம்லாவில் உள்ள ரயில் தடத்திற்கு முக்கிய இடமுண்டு. கோடைக்காலத்தில், அந்த வழித்தடத்தில் உங்கள் லைஃப் பார்ட்னருடன் ரயில் பயணம் மேற்கொண்டால், உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த ரொமான்டிக் பயணமாக அது அமையும்.

4
Manali ( Image by punit sharma from Pixabay )

மணாலி

இமாசலப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது, மணாலி மலைப் பிரதேசம். பிர்பஞ்சால் மலைத் தொடர்களிடையே பாராகிளைடிங், பனிச்சறுக்கு, படகுப் பயணம் என உங்கள் பிரியமானவருடன் கொண்டாடச் சிறந்த இடம். டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை பனிச்சறுக்கு விளையாட ஏற்ற காலமாக இருக்கும்.

5
Jaipur ( Image by Hitesh Sharma from Pixabay )

ஜெய்ப்பூர்

இந்தியாவின் 'பிங்க் சிட்டி', ஜெய்ப்பூர். பெரிய மாளிகைகள், பழங்காலத்துக் கோயில்கள் என கட்டடக் கலைகளால் நிறைந்த நகரம். கல்யாணமான பிறகு, உங்கள் லைஃப் பார்ட்னருடன் புகைப்படமெடுக்க சிறந்த நகரமாக இருக்கும் ஜெய்ப்பூர்.

6
காஜியார் சீடஸ் மரங்கள்

காஜியார் (Khajjiar)

மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது, காஜியார். இமாசல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காஜியாரின், சீடஸ் மரங்கள் நிறைந்த வனப் பகுதி, உங்கள் மனத்துக்கு நெருக்கமானவருடன் நேரம் செலவழிக்க சிறந்த இடமாக இருக்கும்.

7
Nainital Lake ( Image by Jignesh Makwana from Pixabay )

நைனிட்டல்

உத்தரகான்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகான குளிர் பிரதேசம் நைனிட்டல். நைனி ஏரியில் படகு சவாரி செய்வதுதான் இந்தியாவின் மிக ரொமான்டிக்கான படகு சவாரியாக இருக்கும். டிரெக்கிங் செய்வதற்கும் மிகச் சிறந்த இடம் நைனிட்டல்.

8
Mussoorie

முசோரி (Mussoorie)

வருடம் முழுவதும் குளிர் நிறைந்திருக்கும் மலைப் பிரதேசம் முசோரி. பசுமையான மரங்களுக்கிடையே கட்டடங்கள் அமைந்திருக்கும் முசோரி, உங்கள் காதல் ஜோடியுடன் சேர்ந்து இயற்கையை ரசிக்க ஏதுவான இடமாக இருக்கும்.

9
Darjeeling

டார்ஜிலிங்

மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ளது, ஃபேமஸ் ஹனிமூன் ஸ்பாட் டார்ஜிலிங். டார்ஜிலிங்கின் கிளைமேட்டும், டாய் டிரெயின் பயணமும் உங்களை ரொமான்டிக் மனநிலைக்குக் கொண்டு செல்லும்.

10
Lonavala

லோனவாலா (Lonavala)

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது, லோனவாலா மலைப் பிரதேசம். நீர்வீழ்ச்சிகள், நீர் நிறைந்த ஏரிகள் என இயற்கை எழில் நிறைந்திருக்கும் லோனவாலாவில், உங்கள் இணையருடன் பசுமையான மலைத் தொடரில் டிரெக்கிங் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.

11
Kanyakumari

கன்னியாகுமரி

இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் அழகான இடம், கன்னியாகுமரி. 133 அடி வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை என கடற்கரையில் அமைந்திருக்கும் கட்டடக் கலைகளை ரசித்துக்கொண்டே உங்கள் வாழ்க்கை இணையருடன் சூரிய உதயத்தைப் பார்ப்பதற்கு ஏற்ற இடம், கன்னியாகுமரி.

12
Cochin

கொச்சி

'அரபிக் கடலின் ராணி' என அழைக்கப்படுகிறது, கேரளத்தில் உள்ள கொச்சி நகரம். மீன்பிடித் தொழில், மசாலா வகைகள் ஏற்றுமதி என்று தொழில் நகரமாக விளங்கும் கொச்சி, பார்ப்பதற்கு மிகவும் அழகான இடம். உங்கள் இணையருடன் அங்குள்ள சர்ச் மற்றும் பாரம்பர்ய கட்டடங்கள் ஆகியவற்றைப் பார்த்து ரசிக்கலாம். அங்கு கிடைக்கும் கடல் உணவுகளையும் தவறவிடாதீர்கள்.