
வால்பாறைல நாங்க பண்ணின அட்ராசிட்டிஸ் எல்லாம் ஸ்டேட்டஸ்ல பார்த்துட்டு அம்மாகிட்ட சொல்லிக் குடுத்துட்டா என் அக்கா. அப்பாவுக்கு ஏற்கெனவே விஷயம் தெரியுங் கிறதால தப்பிச்சிட்டேன்.
“மனிதர்களை நம்பிதான் என்னோட பயணங்கள் அமையும்” - நம்பிக்கை வார்த்தைகளுடன் தொடங்குகிறார் சோலோ டிராவலர் கௌதமி. திருப்பூரைச் சேர்ந்த இவர், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்விக்காக வந்தவர், சோலோ டிராவலர் அவதாரம் எடுத்து இப்போது சென்னைவாசி.
“அப்பா சொந்தமா வேன் வெச்சிருந்தாரு. அவருக்கும் டிராவல்னா ரொம்ப பிடிக்கும். குடும்பமா அடிக்கடி டூர் கிளம்பிடுவோம். அதனால சின்ன வயசுலயே பயணங்கள் மேல ஈர்ப்பு வந்துடுச்சு. காலேஜ் படிக்கும்போது முதல் முறையா ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து வால்பாறைக்குப் போனோம். அம்மாகிட்ட ஃபிரெண்ட் வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டு வந்துட்டேன்.


வால்பாறைல நாங்க பண்ணின அட்ராசிட்டிஸ் எல்லாம் ஸ்டேட்டஸ்ல பார்த்துட்டு அம்மாகிட்ட சொல்லிக் குடுத்துட்டா என் அக்கா. அப்பாவுக்கு ஏற்கெனவே விஷயம் தெரியுங் கிறதால தப்பிச்சிட்டேன். அப்புறம் திட்டு வாங்குறதும் டூர் போறதும் பழக்கமாயிடுச்சு. ஒருகட்டத்துல நானும் என் சின்ன வயசுத் தோழியான சங்கீதாவும் சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பிச்சோம். அவங்க படிக்க ஆஸ்திரேலியா போனதும் நான் தனியா டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். இப்ப அதுவே ரொம்ப பிடிச்சுப் போச்சு” என்பவர் ``பயணங்கள்தான் தன்னை சகஜமாகப் பேசும் நபராக மாற்றின'' என்கிறார்.
“சின்ன வயசுல இருந்தே ரொம்ப அமைதியான ஆளு. வீட்டைவிட்டு வெளியில போக மாட்டேன். யார்கூடவும் பேச மாட்டேன். டிராவல் பண்ண ஆரம்பிச்ச பிறகு தயக்கம் இல்லாம எல்லார்கிட்டயும் சாதாரணமா பேச ஆரம்பிச் சிட்டேன்” எனும் கௌதமி உள்நாடு, வெளிநாடு எங்கும் சோலோ டிராவல் செய்கிறார்.


“பயணங்கள் மனிதர்களைச் சார்ந்துதான் இருக்கும். சோலோ ட்ரிப்புக்குன்னு கம்யூனிட்டி இருக்கு. விடுதிகள் இருக்கு. அந்த விடுதிகள்ல என்னை மாதிரி நிறைய பேர் தங்கியிருப்பாங்க. அவங்களோட சேர்ந்துதான் சுத்திப் பார்ப்பேன். தனியா பயணம் பண்ண ஆரம்பிச்ச பிறகு மனிதர்களை எளிதா கணிக்கக் கத்துகிட்டேன். ஒத்து வராதவங்கன்னு தோணுச்சுன்னா அவங்கிட்ட பேசக்கூட மாட்டேன்” என்பவர் விடுதிகள் பற்றி கூடுதல் தகவல் களைப் பகிர்ந்தார்.
5,000 ரூபாயில் தென்னிந்தியப் பயணம்! போக, வர டிரெயின் (ஸ்லீப்பர் கோச்) - 1,000 ரூபாய் பயணிகள் விடுதி (2 நாள்கள் தங்க) - 1,000 ரூபாய் லோக்கல் பயணம், சாப்பாடு, ஷாப்பிங் - 3,000 ரூபாய்
“சோலோ டிராவலுக்கு பயணிகளுக்கான விடுதிகள்ல தங்குறதுதான் சிறந்தது. பள்ளி, கல்லூரி விடுதிகள்ல இருக்கிற மாதிரி அடுக்குப் படுக்கைகள் இருக்கும். பெரும் பாலான இடங்கள்ல இந்த விடுதிகள் இருக்கு. தனியா ஒரு ஹோட்டல் ரூம் எடுத்தா ஒரு நாளைக்கு குறைஞ்சது 1,000 ரூபாய் ஆகும்.
ஹோட்டல்ல இருக்கிற ஏசி, ஃபிரிட்ஜ்னு எல்லா வசதிகளோட 300-400 ரூபாய்லயே நல்ல விடுதிகள் கிடைக்கும். ஃபிரெண்ட்ஸும் கிடைப்பாங்க. அங்கேயே சமைச்சும் சாப்பிட் டுக்கலாம். செலவும் குறையும், உடல்நலமும் பாதிக்கப்படாது.
கோவா போனபோது ஃபுட் பாய்சன் ஆகி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தின்னு ரொம்பவே கஷ்டப்பட்டேன். என்கூட ரூம்ல தங்கியிருந்த பொண்ணுதான் மாத்திரை வாங்கித் தர்றதுல இருந்து எல்லா உதவிகளும் செஞ்சாங்க. ஹோட்டல் ரூம்ல தங்கியிருந்தா ஒரு வாய் தண்ணீர் குடுக்கக்கூட ஆள் இருந்திருக்க மாட்டாங்க” என்றவர், சோலோ டிராவலின் ப்ளஸ், மைனஸ் பகிர்கிறார்.


ப்ளஸ்- மைனஸ்: தனியா டிராவல் பண்ணும் போது ரொம்பவே சுதந்திரமா உணருவோம். ஒரு ட்ரிப் போயிட்டு வந்தாலே வீடு, சமூகம், சுற்றுப்புறம்னு எல்லாத்தையும் நம்மளே தனியா கையாள முடியும்ன்ற நம்பிக்கை வரும். மைனஸ்னு பார்த்தா, பாதுகாப்புதான். நம்மளை யாரும் பார்க்குறாங்களா, பின் தொடருறாங்களான்ற பயம் இருக்கும். டிராவல் பண்ணும்போது ஃபிரெண்ட்ஸ் அமையலைன்னா ராத்திரி தனியா எங்கேயும் போக மாட்டேன்.
பீரியட்ஸ்: பீரியட்ஸ் சமயத்துல டிராவல், டிரெக்கிங்லாம் கொஞ்சம் சிரமமா இருக்கும். அதனால மென்ஸ்டுரல் கப் பயன்படுத்தத் தொடங்கிட்டேன். அதைப் பயன்படுத்தும் போது நீச்சல் தொடங்கி சாகச விளை யாட்டுகள்கூட பண்ணலாம். வலிக்கு மாத் திரை சாப்பிட மாட்டேன். அதற்கு பதில் வெளிப்புறமா பயன்படுத்துற பட்டைகள் (Patches) இருக்கு. இதெல்லாம் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு...” அனுபவம் பேசும் கௌதமி எப்போதும் குறைந்த பட்ஜெட் பயணிதான்.
குறைந்த பட்ஜெட்: “ஒரு ஜீன்ஸ், சில டி-ஷர்ட் மட்டும் எடுத்துட்டுக் கிளம்பிடுவேன். தென்னிந்தியாவுல எங்க போனாலும் டிரெயின், அதுவும் ஸ்லீப்பர் கோச்தான். நைட் டிராவலுக்கு ஏசியும் தேவைப்படாது. அதேபோல அரசுப் பேருந்துலதான் போவேன். யாராவது ஸ்பான்சர் பண்ணினா மட்டும்தான் ஃபிளைட் டிராவல்.

சுற்றுலா தலங்கள்னா லோக்கல் பஸ் வசதி நிறைய இருக்கும். புதுசா ஒரு இடத்தை எக்ஸ் ப்ளோர் பண்ணப் போறேன்னா, வாடகைக்கு பைக் எடுத்துப்பேன். ஆட்டோ, டாக்ஸின்னு காசை அதிகமா செலவு பண்ண மாட்டேன். சில இடத்துல பைக்கைவிட ஆட்டோ செலவு கம்மியா இருக்கும். கம்ப்பேர் பண்ணி பார்த் துட்டு தேர்வு செய்வேன். போற இடத்துல என்ன உணவு கிடைக்குமோ அதைத்தான் சாப்பிடுவேன். அதுதான் ஃபிரெஷ்ஷாவும் கிடைக்கும். வயித்தையும் பதம் பார்க்காது. வட இந்தியாக்குப் போயிட்டு தோசை, இட்லி சாப்பிடணும்னா அதிக செலவாகத்தான் செய்யும். பயணிகள் விடுதில தங்கும்போது பெரும்பாலும் அங்கயே காலைக்கு பிரெட், முட்டை கிடைக்கும். லஞ்ச், டின்னருக்கு மட்டும்தான் வெளியில. என்னைப் பொறுத்த வரை கையில 5,000 ரூபாய் இருந்தா ‘கெட் செட் கோ’னு ஒருவாரம் தென்னிந்தியா ட்ரிப் கிளம்பிடுவேன்”.
போலாம் ரைட்!