வெயிலின் வெம்மையில் நாம் வெந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சுவிஸின் குளிர்தான் மன ஊஞ்சலில் மஞ்சம் போட்டு அமர்கிறது. அங்கு வசந்தம் (spring) ஆரம்பித்து விட்டாலே நமக்குப் பிடித்தமான இதமான குளிர் திரும்பி விடும். கோடை (summer) என்றால் இன்னும் உற்சாகம்தான். நம்மூரைப்போல, போட்டிருக்கும் சாதாரண ஆடையுடன் வெளியில் சென்று வரலாம். குளிருக்கான ஸ்வெட்டர், ஜாக்கட், க்ளவுஸ் என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏரிக்கரைகளில் அந்நாட்டு மக்கள் தஞ்சம் அடைவதைக் காணலாம். ஆல்ப்ஸின் பல மலைகளில், ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே எப்பொழுதும் ஸ்னோவை ரசிக்கலாம். பல மலைச்சிகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் இருந்தாலும், அதிகப் பிரபலம் அடைந்த சில இடங்களை அங்குள்ள மக்கள் தவிர்த்து விடுகிறார்கள். அதனை வெளிநாட்டுப் பயணிகள் நெரிசலின்றி ரசிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது, மிக ஆச்சரியமாக இருந்தது. அந்நாட்டில் வசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக மகிழ்வாக இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில், சுற்றுலாவுக்கு அடுத்தபடியாக சாக்லெட் தயாரிப்பும், வங்கித் தொழிலும் பிரபலம்.சாக்லெட்டின் உள்ளே ‘ரம்’ போன்ற மதுபானங்களை ஊற்றித் தயாரிப்பது இப்பொழுது அங்கு நடைமுறையாகி வருகிறது. பெரிய சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்களில், கூடவே ‘அவுட்லெட்’டும் உண்டு. அவர்கள் சாக்லெட்டைத் தரம் பிரித்து அடுக்கி வைத்திருப்பதையே இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவு அழகாக இருக்கும்.
சிறிய நாடு, குறைவான மக்கள் என்றாலும், அவர்கள் வாழும் வாழ்க்கை வெகு நிறைவானது. அடுத்தவர்களை மதிப்பது, சட்டங்களை மதித்து நடப்பது, எங்கும் எப்போதும் அமைதி காப்பது என்பதைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடைப்பிடிப்பதால் இந்த நிறைவு சாத்தியமாகிறது.
நமது நாட்டின் அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் தங்கள் கோடிக்கணக்கான பணத்தை, அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்தக் கட்டுரையும் சுவிஸ் வங்கி பற்றியதுதான். ஆனால், வித்தியாசமான, பயனுள்ள வங்கி!
சிறிய நாடு, குறைவான மக்கள் என்றாலும், அவர்கள் வாழும் வாழ்க்கை வெகு நிறைவானது. அடுத்தவர்களை மதிப்பது, சட்டங்களை மதித்து நடப்பது, எங்கும் எப்போதும் அமைதி காப்பது என்பதைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடைப்பிடிப்பதால் இந்த நிறைவு சாத்தியமாகிறது. அங்குள்ள வழக்கப்படி, குழந்தைகள் பெரியவர்களானதும் தாய், தந்தையைப் பிரிந்து, தனிவாழ்க்கை தொடங்கி விடுகிறார்கள். பிறந்த நாள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற முக்கிய தினங்களில் மட்டும் ஒன்று கூடி, அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் புற நகர்களில் வசிப்பதையே விரும்புகிறார்கள். அப்பொழுதுதான் அந்நாட்டின் இயற்கையை, உடலுக்கு உகந்த தட்ப வெப்பத்தை, முழுமையாக அனுபவிக்க முடியமென்பதால். நாங்கள் இருப்பதும் ஜூரிக்கின் புற நகரில்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇரண்டாவது மாடியிலுள்ள எங்கள் வீட்டு பால்கனிக்கு வந்தால், எதிரே தெருவும், அதனைத் தொடர்ந்து முக்கியச் சாலையும், பின் புறத்திலுள்ள மலைகளும் அழகு காட்டும். வீட்டின் எதிரே உள்ள கீழ் வீட்டில் சுமார் 80 வயதுள்ள மூதாட்டி, தனியாக வசிக்கிறார். நாங்கள் நடைப்பயிற்சிக்காகச் செல்கையில் அவரைப் பார்ப்பதுண்டு. சிரித்த முகத்துடன் வணக்கம் சொல்வார். வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது காரை அவரே ஓட்டியபடி வெளியில் சென்று வருவார். திரும்பும்போது வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வந்து, தனியாகவே வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். இதனை அடிக்கடி நானும் என் பேரனும் பார்ப்போம். எனவே, அவருக்கு ‘ஃபென்டாஸ்டிக் பாட்டி’ என்று பெயர் வைத்தோம். அவரும் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருப்பார். தினமும் தனது செல்ல நாயுடன் ’வாக்’ போவார். அடிக்கடி சந்திக்க நேரும்போதெல்லாம் சிரிப்பும் வணக்கமும் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படும். அவர் ஜெர்மனி மொழி பேசுபவர். ஆங்கிலத்தில் தடுமாறியே பேசுவார். என் மருமகளுக்கு ஜெர்மன் தெரியுமென்பதால் அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் நன்கு பேசிக்கொள்வார்கள். நமக்குத் தமிழையும் ஆங்கிலத்தையும் விட்டால் வேறு மொழி தெரியாதே!
நான்கு நாட்கள் பயணமாக இத்தாலி சென்று விட்டுத் திரும்பிய பிறகு, இரண்டு, மூன்று நாட்களாகப் பாட்டி கண்ணில் படவில்லை. அடுத்த நாள், கையில் கட்டுடன் பாட்டி தெரிந்தார். இந்த வயதில் கையில் ஃப்ராக்சரா? மனம், பாட்டிக்காக வருத்தமுற்றது. அன்று மாலையே, ஜெர்மன் தெரிந்த மருமகளுடன் சென்று, பாட்டிக்கு உதவி ஏதேனும் தேவையா என்று கேட்டோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, உள்ளிருந்து ஒரு பெண்மணி க்ளாசில் நீருடன் வந்து மாத்திரைகளை அவர் சாப்பிடக் கொடுத்தார். மாத்திரைகளை விழுங்கிய பிறகு, பாட்டி பேச ஆரம்பித்தார்.

வாரத்தில் மூன்று நாட்கள் அப்பெரியவரின் வீடு சென்று ஐந்தாறு மணி நேரம் அங்கிருந்து அப்பெரியவரைக் கவனித்துக் கொள்வாராம். வங்கிக் கணக்கில் அவர் பணிவிடை செய்த நேரங்கள் பதிவாகி விடுமாம். அது போலப் பல வருடங்களாகத் தொடர்ந்து செய்து வந்ததால் அவர் கணக்கில் நூற்றுக்கணக்கில் நேரம் சேர்ந்து விட்டதாம்.
முதலில் எங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர், வீட்டில் உதவிக்கு எப்படி பெண்மணி வந்தார் என்பதை விளக்கினார். அங்குள்ள ‘டைம் பேங்க்’ கில் தன் பெயரைப் பதிவுசெய்து கொண்ட அவர், இரண்டு தெருக்கள் தாண்டியுள்ள வயதான பெரியவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தாராம். வாரத்தில் மூன்று நாட்கள் அப்பெரியவரின் வீடு சென்று ஐந்தாறு மணி நேரம் அங்கிருந்து அப்பெரியவரைக் கவனித்துக் கொள்வாராம். வங்கிக் கணக்கில் அவர் பணிவிடை செய்த நேரங்கள் பதிவாகி விடுமாம். அது போலப் பல வருடங்களாகத் தொடர்ந்து செய்து வந்ததால் அவர் கணக்கில் நூற்றுக்கணக்கில் நேரம் சேர்ந்து விட்டதாம். இப்பொழுது கையில் அடிபட்டதும், வங்கிக்குத் தெரிவிக்க, அவர் கணக்கில் நிறைய மணி நேரங்கள் சேர்ந்திருந்ததால், அவருக்குப் பணி விடை செய்ய ஆட்களை அனுப்புகிறார்களாம். எனவே எந்தச் சிரமமும் இல்லையென்றும், இருப்பினும் நாங்கள் விசாரிக்க வந்ததே அவருக்குப் பெரும் திருப்தியைத் தந்துள்ளதாகவும் நெகிழ்ந்து கூறினார். அப்பொழுது அவருக்குப் பணிவிடை செய்ய வந்த பெண்மணி, அவர் அப்போதுதான் பதிவு செய்துள்ளதாகவும், பாட்டியைப்போல நிறைய மணி நேரங்கள் பணிவிடை செய்து தன் கணக்கை உயர்த்திக் கொள்ள விரும்புவதாகவும், அதுவே அவரின் பிற்காலத்திற்கு ஆதாரம் என்றும் தெரிவித்தார். எங்களுக்கு அவர்கள் போடும் கணக்கு ஆச்சரியமளித்தது.
பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, பாட்டியின் கார் மீண்டும் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வெளியில் செல்வதைப் பார்த்தோம். பாட்டி மீண்டும் பணிவிடையை ஆரம்பித்து, தன் கணக்கில் நேரத்தைக் கூட்ட ஆரம்பித்துள்ளது தெரிந்தது. அது நிச்சயமாக அவர் கடைசிக் காலத்தில் பேருதவியாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இறக்கும்போதாவது, நமக்கு வேண்டியவர்கள் மடியிலோ, அருகிலோ சாவதே ஆத்மாவை நிறைவு பெறச் செய்யும்.
சரி... நமது நாட்டுக்கு வருவோம். நம்மிடையே கூட்டுக் குடும்ப முறை இருந்து வந்ததால், இம்மாதிரியான நேர வங்கிகள் குறித்து யாரும் சிந்தித்ததுகூட இல்லை. வயதானவர்களை மகள், மகன்களோ, பேரன், பேத்திகளோ கவனித்துக் கரை சேர்ப்பார்கள். நமது நாட்டு வழக்கப்படி, கொல்லி போடுவது கடமையாகவும், கொல்லியை ஏற்றுக் கொள்பவர்கள் அடுத்த பிறவியிலும் சொந்தத்தைத் தொடர்வார்கள் என்றெல்லாம் கூறப்பட்டு, நாம் வளர்ந்துள்ளோம்.
ஆனால், சமீப காலமாக கூட்டுக் குடும்ப முறை மாறி வருகிறது. பழைய உறவுகளான பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி போன்றவையெல்லாம் குறைந்து வருகின்றன. இறக்கும்போதாவது, நமக்கு வேண்டியவர்கள் மடியிலோ, அருகிலோ சாவதே ஆத்மாவை நிறைவு பெறச் செய்யும்.

இருப்பினும் போகிற போக்கைப் பார்த்தால், நமது நாட்டிலும் ‘டைம் பாங்கு’கள், அதாவது ‘நேர வங்கிகள்’ வந்து விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும், 80 வயதைக் கடந்தவர்களும், தங்கள் பணியைத் தாங்களே செய்து கொள்வதும், தினசரி நடைப்பயிற்சி மேற்கொண்டு, தங்கள் ஆரோக்கியத்தைச் சீர் செய்து கொள்வதும், கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் டைம் வங்கி மூலம் பணிவிடை செய்து தங்கள் கணக்கில் நேரக்கணக்கைக் கூட்டிக் கொள்வதும் போன்றவற்றை, நாம் சுவிஸ் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.