Published:Updated:

`உலகின் கடைசி எல்லையைத் தொடுவதே கனவு!' -வேனில் நாயுடன் உலகம் சுற்றும் இளம்பெண்

`Sydney Ferbrache' - நாயுடன் உலகம் சுற்றும் இளம்பெண்
`Sydney Ferbrache' - நாயுடன் உலகம் சுற்றும் இளம்பெண்

காதலனைப் பிரிந்த சிட்னிக்கு, `வேனில் உலகம் சுற்றவேண்டும்' என்கிற கனவைத் தூக்கி எறியமுடியவில்லை.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த, சிட்னி ஃபெர்ப்ராச்சுக்கு 24 வயது. தனி ஒரு மனுஷியாக, தனது நாய் எலாவுடன் வேனில் அமெரிக்காவைச் சுற்றி முழுநேரமாகப் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பயணத்திற்குப் பின், சில சுவாரஸ்யமான விஷயங்கள் மறைந்திருக்கின்றன.

ஆழ்கடல் நடுவே சிட்டிகை உப்பாய் ஒரு மலையாளப் பயணம்! - வாசகர் பகிர்வு #MyVikatan 

உலகம் முழுவதும் சாலை வழியாக வேனில் பயணம் செய்ய வேண்டும் என்பது சிட்னி ஃபெர்ப்ராச்சின் ஆசை, கனவு எல்லாமே. இதை அவருடைய காதலனிடம் சொல்ல, அவரும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து Mercedes-Benz Sprinter வேன் வாங்கியிருக்கிறார்கள்.

View this post on Instagram

Playing on the new benches over a back table!! 😭🙏🏼 I went with two benches this time because I won’t need as much storage. The back slide-out table is mainly because a lot of free campsites don’t have picnic tables so now I can still have somewhere to work and eat outside no matter where I am. Behind me is the pocket door which is also awesome because I can lock it at night which will give me a little extra sense of safety (You can see it a little better in my story from yesterday) .. But the build is coming along day by day and it’s getting me super pumped to get back on the road and start this same but different adventure. ❤️🙏🏼

A post shared by Sydney Ferbrache (@divineontheroad) on

அதில் தங்குவதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொண்ட பிறகு செப்டம்பர் 2017-ல் சிட்னியில் கனவுப் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது. காலப்போக்கில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் வர, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் காதல் முறிந்திருக்கிறது.

வேனை, முன்னாள் காதலனிடமே கொடுத்துவிட்டு, 24,000 டாலர் செலவில் புதிதாக, Ford Transit van-ஐ வாங்கி, அதை லக்ஸூரியஸாக மாற்றிக்கொள்கிறார் சிட்னி. கனவுப் பயணத்திற்கு அனைத்தும் தயாரான பிறகு, அவர் கடைசியாக வாங்கியது கோல்டன் ரெட்ரிவர் பப்பியான எலாவைத்தான்.

இவர்கள் இருவரும் முதலில் பயணித்தது, அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க். அதன்பிறகு கனடாவில் உள்ள மொன்டானா, உட்டா, அரிசோனா, கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் கியூபெக் போன்ற 20 மாநிலங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள் சிட்னியும் எலாவும்.

தொடர்ந்து பயணிப்பதை இலக்காகக்கொண்டிருக்கும் இவர்களுக்கு உலகத்தின் கடைசி எல்லையைத் தொடுவதே கனவு. இவர்கள் இருவருக்காகவும், அவர்களுடைய இன்ஸ்டா பக்கங்களில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் குவிந்திருக்கிறார்கள்.

பயணத்தை ஆரம்பித்த ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மாதங்களில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிட்னி. பயணிக்கத் தேவைப்படும் பணத்திற்குத் தனது வலைதளத்தின் விளம்பரங்கள் மூலமும் மார்க்கெட்டிங் மற்றும் வெப் டிசைனிங் மூலமும் சம்பாதித்துக்கொள்கிறார். 

``தனது காதலனைத் தூக்கி எறிந்த பிறகு, சாலையில் ஒரு தனி பெண்ணாகப் பயணிப்பதில் பயம் எதுவும் இல்லை" என்பதை நிரூபிக்க விரும்புவதாகச் சொல்கிறார் சிட்னி ஃபெர்ப்ராச்.

அடுத்த கட்டுரைக்கு