Published:Updated:

பெங்களூரில் 3 அரசர்கள் பாதுகாத்த கோட்டை; எஞ்சியிருப்பது 5 சதவிகிதம், சென்று பார்த்தால் பல அதிசயம்!

பெங்களூர் கோட்டை.

இந்தக் கோட்டையின் அமைவிடம், பெங்களூரு பகுதியின் சில்லென்ற ‘கிளைமேட்’ போன்றவை எல்லாம் பிடித்துப்போன திப்புசுல்தான், பெங்களூரு கோட்டை பகுதிக்குள் தன் அரண்மனையையும் கட்டினார். தற்போது, இந்த அரண்மனை ‘திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

பெங்களூரில் 3 அரசர்கள் பாதுகாத்த கோட்டை; எஞ்சியிருப்பது 5 சதவிகிதம், சென்று பார்த்தால் பல அதிசயம்!

இந்தக் கோட்டையின் அமைவிடம், பெங்களூரு பகுதியின் சில்லென்ற ‘கிளைமேட்’ போன்றவை எல்லாம் பிடித்துப்போன திப்புசுல்தான், பெங்களூரு கோட்டை பகுதிக்குள் தன் அரண்மனையையும் கட்டினார். தற்போது, இந்த அரண்மனை ‘திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

Published:Updated:
பெங்களூர் கோட்டை.

ஜில்லென்ற கிளைமேட், எங்குப் பார்த்தாலும் வானுயர்ந்த கட்டடங்கள், பார்ப்பது எல்லாம் நவீனம் என வளர்ச்சியில் மிளிரும் பெங்களூரு நகரில், 480 ஆண்டுகள் கடந்தும் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது கெம்பே கெளவுடா கட்டிய பெங்களூரு கோட்டை. வெறும் 5 சதவிகிதமே எஞ்சியிருக்கும் இக்கோட்டை, சமகால கட்டமைப்புகளையும் விஞ்சுகிறது.

பெங்களூரு கோட்டை குறித்தும், கெம்பே கெளடா குறித்துத் தெரிந்துகொள்வோம் வாங்க… தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து, கர்நாடகா சென்ற மக்களில் முரசு ஒக்கலிகா என்பவரின் மகன்தான் நாதபிரபு ஹிரியா கெம்பே கெளவுடா. விஜயநகர பேரரசின் கீழ் கர்நாடக மாநிலம் ஏலஹங்கா பகுதியை ஆட்சி செய்த முரசு ஒக்கலிகாவுக்குப்பின், 1513–ம் ஆண்டு அப்பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினார் கெம்பே கெளவுடா.

கோட்டையின் ஒரு பகுதி.
கோட்டையின் ஒரு பகுதி.

வணிகத்துக்கான இடம் பெங்களூர்!

பெங்களூரு நகரின் சீதோஷ்ணம், வளங்களைக் கண்டு வியந்த கெம்பே கெளடா, தனது ஆட்சிக்கான தலைநகரை ஏலஹங்காவிலிருந்து பெங்களூருக்கு மாற்றினார். ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் பெங்களூரு பகுதியில் சில கோட்டைகள், பல கோயில்கள், நீர் சேமிப்புக்கான நீராதாரங்கள், வணிக இடங்கள் போன்றவற்றை அமைத்தார். அவரின் இந்த முயற்சிகள்தான், நாட்டின் முக்கிய நகரங்களுள் பெங்களூருக்குத் தனியிடம் பெற்றுத்தந்துள்ளது. இதனால்தான் இன்று ‘ஃபவுண்டர் ஆஃப் பெங்களூரு’ என்ற பெயரையும் பெற்றுள்ளார் கெம்பே கெளவுடா.

பெங்களூரை வணிக நகரமான உருவாக்க நினைத்தவர், தற்போது அனைவரும் அறிந்த மெஜஸ்டிக் பேருந்து நிலையம், கலாசி பாளையம் பகுதிக்கு, வணிகர்களை வரவழைத்து, வணிகத்துக்கான இடமாக மாற்றினார்.

பெங்களூர் கோட்டை
பெங்களூர் கோட்டை

பெங்களூர் கோட்டை

பலவகை பொருள்களின் வணிகம் நடந்ததால், இந்தப் பகுதியே பணம் கொழிக்கும் இடமாக மாறியது. இப்பகுதியைப் பாதுகாக்கவும், போர் வந்தால் எதிர்கொள்ளவும், வணிக பகுதியைச் சுற்றிலும், 2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு முதலில் பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள் கட்டினார். பின் சுற்றுச்சுவர்களுக்கு மையப்பகுதியில், 1537–ம் ஆண்டு மண்ணாலான கோட்டையை நிறுவினார். கோட்டைக்குள் தற்போது ஒரு விநாயகர் கோயில் உள்ளது. ஆனால், அது யாரால் கட்டப்பட்டது என்பது குறித்தான பதிவுகள் இதுவரை கிடைக்கவில்லை.

போர்கள் வந்தாலும் மிகப்பாதுகாப்பாக இருக்கக் கட்டப்பட்ட இக்கோட்டையில், டில்லி கேட் மற்றும் மைசூர் கேட் எனக் கோட்டைக்குள் நுழைய இரண்டு வழிகளும், 36 அடி உயரத்திலான உறுதியான மரக்கதவுகளும் உள்ளன. இது மட்டுமின்றி, கோட்டையைச் சுற்றிலும் உள்ள 2.5 சதுர கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர்களிலும் கதவுகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்திருந்தார்.

பெரிய கற்களால் கோட்டை
பெரிய கற்களால் கோட்டை
விஜயநகர பேரரசு வீழ்ந்த பின், 1761–ம் ஆண்டு பெங்களூரை ஆட்சி செய்த ஹைதர் அலி தலைமையிலான அரசு, மண்ணுக்குப் பதிலாகக் கருங்கற்களைக்கொண்டு கட்டி கோட்டையை மாற்றியமைத்தனர். அதன்பின், ஆட்சிசெய்த திப்புசுல்தானுக்கு, 1790 – 1792 வரையில் நடந்த மூன்றாம் மைசூர் போரில், இக்கோட்டை பெரும் பாதுகாப்பு இடமாக இருந்துள்ளது. மைசூர் போரில் சேதமடைந்த இக்கோட்டையை, 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் திப்பு சுல்தான் புனரமைத்து வலுவான ஒரு கோட்டையாக மாற்றியமைத்தார்.

பல போர்களைச் சந்தித்தது

இந்தக் கோட்டையின் அமைவிடம், பெங்களூரு பகுதியின் சில்லென்ற ‘கிளைமேட்’ போன்றவை எல்லாம் பிடித்துப்போன திப்புசுல்தான், பெங்களூரு கோட்டை பகுதிக்குள் தன் அரண்மனையையும் கட்டினார். தற்போது, இந்த அரண்மனை ‘திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

பின் ஆங்கிலேயர்களின் தொடர் படையெடுப்பின் காரணமாக, பல போர்களைக் கண்ட கோட்டையின் சுற்றுச்சுவர் மெல்ல மெல்ல அழிந்தது. பின், 18ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் கோட்டையை மட்டும் விட்டு விட்டு, நகரை விரிவுபடுத்தவும், போக்குவரத்துக்காகவும் சுற்றுச்சுவர்களை முழுவதுமாக இடித்து அகற்றினர். ஆங்கிலேயர்கள் பல ஆண்டுகளாக இக்கோட்டையில் ஆயுதங்கள் மற்றும் வீரர்களைத் தங்க வைத்ததுடன், கோட்டையிலுள்ள சிறைகளையும் பயன்படுத்தி வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வரையப்பட்டது
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வரையப்பட்டது
Special Arrangement

கெம்பே கெளவுடா, ஹைதர்அலி மற்றும் திப்புசுல்தான் என மூன்று அரசர்கள் நிர்வகித்த இக்கோட்டையில் தற்போது, 5 – 6 சதவிகிதம் மட்டுமே எஞ்சியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோட்டை சிறிய அளவிலிருந்தாலும், எஞ்சியிருக்கும் பகுதிகளே பிரமாண்டமாக இருக்கின்றன. ‘ஹே எப்புட்றா… இவ்ளோ பெரிய கல்லை எல்லாம் தூக்கிட்டு போயி கோட்டை கட்டியிருப்பாங்க’ என நினைக்கும் வகையில் அதிசயிக்க வைக்கிறது. கோட்டையின் சுவர்களில் பல சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கோட்டையின் நுழைவு வாயில், சுவற்றில் சிவலிங்கம்.
கோட்டையின் நுழைவு வாயில், சுவற்றில் சிவலிங்கம்.

முன்பு நாளொன்றுக்கு, ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் பார்வையிட்டுச்சென்ற நிலையில், சமீபத்தில் கெம்பே கெளவுடாவுக்கு கர்நாடக அரசு சிலை வைத்தபின், அவர் குறித்தான தேடலும், அவரின் கோட்டையைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், தற்போது கோட்டைக்குத் தினமும், 4,000 –7,000 பேர் இலவசமாகப் பார்வையிட்டுச் செல்கின்றனர். கெம்பே கவுடா தலைமையிலான செழுமையான ஆட்சியின் வரலாற்றைக் கண் முன் நிறுத்தும் இக்கோட்டை, பெங்களூரு வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானது!