கட்டுரைகள்
Published:Updated:

`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...

`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...
பிரீமியம் ஸ்டோரி
News
`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...

பயணம்| படங்கள்: நா.ராஜமுருகன்

``அழகும் வசீகரமும் சாகசமும் நிறைந்த ஓர் அற்புதமான உலகில் நாம் வாழ்கிறோம். கண்களைத் திறந்து தேடிப் பாருங்கள், கிடைக்கும் சாகசங்களுக்கு முடிவே இல்லை'' என்று ஜவஹர்லால் நேரு ஒருசமயம் கூறியிருந்தார். இந்த வார்த்தைகளுக்கு நிகரான மாநிலமாக லடாக் மண்ணைப் பார்க்கிறேன். வெறும் பைக் ரைடிற்கு மட்டுமே என்றில்லாமல் இன்னும் பல அட்வெஞ்சர்கள் கொட்டிக்கிடக்கின்றன லடாக்கில். அதில் ஒன்றுதான் சாதர் ட்ரெக் (chadar trek).

லடாக்கைச் சேர்ந்த எங்கள் நண்பர் ஸ்டாண்சின், இந்த சாதர் ட்ரெக் பற்றி ஒரு தடவை சிலாகித்துச் சொன்னார். சொல்லியே சில வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், அவர் சொன்ன அந்த நொடியில் ஓர் எண்ணம் விதையாக ஆழ்மனதில் ஊன்றிவிட்டது. ‘எப்படியாவது இந்த சாதர் ட்ரெகைப் பார்த்துவிட வேண்டும்' என்ற அந்த எண்ணம், 2020-ல் முதல் முயற்சியாக முளைத்து, 2023-ல் கனி தரும் மரமாக நிறைவேறியது.

`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...
`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...

இதில் எங்கள் அனுபவத்தை அங்குலம் அங்குலமாக அசைபோடுவதற்கு முன், `சாதர் ட்ரெக்'கைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

சிந்து நதியின் முக்கியமான துணைநதி சன்ஸ்கர் (zanskar) நதி. சன்ஸ்கர் நதி கிளை நதியாக இருந்தாலும் சிந்து நதியின் ஆற்றலுக்கு சற்றும் குறையாத ஆற்றலைக் கொண்டது. இந்த சன்ஸ்கர் நதி பாய்ந்தோடும் பள்ளத்தாக்கை சன்ஸ்கர் பள்ளத்தாக்கு (Zanskar valley) என்கிறார்கள். கார்கில் முதல் லடாக்கில் உள்ள லே (leh), நிமோ (NIMO) வரை நீள்கிறது சன்ஸ்கர். இங்கு பல்வேறு கிராமங்கள் உள்ளன. அந்த கிராம மக்களை, ‘சன்ஸ்கரி' என்று அழைக்கிறார்கள்.

`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...
`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...

சன்ஸ்கர் மக்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை உண்டு. அவர்களுக்கு குளிர்காலம் தவிர மற்ற நாள்களில் போக்குவரத்திற்கு எந்த சிரமமும் இல்லை. பனிக்காலம் வந்துவிட்டால் அனைத்து வழிகளும் பனிப்பொழிவால் அடைபட்டுவிடும். இந்த நேரத்தில் சன்ஸ்கரில் நிலவும் தட்பவெட்பம், மைனஸ் 35 டிகிரி வரை செல்லும்! ஆகையால் சன்ஸ்கர் நதி முற்றிலுமாக உறைந்துவிடும். இந்த நிலையை சன்ஸ்கரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆம், சன்ஸ்கர் நதி உறைந்தவுடன் அதன்மீது நடந்தே லே நகரை வந்தடைகிறார்கள். சொல்லப்போனால்... சன்ஸ்கர் மக்களுக்குக் குளிர்கால சாலையாக இன்னமும் இருப்பது இந்த உறைந்த சன்ஸ்கர் நதிதான். சிலர், குளிர்காலம் வரும் வரை காத்திருந்து நதி உறைந்தவுடன் நதியின் மூலமாகவே லே நகரை வந்தடைகிறார்கள். சிலர், கோடைக் காலம் முழுக்க லேவில் தங்கிவிட்டு, உறைபனி காலத்தில் சன்ஸ்கரில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத் திரும்புகிறார்கள். வியாபாரம் செய்பவர்கள் மட்டுமல்லாமல், படிப்பதற்கு வரும் மாணவர்கள்கூட இந்த வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக இங்கே நடந்துவரும் நிகழ்வாகும்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட சில வெளிநாட்டவர்கள், சன்ஸ்கர் மக்களின் உதவியுடன் ஒரு த்ரில்லிற்காக அவ்வப்போது பயணிப்பதுண்டு. கடந்த சில காலமாக இந்திய மக்களிடமும் இது பிரபலமாகத் தொடங்கியதும், லடாக் அரசாங்கமே உள்ளூர் மக்களுடன் சேர்ந்து `சாதர் ட்ரெக்' என்னும் பெயரில் மூன்று நாள் ட்ரெக்கிங்காக இதை ஏற்பாடு செய்கிறது. இவையெல்லாம் கேள்விப்பட்டதிலிருந்து ஒரே ஆர்வம்... ஒருவழியாக தகைந்து வந்தது.

`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...
`சாதர் ட்ரெக்'கில் ஒரு சாகசப் பயணம்...

பொதுவாக சாதர் ட்ரெக் ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. ஆரம்பிக்கும் தேதி மற்றும் முடியும் தேதி மட்டும் அங்கு நிலவும் தட்பவெட்பச் சூழ்நிலைக்கேற்ப அறிவிக்கிறார்கள். சாதர் ட்ரெக் செல்பவர்கள் லே நகரில் இறங்கிய உடன் இரண்டு நாள் ஓய்வெடுக்க வேண்டும், இந்த இரண்டு நாள் நீங்கள் அந்தத் தட்ப வெட்பச் சூழ்நிலைக்குப் பழக வேண்டும் என்பதற்காக. மூன்றாம் நாள் உங்கள் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் கொரோனா பரிசோதனை என ஒரு `மினி மெடிக்கல் செக்கப்'பையே முடித்துவிடுகிறார்கள். இவை அனைத்தும் ஓகே என்றால், நான்காம் நாள் சாதர் ட்ரெக் செல்ல ஆரம்பிக்கலாம். அப்படியில்லாமல் நீங்கள் ரிஜெக்ட் செய்யப்பட்டால், அப்படியே திரும்பி வீட்டுக்குப் போக வேண்டியதுதான்!

சரி, ஆரம்பிக்கலாமா?