Published:Updated:

திருச்சி ஹேங்கவுட்: பிரமிக்க வைக்கும் கட்டடக் கலை;ஆச்சர்யப்படுத்தும் வரலாறு! கங்கை கொண்ட சோழபுரம்!

கங்கை கொண்ட சோழபுரம்

வரலாற்றின் மீதும் கலைமீதும் ஆர்வமுடையவர்கள் தவறவிடக்கூடாத இடம் கங்கை கொண்ட சோழபுரம்.

திருச்சி ஹேங்கவுட்: பிரமிக்க வைக்கும் கட்டடக் கலை;ஆச்சர்யப்படுத்தும் வரலாறு! கங்கை கொண்ட சோழபுரம்!

வரலாற்றின் மீதும் கலைமீதும் ஆர்வமுடையவர்கள் தவறவிடக்கூடாத இடம் கங்கை கொண்ட சோழபுரம்.

Published:Updated:
கங்கை கொண்ட சோழபுரம்

சோழர்கள்... இந்தப் பேரரசின் பெயரை உச்சரிக்கும்போதே பெருமிதமும், ஆச்சரியமும் நம்முள் உருவாகும். அவர்களின் வரலாறு, கட்டடக் கலை, கலைகளுக்கு அவர்கள் கொடுத்த மரியாதை என, நம் கண்முன்னே சோழப் பேரரசைப் பற்றி நாம் அறிந்த தகவல்கள் காட்சிகளாக விரியும்.

அழகு பொக்கிஷம்... கங்கை கொண்ட சோழபுரம்
அழகு பொக்கிஷம்... கங்கை கொண்ட சோழபுரம்

பல சிறப்பு மிக்க சோழப் பேரரசின் குறிப்பிடத்தக்க அரசர்களான ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும்தான். கடல் கடந்து வாணிபம், போரினால் கைப்பற்றிய பகுதிகள் என இவர்களின் ஆளுமையின்கீழ் இருந்த பிரதேசங்கள் ஏராளம். ராஜேந்திர சோழன் ஈழத்திலும், சாளுக்கியத் தேசங்களிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், கங்கையையும் அதனின் அரசர்களாக இருந்த பல பேரரசையும் வென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் காரணமாக 'கங்கை கொண்டான்' என்ற சிறப்புப்பெயரைக் கொண்ட அவர், தந்தை ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயிலைப் போன்ற ஒரு கோயிலைக் கட்ட நினைத்து உருவாக்கியதுதான் கங்கை கொண்ட சோழீசுவரர் கோயில்.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

அங்கே கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுர நகரும் இன்றைக்கும் வரலாற்று ஆய்வாளர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு பேரதிசயம். அப்படியான அதிசயத்தைக் காணக் கிளம்பினோம்.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

திருச்சியிலிருந்து 90 கிலோமீட்டர். அரியலூரிலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கங்கை கொண்ட சோழபுரம். எனது பைக்கில் திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் அங்கு சென்றுவிட்டோம். லேசாகத் தூறிய மழையும், இடையிடையே குடித்த டீயும் நம்மை ஆசுவாசமாக அமைந்தது பயணம். கோயிலுக்கு சில தூரங்களுக்கு முன்பே கோபுரங்கள் தெரிய ஆரம்பித்தது.

அருகே நெருங்க நெருங்க அதன் பிரமாண்டம் நம்மை ஆச்சரியப்படுத்தியது. கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு எனத் தனியாக பார்க்கிங் வசதி உண்டு. அதில் வாகனத்தை நிறுத்திட்டு கங்கை கொண்ட சோழீசுவரர் கோயிலின் உள்ளே நுழைந்தோம். நுழைவுவாயிலின் இருபுறமும் புல் நிறைந்த பகுதியைக் கடந்து செல்ல, முழுவதுதாக கட்டி முடிக்கப்படாத சுவரே இவ்வளவு பிரமாண்டமா என வியக்க வைத்தது அதன் கலைநுட்பம்.

ராஜேந்திர சோழன்
ராஜேந்திர சோழன்

சிற்பங்களும், கோபுரமும் நம்மை வரவேற்க, அதிசயித்துப் போய் உள்ளே சென்றோம், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலைப் போன்றே மிகுந்த சிரத்தையும் அழகுணர்ச்சியோடும் கட்டப்பெற்ற இந்த கோயில் என்பது புரிந்தது. இங்கு அமைக்கப்பட்ட சிவலிங்கம்தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம். சுண்ணாம்புக்கல்லில் செதுக்கப்பட்ட நந்தியும் மிகப்பெரிய நந்திதான். தொடர்ந்து பிரமித்துக்கொண்டே லிங்கத்தைத் தரிசித்துவிட்டு வெளியில் வந்து பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தோம்.

நண்பர்களும், குடும்பமும் என அங்கிருந்த புல்வெளி முழுக்க நிறைந்திருந்தனர். நாமும் ஓர் மர நிழலில் அமர்ந்தோம். அங்கிருந்து பார்த்தபோது கோபுரமும், அதன் சுற்றுப் பிரகாரமும் நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டிருந்த காட்சி ஆச்சர்யப்படுத்தியது.

கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்

கலைக் கல்லூரி மாணவர்கள் அருகே உட்கார்ந்து கோயிலின் அந்த காட்சியை ஓவியங்களாக வரைந்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின்பு, குழந்தை வடிவ துர்க்கை, கங்கையிலிருந்து தலையால் சுமந்து வந்த நீரை ஊற்றி வைத்த இடமான சிம்மக் கிணறு, சுற்றவே முடியாத நவரகிரங்கள், சிறியதும் பெரியதுமான சிற்பங்கள் எனக் கொட்டிக்கிடக்கும் கங்கை கொண்ட சோழீசுவரர் கோயிலை முழுவதுமாக சுற்றி முடித்தோம்.

நண்பர்களுடன் கோயிலுக்கு வந்திருந்த பைரவியிடம் பேசினோம், "எங்க வீட்ல பெரும்பாலும் ப்ரெண்ட்ஸ்கூட வெளிய போறதுனாலே இந்த கோயிலுக்குதான் அனுப்புவாங்க. இங்க வர்றதுக்கு எங்களுக்கே ரொம்ப பிடிக்கும். பக்கத்துல அரியலூர்தான் எங்க ஊருங்கிறனால அடிக்கடி இங்க வந்துடுவோம். இங்க வந்தாலே மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

இந்த தடவை கிளைமேட்டும் ரொம்ப சூப்பரா இருக்கறதுனால பிரெண்ட்ஸ்கூட ரொம்ப நல்லாருக்கு. முக்கியமா நாங்க எல்லாருமே ஹிஸ்டரி மேல ஆர்வமா இருக்குறவங்க. அதனால இந்த கோயிலுக்கு சின்ன வயசுல அப்பா, அம்மா கூட வந்தப்பவே இதை பாத்து பிரம்மிச்சி நின்னேன். இப்போதும் அந்த பிரமிப்பு அப்படியே தொடருது அதுதான் இந்த கோயிலோட ஸ்பெஷல். முக்கியமா சிவராத்திரிக்கு விடிய விடிய இங்க வந்து தூங்காம, முழிச்சிருந்து, பூஜைல கலந்துபோம்" என தனது அனுபவத்தை ஆனந்தத்துடன் பகிர்ந்தார்.

கோயிலிலிருந்து வெளிவந்த நாம், தொடர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். அகழ்வாராய்ச்சிகள் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திலும், அதன் அருகிலும் சோழர்கால பொருட்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றனர். அவற்றை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

இதன் முழு வரலாற்றையும், கலை நேர்த்தியையும் நம்மால் உள்வாங்கிக் கொள்ள ஒருநாள் போதாது. ஆம் அதன் பிரமிப்பு, அதன் நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி என கங்கை கொண்ட சோழபுரம் ஏற்படுத்தும் அனுபவம் அளப்பரியது.