Published:Updated:

திருச்சி ஊர்ப் பெருமை: பழைமை வாய்ந்த கோயில்கள், கடைவீதிகள்... உன்னதமான உறையூரின் சிறப்புகள்!

திருச்சி மலைக்கோட்டை

தமிழ்நாட்டிற்கு எப்படித் திருச்சி முக்கியமோ அதுபோல திருச்சியின் மையப்பகுதியாக இருக்கும் உறையூரும், திருச்சிக்கு மிகவும் முக்கியமானது.

திருச்சி ஊர்ப் பெருமை: பழைமை வாய்ந்த கோயில்கள், கடைவீதிகள்... உன்னதமான உறையூரின் சிறப்புகள்!

தமிழ்நாட்டிற்கு எப்படித் திருச்சி முக்கியமோ அதுபோல திருச்சியின் மையப்பகுதியாக இருக்கும் உறையூரும், திருச்சிக்கு மிகவும் முக்கியமானது.

Published:Updated:
திருச்சி மலைக்கோட்டை

திருச்சியின் பெருமைகளைப் பற்றிக் கூறுகையில், ’உறையூர்’ முக்கியமான இடத்தைப் பிடித்துவிடும். அந்த அளவிற்கு வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த உறையூரில், சமகாலத்திலும் பலருக்கும் பலவற்றைக் கூறி நிற்கும் இடமாக உள்ளது. கூடவே ஆன்மிகவாதிகளுக்கு ஏற்ற இடமாகவும், கடைவீதிகள், மார்க்கெட்கள்... என மக்கள் அதிகமாகச் செல்லும் இடமாகவும் உள்ளது உறையூர். எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கும் உறையூருக்கு ஒரு விசிட் அடித்தோம்.

திருச்சி
திருச்சி

தமிழ்நாட்டின் வரலாற்றில், பெரு நகரங்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருச்சிக்கு உண்டு. ஆம், எந்த மதச் சண்டையும் சாதிக் கலவரமும் நடக்காத தமிழ்நாட்டின் ஒரே பெருநகரம் திருச்சிதான் என்கிறார்கள். அமைதிப் பூங்காக்களில் வெடிச்சத்தமும் அரிவாள் வீச்சும் சாதியின் உரசலால் மதத்தின் கைகலப்பால் நடந்தது உண்டு. திருச்சியில் "ஆயிரம் உண்டு இங்குச் சாதி. அதனால் என்ன, அமைதியாய் இருப்பேன்" என்று சொல்லும் ஊர் என்கிற பெருமையைத் தாங்கி நிற்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் கிட்டத்தட்ட ஒரே தொலைவில், திருச்சி மாநகரின் மையத்தில் உள்ளது உறையூர்.

உறையூர்
உறையூர்

பல சரித்திரங்கள், பல்வேறு இலக்கியங்களில் இடம்பிடித்த மகத்தான இடத்தைப் பிடித்த உறையூரின் வரலாற்றைப் பார்த்து விடுவோம். முற்கால சோழர்கள் காலத்தில் மாபெரும் தலைநகராக இருந்த உறையூர், அப்போது ’உறந்தை’, ’ கோழியூர்’ எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டது. திருச்சி மாநகரில் உறையூர் பகுதி தற்போது சிறிய ஒரு ஏரியாவாக இருந்தாலும்,

உறையூர்
உறையூர்

முற்காலச் சோழர்களின் காலத்தில் பெரிய நகராக விளங்கியது. உறையூர் நகரக் கடைவீதிக்குள் நுழைந்தோம். மழைக் காலம் என்பதால், லேசாக மழை பெய்து கொண்டே இருந்தாலும் குடையுடனான மக்களின் கூட்டமும் அதிகமாகவே இருந்தது.

கடைவீதி முழுவதும், காய்கறிகள், துணிக் கடைகள், எண்ணெய் மில்கள், உணவகங்கள் என மக்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் இடமாக இருப்பதால், வாங்குவதற்கு, சுற்றிப் பார்ப்பதற்கு என எப்போதும் ஏதாவது இருப்பதால் தொடர்ந்து கூட்ட நெரிசலில் இந்த இடம் தத்தளித்துக் கொண்டே இருக்கிறது.

திருச்சி ஊர்ப்பெருமை
திருச்சி ஊர்ப்பெருமை

இந்தக் கடைவீதியில் பொருள்கள் மட்டுமா கிடைக்கும் என்றால் அதுதான் இல்லை. நாம் தேடி வந்த கோழியூருக்கான பதிலாக இருக்கும் புகழ்பெற்ற, பல சிறப்புகள் வாய்ந்த ’பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலும்’ இங்குதான் உள்ளது. உறையூரை ஆண்ட மன்னர் யானையில் நகர்வலம் வந்தபோது, மதம் பிடித்த யானையை ஒரு கோழி அடக்கியதாகக் கூறப்படுவதால்தான் ’கோழியூர்’ என அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அது தொடர்பான புராணக்கதையின் சிற்பமும், சைக்கிள் ஓட்டும் மனிதர் சிற்பமும் எனச் சிற்பங்களின் வேலைப்பாட்டுடன் அமைந்த அக்கோயில், காவேரிக் கரையில் திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

உறையூர் சாலைகள்
உறையூர் சாலைகள்

அங்குத் தரிசனம் முடித்து விட்டுக் கிளம்பினால் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ’கமலவல்லி நாச்சியார் கோயில்’, மேற்கூரையே இல்லாத நின்ற கோலத்தில் உயரமான சிலை அம்சத்துடன் கூடிய ’வெட்காளியம்மன் கோயில்’ என உறையூரைச் சுற்றி இருக்கும் கோயில்கள் பல. அதைக் காண வரும் மக்கள்களும் ஏராளம். தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் சுற்றினாலும், அந்த நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க உறையூரில் சிறப்பான விஷயங்கள் பல உள்ளன.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

திருச்சி எப்படித் தமிழ்நாட்டின் மையப்பகுதியோ, எப்படி அது தமிழ்நாட்டிற்கு முக்கியமோ அதுபோல திருச்சியின் மையப்பகுதியாக இருக்கும் உறையூரும், திருச்சிக்கு மிகவும் முக்கியமானது. திருச்சி வரும் மக்கள், ஆன்மிக அன்பர்கள்... உன்னதமான உறையூரை மறந்து விடாதீர்கள்.