Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: பொழுதுபோக பொன்னணியாறு அணை... ஆனால், இந்தப் பிரச்னையை அரசு கவனிக்குமா?

பொன்னணியாறு

வாழ்க்கையில நாம் அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறான சூழ்நிலையில் மன நிம்மதி பெறுவதற்கு பொன்னணியாறு சென்று வரலாம்.

திருச்சி ஊர்ப்பெருமை: பொழுதுபோக பொன்னணியாறு அணை... ஆனால், இந்தப் பிரச்னையை அரசு கவனிக்குமா?

வாழ்க்கையில நாம் அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறான சூழ்நிலையில் மன நிம்மதி பெறுவதற்கு பொன்னணியாறு சென்று வரலாம்.

Published:Updated:
பொன்னணியாறு
திருச்சியைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு முக்கொம்பு, கல்லணை போன்ற அணையைப் பற்றித் தெரிந்த அளவிற்கு பொன்னணியாறு அணையைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு மலைகளுக்கு இடையில், இயற்கையின் புடைசூழ மிகவும் அமைதியுடன், ஒய்யாரமாக அமைந்துள்ளது இந்த பொன்னணியாறு அணை.
பொன்னணியாறு
பொன்னணியாறு

திருச்சியிலிருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணப்பாறையின் அருகே அமைந்துள்ளது. பராமரிப்பு சரிவர இல்லையென்றாலும் மனத்திற்கு ஏற்ற ரம்மியமான இடம் எனச் சுற்றுலாப் பயணிகள் புகழ்ந்து பேச, அணையை நோக்கிக் கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செல்லும் வழியெல்லாம் வெயில் நம் மேல் விழாமல் இருக்க இயற்கை அமைத்துக் கொடுத்த குடையைப் போல் கருமேகங்கள் நம்மைச் சூழ்ந்துகொள்ள, முற்பகல் 11 மணியளவில் அணையை அடைந்தோம். மணப்பாறையைத் தாண்டியதிலிருந்து வாகனத்தின் இரைச்சல்கள் எதுவும் நம்மால் கேட்க முடிவதில்லை.

அணை
அணை

ஆரவாரமற்ற சாலையின் நடுவே நாம் செல்லும்போதே நமது மனம் சந்தோஷத்தில் துள்ள ஆரம்பித்தது. கடவூர் தாலுகாவில் பூஞ்சோலை என்னும் ஊரின் வனப்பகுதியில் உள்ள செம்மலை, பெருமாள் மலைகளுக்கு இடையில், தும்பச்சி, மாமுண்டி, அறியாறு போன்ற ஆறுகளில் வெள்ளக்காலத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கைத் தடுக்க 1975-ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது.

இங்கிருந்து குடமுருட்டி ஆறாக மாறி காவேரியில் கலக்கிறது. கிட்டத்தட்ட 3,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கு இந்த அணையின் நீர் பயன் தருகிறது. கூடவே பல ஏரிகளுக்கும், குளங்களுக்கும் இந்த அணையின் நீரே முக்கிய ஆதாரமாக உள்ளது. தொடர்ந்து பயன்தரும் இந்த அணையைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு அணையின் ஒரு புறத்தில் பூங்காவை அமைத்துள்ளது.

அணை
அணை

நாம் வண்டியை ஒட்டிச் சென்று நிறுத்திய நேரத்தில் லேசாக மழைத் தூர ஆரம்பித்திருந்தது. மண்வாசனை நம் மனதை மகிழ்ச்சியாக்க அந்த மகிழ்ச்சியின் ஊடே அணையைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். காட்டில் உள்ள பறவைகளின் ரீங்காரமும், மலைகளின் இடையே அணையின் அமைப்பும் நாம் இருந்த சூழலை ஏகாந்தமாக்க, நண்பர்களுடன் இணைந்து அணையை முழுதும் சுற்றி முடித்தோம்.

நீர் குறைந்தளவே இருந்தாலும், சூழ்நிலையும், அமைப்பும், நண்பர்களுடன் ஒரு நாளைக் கழிப்பதற்கான அத்தனை அம்சங்களுடன் இருந்த இந்த இடத்தைப் பார்க்கையில் மனது லேசாவதை உணர முடிந்தது.

அணை
அணை

பலர் சிறுவர்கள், சிறுமிகள் எனக் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அமைதியும், சந்தோஷமும் ஒருசேரக் கிடைக்கப்பெற்ற அந்தக் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க நமக்கும் பொறாமை எட்டிப் பார்க்க, நாமும் குழந்தைகளாகி நண்பர்களுடன் இணைந்து பூங்காவில் விளையாட ஆரம்பித்தோம். களைப்பின் சுவடே தெரியாமல் இருக்கும் அளவிற்குச் சூழ்நிலை நம்மை வசீகரித்திருந்தது. அங்கே பெரிதாக எந்தக் கடைகளும் இல்லாததால் வீட்டிலிருந்தே பலரும் உணவு எடுத்து வந்திருந்தனர்.

வாழ்க்கையில நாம் அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறான சூழ்நிலையில் மன நிம்மதி பெறுவதற்கு பொன்னணியாறு சென்று வரலாம். மனது மட்டுமல்ல சுத்தமான மூலிகைக் காற்றால் உடம்பும் ரிலாக்ஸாக இருக்கும்.

பூங்கா
பூங்கா

பூங்காவில் குதுகலத்துடன் விளையாடிய குழந்தைகளை அழைத்து வந்திருந்த கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். "பக்கத்துல இருக்குற வையம்பட்டிதான் என்னோட ஊரு. எங்க காலத்துலயெல்லாம், என்னோட ஊரைச் சுத்தி பெருசா எதுவும் இருக்காது. இப்போ இந்த அணை கட்டுன பிறகுதான் எங்களுக்குன்னு ஒரே ரிலாக்ஸ் ஸ்பாட் இருக்குது.

பூங்கா
பூங்கா

அதுவும் ரொம்ப இயற்கையா, எந்த மாசும், வாகன இரைச்சலும் இல்லாம குடும்பத்தோட வந்தா நல்ல என்ஜாய் பண்ற மாதிரியான ரொம்பவே அற்புதமான இடம்.

நாங்க எங்கேயாவது வெளில போகணும்னு நினைச்சாலே பொதுவா செலக்ட் பண்ற இடத்துல இந்த பொன்னணியாறு டேமும் முக்கியமானதா இருக்கும். இங்க வந்தா பெருசா எந்தச் செலவும் இருக்காது. ஆனா இயற்கையா, சந்தோசமா, சுத்தமான காத்தை சுவாசிக்கலாம்" என சிம்பிளாக முடித்தார்.

அணை
அணை

ரொம்பவே இயற்கை அழகுடன், அமைதியாக, பசுமையாக வருகிறவர்களைச் சந்தோஷப்படுத்தி அனுப்பும், இந்தப் பொன்னணியாறு அணையில் பல பகுதிகள் சிதிலமடைந்தும், ஆணை தூர்வாரப் படாமலும் பயன்பாடற்று இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், பூங்காவும் சரியாகப் பராமரிக்கப்படாமலே உள்ளது. அதிகாரிகள் இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் திருச்சியில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்தப் பொன்னணியாறு பலரின் குறிப்புகளில் அடங்கிவிடும்.