Published:Updated:

வெளிநாடுகளில் எத்தனை வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன? |Doubt of common man

Doubt of common man

இத்தனை வகைகள் இருந்தாலும் இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிட்ட வகைகள் மட்டுமே.

Published:Updated:

வெளிநாடுகளில் எத்தனை வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன? |Doubt of common man

இத்தனை வகைகள் இருந்தாலும் இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிட்ட வகைகள் மட்டுமே.

Doubt of common man

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் வாசகர் ஒருவர்," வெளிநாடுகளில் எத்தனை வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன? " என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கான பதில் இங்கே.

Doubt of common man
Doubt of common man

வெளிநாடு செல்வதற்கு அடிப்படையாக, அந்த நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதியாக விசா செயல்படுகிறது. எந்த நாட்டிற்கு நாம் செல்கிறோமோ அந்த நாட்டின் சார்பில் நமக்கான விசா வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் விசாக்களில் எத்தனை வகைகள் உள்ளன என்பது குறித்து வெளிநாட்டு கல்வி ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் விளக்குகிறார்.

"விசா வழங்கும் முறையில் ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றது போல மாற்றங்கள் இருக்கும். அதேபோல விசா வகைகளிலும் நாடுகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். மாணவர் விசா (Student visa), வியாபார விசா(Business visa), சுற்றுலா விசா(Tourist visa), மாணவ பார்வையாளர் விசா (Student visitor visa), ஸ்போர்ட்ஸ் விசா(Sports visa), பொழுதுபோக்கு விசா (Entertainment visa) என விசாக்களில் பல வகை உண்டு. இத்தனை வகைகள் இருந்தாலும் இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிட்ட வகைகள் மட்டுமே. சுற்றுலா விசா,மாணவர் விசா மற்றும் வியாபார விசா ஆகியவையே அவை.

Visa
Visa

இது தவிர்த்து வேறு சில தேவைகளுக்கான விசாக்களும் உள்ளன. விளையாட்டு ரீதியாக வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் விசா பயன்படுத்தப்படும். பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு, அதாவது சினிமா தொடர்பான நிகழ்வுகளுக்காக உபயோகப்படுவது பொழுதுபோக்கு விசா. மாணவ பார்வையாளர் விசா என்ற ஒருவகை உள்ளது. இது குறுகிய காலத்திற்கு பயன்படுத்தபடும் ஒன்று. ஒரு செமஸ்டர் காலத்திற்கு மட்டும் வெளிநாடு செல்ல வேண்டிய சூழலில் இது பயன்படும்.

Company transfer visa என்று ஒரு விசா ஒருவர் பணிபுரியும் கம்பெனி மூலமாக வெளிநாட்டில் இருக்கும் கம்பெனிக்கு வேலை ரீதியாக செல்லும்போது பயன்படுத்தப்படும். இதுதவிர High skill visa என ஒருவகை உண்டு. Dependence visa என்ற வகையில், வெளிநாடுகளில் பணிபுரியும் நபர் அவரை சார்ந்துள்ள குடும்பத்தை இந்த விசா மூலம் அழைத்து செல்லலாம்.Family settlement visa வை உபயோகித்து வெளிநாட்டில் குடியுரிமை வாங்கிய ஒருவர் தன் குடும்பத்தையும் அழைத்து செல்ல முடியும். முதலிலேயே கூறியது போல பொதுவாக இத்தனை வகை விசாக்கள் இருந்தாலும் அது நாம் செல்லும் நாட்டை பொறுத்து மாறுபடும் " என கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!