பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

வின்டேஜ் பைக்குகளைப் பாதுகாக்க… 1964 மாடல் ஸ்கூட்டரில்… இந்தியா முழுக்கப் பயணம்!

லாம்ப்ரெட்டா
பிரீமியம் ஸ்டோரி
News
லாம்ப்ரெட்டா

லாம்ப்ரெட்டாவில்தான் இந்தியா முழுக்க... சுமார் 27 மாநிலங்கள்… 12,000 கிமீ–க்கு மேல்… 120 நாட்கள்… என்று அவர் சொல்லச் சொல்ல மிரட்சியாக இருந்தது. அதற்கு அவர் சொன்ன காரணம் நெகிழ்ச்சியாக இருந்தது. #SAVE VINTAGE என்ற பெயரில் அவர் இந்தியா முழுக்கப் பயணம் கிளம்புகிறாராம்.

சமீபத்தில் சென்னை முடிச்சூரில்தான் அந்தப் பழைய லாம்ப்ரெட்டா மாடல் ஸ்கூட்டரைப் பார்த்தேன். ஒருவழியாக ஓனரைப் பிடித்துவிட்டேன். விசாரித்ததில், 1964 மாடல் என்பதும், (எம்மாடியோவ்… கிட்டத்தட்ட 55 வருஷ பழைய ஸ்கூட்டர்)... அதன் ஓனர் அஜித் என்பதும் தெரிய வந்தது. எங்கேயோ அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தவரைப் பிடித்தேன். எங்கேயாவது மார்க்கெட்டுக்கு… இல்லேனா வின்டேஜ் கண்காட்சிக்குக் கிளம்பிக் கொண்டிருப்பார் என்று நினைத்தால்… ‘‘ஹலோ, பைக் ரைடு… இல்லை ஸ்கூட்டர் ரைடு போகப் போறேன்! அதுவும் ஆல் இந்தியா ரைடு!’’ என்று ஷாக் கொடுத்தார்.

ஆம், அந்த லாம்ப்ரெட்டாவில்தான் இந்தியா முழுக்க... சுமார் 27 மாநிலங்கள்… 12,000 கிமீ–க்கு மேல்… 120 நாட்கள்… என்று அவர் சொல்லச் சொல்ல மிரட்சியாக இருந்தது. அதற்கு அவர் சொன்ன காரணம் நெகிழ்ச்சியாக இருந்தது. #SAVE VINTAGE என்ற பெயரில் அவர் இந்தியா முழுக்கப் பயணம் கிளம்புகிறாராம்.

‘‘நான் ஒரு வின்டேஜ் பைக் ரசிகன். என்கிட்ட ஏற்கெனவே ஜாவா- யெஸ்டி மாடல் பைக் இருக்கு. அதுலதான் இந்தப் பயணத்தை ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனால், நிறைய பேரு அத செஞ்சிட்டாங்க... அடுத்ததா டிவிஎஸ் எக்ஸ்எல்50-ல போலாம்னு நினைச்சேன். அதையும் செஞ்சிட்டாங்கனு கேள்விப்பட்டேன். அப்போதான் என் பச்சைக் கிளி லாம்ப்ரெட்டா என் கண்ணுக்குத் தெரிஞ்சது! ஆரம்பத்துல வீட்டுல கொஞ்சம் பயந்தாங்க. என்னோட மனஉறுதியைப் பாத்ததுக்கப்புறம் என்னோட அந்த ஆசையை நிறைவேற்ற எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கச் சம்மதிச்சிருக் காங்க! 120 நாள் கழிச்சு வாங்க! என் அனுபவத்தைச் சொல்றேன்!’’ என்று தனது பழைய பச்சைக்கிளியை உதைத்து முறுக்கிப் பறந்தார் அஜித்.

அஜித்னு பெயர் வெச்சது சரியாத்தான் இருக்கு! வாழ்த்துகள் அஜித்!

- ராஜூ முருகேசன்