Published:Updated:

``பக்கத்துல புலி... ஆந்தையின் கோபம்... துரத்திய கரடி!" - வைல்ட்லைஃப் போட்டோகிராபரின் த்ரில் அனுபவம்

Tiger
Tiger

ஒருமுறை மூணாறு போயிட்டிருந்தோம். சாலையின் நடுவே, ஒரு யானை குட்டிப்போட்டிருந்துச்சு. அதுக்குப் பாதுகாப்பா, மற்ற யானைகள் சாலையை வழிமறிச்சு நின்னுட்டு இருந்துச்சு.

கோவையைச் சேர்ந்த காதல் தம்பதி மன்சூர் அகமது - காயத்ரி மற்றும் அவர்களின் மகன் அபிஷேக் ஆகிய மூவருமே கேமரா காதலர்கள். வைல்ட்லைஃப் போட்டோகிராபியில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள்.

Mansoor Ahmed family
Mansoor Ahmed family

மன்சூர் அகமது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். காயத்ரி சுயதொழில் செய்கிறார். அபிஷேக் பள்ளியில் படிக்கிறார். போட்டோகிராபி அனுபவத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்கிறார், மன்சூர் அகமது.

* ``ஒருமுறை சத்தியமங்கலம் வனப்பகுதிக்குப் போயிருந்தோம். விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தாகம் தீர்த்த யானைகள், கிளம்ப ஆயத்தமாகின. எங்க எச்சரிக்கையை மீறி, அதன் பின்னாலேயே சில சுற்றுலா பயணிகள் போனாங்க. கடைசியில போயிட்டிருந்த யானைகள்ல ஒண்ணு திடீர்னு கோபத்துடன் திரும்பி, சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்கைகளைச் செய்ய ஆரம்பிச்சுது.

Tiger
Tiger

யானையின் கோபத்தைப் பார்க்கும்போது பயமா இருந்துச்சு. சுற்றுலாப் பயணிகள் சுதாரிச்சு, தூரமா வந்துட்டாங்க. விலங்குகள் அதன் போக்கில் இயல்பா வாழவே விரும்பும். தூரமா இருந்து ரசிக்கலாமே தவிர, அதன் பக்கம்போய் தொந்தரவு கொடுக்கக் கூடாது. இதையெல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கிச் சொன்னோம்.

* ஒருமுறை வால்பாறையிலிருந்து கோவைக்கு வந்துட்டு இருந்தோம். இரவு பத்து மணி. திடீர்னு சாலையின் நடுவே ஒரு யானை நின்னுட்டு இருந்துச்சு. காரை நிறுத்திட்டேன். எங்க பின்னாடி நிறைய வாகனங்கள் இருந்ததால, பின்னால திரும்பிப் போக முடியலை. பயத்துடனே கார்ல உட்கார்ந்திருந்தோம். 15 நிமிடம் கழிச்சு, யானைகள் கூட்டம் சாலையைக் கடந்துபோச்சு. அதன் பிறகு, அந்த ஒற்றை யானை ஒருவிதமா எங்களைப் பார்த்து தலையை ஆட்டிட்டு அதன் கூட்டத்துடன் இணைந்து கிளம்பிடுச்சு.

Animals
Animals

* இனச்சேர்க்கை நேரம் தவிர மற்ற நேரங்கள்ல ஆண் புலியும், பெண் புலியும் தனித்தனியாகத்தான் இருக்கும். பெண் புலிதான் குட்டிகளைப் பார்த்துக்கும். ஒருமுறை மகாராஷ்டிராவிலுள்ள தடோபா தேசியப் பூங்காவுக்குப் போயிருந்தப்போ, ஆண் மற்றும் பெண் புலிகள் சேர்ந்தே குட்டிகளை கவனிச்சுகிட்டதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டோம். அங்க, காணாமல் போன தங்கள் மூணு குட்டிகளையும் ஆண் மற்றும் பெண் புலி ரொம்ப சிரமப்பட்டு கண்டுபிடிச்சதை, வனவிலங்கு ஊழியர்கள் சொல்லக் கேள்விப்பட்டோம்.

* மற்றொரு முறை தடோபாவில், புலிகளை போட்டோ எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். பகலில் பலமணிநேரம் தூங்கிய புலி ஒண்ணு, தூங்கி எழுந்தும் உட்கார்ந்துட்டே இருந்துச்சு. அது எழுந்து நடமாடுவதை போட்டோ எடுக்கும் ஆவலில் காத்திருந்தோம். ஆனா, ஏமாற்றத்துடன் மாலை 5 மணிக்கு கிளம்பத் தயாராகிட்டோம். திடீர்னு ரெண்டு மான்கள் வருவதைக் கவனிச்ச அந்தப் புலி, பதுங்கிப் பாய்ந்து ஒரு மானை பிடிச்சாலும், மான் தப்பிச்சுடுச்சு. அதையும், அதே புலி மறுநாள் வேறொரு மானை வேட்டையாடியதையும் கண்கூடப் பார்த்தோம்.

குரங்கு உள்ளிட்ட பிற விலங்குகளுக்கு நாம உணவு கொடுக்கிறப்போ, அவை போட்டிப்போட்டு முந்திச் சென்று உணவைப் பறிக்க முயலும். அப்போ வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் உயிரிழக்க வாய்ப்பிருக்கு. தங்களுக்குத் தேவையான உணவுகளை விலங்குகளே தேடிக்கிறதுதான் சரியானது
மன்சூர் அகமது

* ஒருமுறை மூணாறு போயிட்டிருந்தோம். சாலையின் நடுவே, ஒரு யானை குட்டிப்போட்டிருந்துச்சு. அதுக்குப் பாதுகாப்பா, மற்ற யானைகள் சாலையை வழிமறிச்சு நின்னுட்டு இருந்துச்சு. ஒரு லாரி சாலையைக் கடந்துபோக முயல. கூட்டத்திலிருந்து ஒரு யானை கோபத்துடன் லாரியைத் தாக்க முற்பட்டுச்சு. சுதாரிச்சுகிட்டு லாரி டிரைவர் கீழ இறங்கி தப்பிச்சுட்டார்.

* பறவைகள் மென்மையானதுங்கிற புரிதலுடன் இருந்தோம். ஒருமுறை வனப்பகுதியில், ராக் ஈகிள் ஓவ்ள் (rock eagle owl) என்ற அறிய வகை ஆந்தையை அதன் பக்கத்துல போய் போட்டோஸ் எடுத்தோம். அது ஒருவிதமான எச்சரிக்கையை வெளிப்படுத்துச்சு. அதற்கான காரணங்கள் புரியாட்டியும், உடனடியா வேறு பகுதிக்குப் போயிட்டோம். பிறகு, அதைப் பத்தின தகவல்களைச் சேகரிச்சப்போதான், அவை கோபப்பட்டால் மனிதர்களைக்கூட தாக்க முற்படும்னு தெரியவந்துச்சு. பறவைகளாக இருந்தாலும், அதன் போக்கிலேயே விடணும்; தொந்தரவு செய்யக் கூடாதுனு அப்போதான் உணர்ந்தோம்.

leopard
leopard

* ஒருமுறை தடோபா வனப்பகுதியில் தொடர்ந்து மூணு நாள்கள் சென்றும், ஒரு புலியைக்கூட எங்களால பார்க்க முடியலை. நான்காம் நாள் மீண்டும் காட்டுக்குள் சென்றப்போ, நாங்க பயணிச்ச சஃபாரி வண்டிக்குப் பக்கத்துல ஒரு புலி வந்து நின்னுச்சு. அப்போ நானும், என் மனைவி மற்றும் மகனும் ஒரே ஜீப்ல உட்கார்ந்திருந்தோம்.

ostrich
ostrich

அந்தப் புலியை போட்டோ எடுத்திட்டிருந்த எங்க பையன், புலி எங்க பக்கத்துல நடந்து வர்றதைப் பார்த்து பயந்துட்டான். அவன் கையைப் பிடிச்சு அமைதியா இருக்கச் சொன்னோம். பிறகு அந்தப் புலி தன் இருப்பிடத்துக்குள் போயிடுச்சு.

Vikatan

* மற்ற விலங்குகளின் அச்சுறுத்தலால், செந்நாய்கள் வேட்டையாடிய இரையின் உயிர் போவதற்குள் அதைச் சாப்பிட ஆரம்பிச்சுடும். ஒருமுறை கபினி வனப்பகுதியில், செந்நாய் கூட்டம் ஒரு மானை சூழ்ந்து பிடிச்சுடுச்சு. ஒவ்வொரு நாயும் மானின் ஒவ்வொரு உறுப்பையும் வேகவேகமா சாப்பிடும் காட்சியைப் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு.

Elephant
Elephant

* கர்நாடகாவில், ஒரு வனவிலங்குச் சரணாலயத்துக்குப் போயிருந்தோம். அங்க வயதான ஒரு கரடியைப் பார்த்தோம். அதற்குச் செவித்திறனும், ஒரு பார்வைத்திறனும் இல்லைனு தெரிஞ்சுகிட்டோம். திடீர்னு அந்தக் கரடி எங்களைத் தாக்க வேகமா ஓடிவர, எப்படியோ தப்பிச்சுட்டோம்.

* வனப்பகுதியில் எந்த விலங்காக இருந்தாலும், குட்டியுடன் இருக்கும்போது அவற்றின் அருகில் செல்வதையும், விலங்குகளைத் தொந்தரவு செய்வதையும் தவிர்க்கணும்.

Tiger
Tiger

நாம எந்த நோக்கத்தில் அதன் வாழ்விடத்தில் இருக்கிறோம்னு விலங்குகளுக்குத் தெரியாது. ஆனா, தனது குட்டிக்கு மனிதர்களால் ஆபத்து வந்துடும்னு அச்சம் ஏற்பட்டால் அல்லது அதன் வாழ்விடத்தில் நாம நுழைந்திருக்கிறது பிடிக்கலைனா, விலங்குகள் மனிதர்களைத் தாக்க முற்படும். ஆனா, விலங்குகள் மனிதர்களை உணவாக உட்கொள்ளாது.

வனப்பகுதியில் எந்த விலங்காக இருந்தாலும், குட்டியுடன் இருக்கும்போது அவற்றின் அருகில் செல்வதையும், விலங்குகளைத் தொந்தரவு செய்வதையும் தவிர்க்கணும்.
மன்சூர் அகமது

* வனப்பகுதிக்குப் போய் விலங்குகளைப் பார்த்து ரசிக்கலாம். அன்பு காட்டுறதா நினைச்சு, விலங்குகளுக்கு உணவு கொடுப்பது தவறான பழக்கம். குரங்கு உள்ளிட்ட பிற விலங்குகளுக்கு நாம உணவு கொடுக்கிறப்போ, அவை போட்டிப்போட்டு முந்திச் சென்று உணவைப் பறிக்க முயலும். அப்போ வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் உயிரிழக்க வாய்ப்பிருக்கு. தங்களுக்குத் தேவையான உணவுகளை விலங்குகளே தேடிக்கிறதுதான் சரியானது" என்கிறார் தன் அனுபவத்திலிருந்து.

பின் செல்ல