Published:Updated:

வாழைநார் பட்டு முதல் சாரி கவுன் வரை.. இந்த வருட தீபாவளிக்கு இவைதான் டிரெண்டிங்...

அனார்கலி
News
அனார்கலி

இந்த தீபாவளிக்கு கைத்தறி புடவைகள், காதி காட்டன் புடவைகள், லினன் புடவைகள் போன்ற காட்டன் புடவைகள் மீண்டும் டிரெண்ட் ஆகியிருக்கின்றன.

வாழைநார் பட்டு முதல் சாரி கவுன் வரை.. இந்த வருட தீபாவளிக்கு இவைதான் டிரெண்டிங்...

இந்த தீபாவளிக்கு கைத்தறி புடவைகள், காதி காட்டன் புடவைகள், லினன் புடவைகள் போன்ற காட்டன் புடவைகள் மீண்டும் டிரெண்ட் ஆகியிருக்கின்றன.

Published:Updated:
அனார்கலி
News
அனார்கலி

தீபாவளி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஷாப்பிங் தான். இந்த தீபாவளிக்கு என்ன மாதிரியான ஆடைகள் ட்ரெண்டில் இருக்கின்றன... அவற்றை என்ன பட்ஜெட்டில் வாங்கலாம். எப்படி மிக்ஸ் மேட்ச் செய்து அணியலாம் என்ற டிப்ஸை வழங்குகிறார் காஸ்டியூம் டிசைனர் சிந்து.

காட்டன் புடவைகள்
காட்டன் புடவைகள்

தீபாவளிக்கு பலர் டிரெடிஷனல் ஆடைகள் பக்கம் கவனம் செலுத்துவார்கள். இந்த தீபாவளிக்கு கைத்தறி புடவைகள், காதி காட்டன் புடவைகள், லினன் புடவைகள் என காட்டன் புடவைகள் மீண்டும் டிரெண்ட் ஆகியிருக்கின்றன. காட்டன் ரக புடவைகள் என்பதால் சிம்பிளாக இருக்கும். இதற்கு இக்கட், கலம் காரி, ஃப்ளோரல் பிரின்ட், பத்திக் பிரின்ட், பாந்தினி பிரின்ட் கொண்ட பிளவுஸ் வகைகளை கான்ட்ராஸ்ட் நிறத்தில் மேட்ச் செய்யலாம்.

போட் நெக், க்ளோஸ் போன்றவை உங்களுக்கு கம்பீர லுக் கொடுக்கும். இந்த ரக புடவைகள் 450 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

கொஞ்சம் கிராண்டான புடவைகள் எடுக்க விரும்பும் பெண்களுக்கு ஏற்றாற்போல் காப்பர் ஜரிகை சில்க் புடவைகள் டிரெண்ட் ஆகியிருக்கின்றன. இந்த ரக புடவையில், புடவை முழுவதுமே காப்பர் ஜரிகைகளால் டிசைன் செய்யப்பட்டிருக்கும். புடவை முழுவதும் ஜரிகை வருவதால் பார்ப்பதற்கு கொஞ்சம் பளபளப்பாகத் தெரியும். இத்துடன் கான்ட்ராஸ்ட் நிற ஆரி டிசைன் செய்த பிளவுஸ் அல்லது புரோகேட் பிளவுஸ்களை மேட்ச் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.

காப்பர் ஜரிகை புடவை வகையிலேயே ரோஸ் ஜரிகை, ஊதா நிற ஜரிகை என பல நிற ஜரிகைகள் இருக்கின்றன. உங்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்து வாங்கலாம். இந்த ரக புடவைகள் ரூபாய் 1200-லிருந்து கிடைக்கின்றன.

வாழை நார் பட்டுப்புடவை
வாழை நார் பட்டுப்புடவை

குறைந்த பட்ஜெட்டில் டிரெடிஷனல் லுக் வேண்டும் எனும் பெண்கள் வாழை நார் பட்டுப்புடவைகளைத் தேர்வு செய்யலாம். இந்த ரக பட்டுப்புடவைகள் குறைந்த பட்ஜெட்டில் சாஃப்ட் சில்க் கட்டியிருக்கும் உணர்வைக் கொடுக்கும். உடல் முழுவதும் ஒரு நிறம், பள்ளு ஒரு நிறம் என இரண்டு நிறங்கள் மேட்ச் செய்யப்பட்ட டிசைனில் தான் இவை கிடைக்கும். பொதுவாக பட்டுப்புடவைகள் என்றாலே பாட்டில் க்ரீன், மெரூன், சிவப்பு, மஞ்சள் என்று டிரெடிஷனல் நிறத்தில் தான் கிடைக்கும். பட்டுப் புடவைகளில் டிரெண்டிங்கான கலர் தேடினால் பட்ஜெட் இன்னும் அதிகமாகும். ஆனால் வாழை நார் பட்டுப் புடவையில் நீங்கள் குறைந்த பட்ஜெட்டிலேயே பேஸ்டல் நிறங்களைத் தேர்வு செய்யலாம். இந்த ரக புடவைகளுக்கு புரோகேட் பிளவுஸ்கள் மற்றும் டிசைனர் பிளவுஸ்கள் பொருத்தமாக இருக்கும். 1300 ரூபாயிலிருந்து வாங்கலாம்.

சுங்குடி செக்டு புடவைகள் இப்போது மறுபடி டிரெண்ட் ஆகின்றன. டிரெடிஷனல் நிறத்தில் மயில் டிசைன், அன்னம் டிசைன், மாங்காய் டிசைன் கொண்ட பெரிய பார்டர்கள் பக்கா டிரெடிஷனல் லுக் கொடுக்கும். இதற்கு பஃப ஸ்லீவ் அழகாக இருக்கும். சுங்குடி புடவைகள் 500 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

வாழைநார் பட்டு முதல் சாரி கவுன் வரை.. இந்த வருட தீபாவளிக்கு இவைதான் டிரெண்டிங்...

கிராண்ட் லுக் பிரியைகளுக்கென்று புதிதாக களம் இறங்கியிருப்பவை டிசைனர் ஷிம்மர் புடவைகள். கொஞ்சம் ஷைனிங் லுக், புடவை முழுவதும் சமிக்கி வேலைப்பாடுகள் கொண்ட இந்தச் சேலைகள் 800 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

புடவைகள் தவிர்த்து இண்டோ வெஸ்டர்னில் டிரெண்ட் ஆகியிருப்பவை கவுன் வடிவ அனார்கலி ஆடைகள். இவை டிரெடிஷனல் லுக், பிளெயின் லுக், பேட்டர்ன் லுக் என மூன்று விதங்களில் கிடைக்கின்றன. 

டிரெடிஷனல் லுக் அனார்கலி என்பது நம்மிடம் இருக்கும் புடவைகளைக் கொண்டே நாம் வடிவமைத்துக் கொள்ள முடியும். புடவையின் உடல் பகுதியை அனார்கலியாக வடிவமைத்து, பள்ளு பகுதியை யோக் ( கழுத்து பகுதிக்கு கீழ் மார்பு வரை) மற்றும் ஸ்லீவ் பகுதிகளில் வைத்து தைத்துவிட்டால் கிராண்டான அனார்கலி ஆடை தயார். இதற்கு கிராண்டான நெட்டடு துப்பட்டா, ஆர்கன்ஸா துப்பட்டா போன்றவற்றை மிக்ஸ் மேட்ச் செய்யுங்கள்.

அனார்கலி
அனார்கலி

 சிம்பிள் லுக் வேண்டும் என்பவர்கள் பிளெயின் அல்லது பேட்டர்ன் அனார்கலியை தேர்வு செய்யலாம். ரெடிமேடாக வாங்கினால் அதிக பட்ஜெட் ஆகும் என்று நினைப்பவர்கள் பிளெயின் புடவைகளை வாங்கி, டெய்லர்களிடம் கொடுத்து உங்களுக்கு ஏற்றாற்போல் டிசைன் செய்யச் சொல்லலாம். பிளெயின் புடவைகள் 400 ரூபாயிலிருந்தே கிடைக்கின்றன. பிளெயின் அனார்கலிக்கு ஃப்ளோரல் டிசைன் கொண்ட துப்பட்டாக்கள் பெஸ்ட் சாய்ஸ். பேட்டர்ன் டிசைன் வேண்டுமென்பவர்கள், உங்களுக்குப் பிடித்த பேட்டர்னை தேர்வு செய்யுங்கள். பேட்டர்ன் டிசைன்களை தேர்வு செய்யும்போது, பிளெயின் துப்பட்டா தேர்வு செய்யுங்கள். 

வெஸ்டர்ன் அவுட்ஃபிட்டை பொறுத்தவரை சென்ற ஆண்டு டிரெண்டில் இருந்த சராரா தான் இப்போதும் பல பெண்களின் சாய்ஸ்.

மேக்ஸ் தீபாவளி ஃபேஷன்
மேக்ஸ் தீபாவளி ஃபேஷன்

டிரெண்டில் உடன்பாடு இல்லை. ஆனால் தீபாவளிக்கு என்ன ஆடை வாங்கலாம் என்று யோசிப்பவர்களும் அலுவலக பயன்பாட்டிற்கு ஆடை வாங்க நினைப்பவர்களும் குர்தி, சல்வார், கைத்தறி புடவைகள், கிராப் டாப், பலாசோ, ஜீன் என உங்களுக்குத் தேவையிருக்கும் ஆடைகளை உங்களின் உடல்வாகுக்கு ஏற்ப தேர்வு செய்து வாங்குங்கள்.