Published:Updated:

`டீ கொடுத்தனர்; அவர்களுக்கு எங்களை யாரென்றே தெரியவில்லை..!’ - கோலி பிறந்தநாளில் நெகிழ்ந்த அனுஷ்கா

ஆர்ப்பரிக்கும் நீரோடைகள், சிம்மினி விளக்கு என அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டா ஸ்டேட்டஸ்கள் பூட்டான் நாள்களுடன் நகர்கின்றன.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா
விராட் கோலி, அனுஷ்கா சர்மா

காதல் மனைவி அனுஷ்காவுடன் விராட் கோலி தனது 31-வது பிறந்தாளை கொண்டாடியுள்ளார். உலகக்கோப்பை தொடர் அதன்பின்பு வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா தொடர் என பிஸியாக இருந்த கோலி தற்போது ஓய்வில் உள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான டி-20 தொடரில் கோலி விளையாடவில்லை. படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த அனுஷ்காவும் காதல் கணவருக்காக அந்தப்பணிகளை எல்லாம் ஓரங்கட்டினார். கோலியின் பிறந்தநாளையொட்டி இருவரும் பூட்டான் பயணமானார்கள்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா
விராட் கோலி, அனுஷ்கா சர்மா

பூட்டானில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களை அனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ்களை தொடர்ந்து அப்டேட் செய்துகொண்டிருந்தார். காலையில் அழகிய மலைத்தொடர்களில் மேற்கொண்ட நடைப்பயணம், ஆர்ப்பரிக்கும் நீரோடைகள், மலைகளில் உலா வரும் கால்நடைகள், பூட்டான் இசை, சிம்மினி விளக்கு என அவரது ஸ்டேட்டஸ்கள் பூட்டானை நம் கண் முன்பு கொண்டுவருகிறது.

`அமைதியா இருக்கேன் பலவீனமா இல்ல’ - ட்விட்டரில் லெப்ட் ரைட் வாங்கிய அனுஷ்கா ஷர்மா!

அனுஷ்காவின் ட்விட்டர் பதிவில், `இன்று நாங்கள் 8.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் சென்றோம். அங்கு ஒரு அழகான சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஓய்வு எடுக்கலாம் என முடிவு செய்தோம். பிறந்து நான்கு மாதங்களே ஆன கன்றுக்குட்டிக்கு உணவு கொடுத்தோம். அதன் அருகில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் உங்களுக்குக் களைப்பாக இருக்கிறதா... டீ சாப்பிடுகிறீர்களா என அன்புடன் கேட்டனர். நாங்களும் அந்த வீட்டிக்குச் சென்றோம் அவர்கள் எங்களை மிகவும் அன்பாக நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் சிறிது நேரத்தைச் செலவழித்தோம். அவர்களுடன் உரையாடிக்கொண்டு அவர்கள் கொடுத்த டீ-யை அருந்தினோம்.

அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா

அவர்களுக்கு நாங்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் மலையேற்றத்தின் போது களைத்துப்போன இரண்டு நபர்கள் அவ்வளவுதான். எங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பை மட்டுமே வழங்கினர். இத்தகைய செயல்களினால்தான் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை தொடர்கிறது. இது ஒரு பசுமையான நினைவு” எனப் பதிவிட்டுள்ளார். பூட்டான் பயணம் தொடர்பாக விராட் தனது இன்ஸ்டாபதிவில், ``இந்த தெய்விகமான இடத்தை மனைவியுடன் காண்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.