Published:Updated:

` நமக்குத்தான் அவை அமங்கலம்.. ஆனால்?!' - மேலைநாடுகளில் நடக்கும் விநோத திருமணங்கள்

தலைமுறைக்கேற்ப திருமணங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவரவர் மதம் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள் இன்னமும் கடைபிடிக்கப்பட்டுத்தான் வருகின்றன.

வித்தியாச திருமணக் கலாசாரம்
வித்தியாச திருமணக் கலாசாரம் ( greenweddingshoes.com )

காற்றில் அசைந்தாடும் தோரணங்கள், பட்டுப்பாவாடை சகிதமாக அங்குமிங்கும் ஓடியாடும் சிறுமிகள், வளையோசை கலகலக்க பாவாடை தாவணியில் வலம்வரும் வயசுப்பெண்கள், அவர்களைக் கடைக்கண்களால் நோட்டமிடும் வாலிபர்கள், பாரம்பர்யக் கதைபேசி மகிழும் வயதானவர்கள் என உறவுகள் சூழ, வீட்டின் முற்றத்திலேயே நடக்கும் திருமணங்கள் அவ்வளவு அழகு.

இந்திய திருமணக் கலாசாரம்
இந்திய திருமணக் கலாசாரம்

கூட்டுக்குடும்பம் காணாமல் போய், தனிக்குடித்தனங்கள் பெருகிய பிறகு, அடுத்தடுத்த தலைமுறைகளின் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ப, திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதன் அடுத்தகட்டமாக, மண்டபங்களிலேயே டிஸ்னி தீம், ஃபேரி டேல், அரண்மனை தீம் என 'தீம் வெட்டிங்ஸ்' பிரபலமாயின. அடுத்தகட்டமாக, 'டெஸ்டினேஷன் வெட்டிங்' எனும் கான்செப்டில் திருமணங்களை நடத்துவது டிரெண்டானது.

பீச் வெடிங்
பீச் வெடிங்

குறிப்பாக கடற்கரை, ரிசார்ட், பூந்தோட்டம், கோட்டைகள், குளிர்ப் பிரதேச மலைகள் எனப் பலதரப்பட்ட இடங்களில் டெஸ்டினேஷன் திருமணங்கள் நடைபெறுகின்றன.

தலைமுறைக்கேற்ப திருமணங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவரவர் மதம் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள் இன்னமும் கடைபிடிக்கப்பட்டுத்தான் வருகின்றன.

பாழடைந்த கட்டிடம்
பாழடைந்த கட்டிடம்
colinpeddle.com

சமீபத்தில் அமெரிக்கா, லண்டன் போன்ற மேலை நாடுகளில் வழக்கத்துக்கு முரணாக சில திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது, இடிபாடுகளுக்கு இடையே திருமணங்களை நிகழ்த்தும் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது.

திருமணங்கள் மட்டுமல்ல, திருமண புகைப்பட ஷூட்டிங்குகளைக்கூட இந்த மாதிரி இடங்களில் நடத்துவது டிரெண்டாகிவருகிறது.

பாழடைந்த சர்ச்
பாழடைந்த சர்ச்
greenweddingshoes.com

மாத்யூ கிறிஸ்டோஃபர் எனும் புகைப்படக் கலைஞர், அமெரிக்காவின் பாழடைந்த கட்டடங்களுக்கான இணையதளம் ஒன்றை நடத்திவருகிறார். இதில், அமெரிக்காவில் உள்ள பழைய கட்டடங்கள், சர்ச், மியூசியம் போன்றவற்றின் புகைப்படங்களை அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு பதிவேற்றிவருகிறார்.

பாழடைந்த கட்டடங்கள், இடுகாடு, ரயில் தண்டவாளம், அடர்ந்த காடு என 'சம்திங் ஓல்டு, சம்திங் நியூ' எனும் கான்செப்டில் நிகழும் மாடர்ன் கலாசாரத் திருமணங்களின் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்காக...

ரயில் தண்டவாளம்
ரயில் தண்டவாளம்
greenweddingshoes.com
இடிந்த கட்டிடம்
இடிந்த கட்டிடம்
greenweddingshoes.com
அடர்ந்த காடு
அடர்ந்த காடு
onefabday.com
பாழடைந்த கட்டிடம்
பாழடைந்த கட்டிடம்
ispwp.com
இடுகாடு
இடுகாடு
funneralwise.com
இடிந்த கட்டிடம்
இடிந்த கட்டிடம்
greenweddingshoes.com
பாழடைந்த கட்டிடம்
பாழடைந்த கட்டிடம்
greenweddingshoes.com
பழைமையான சர்ச்
பழைமையான சர்ச்
greenweddingshoes.com

நமக்குத்தான் இவையெல்லாம் அமங்கல அடையாளங்கள்... புதுமையை விரும்பும் மேற்கத்திய நாட்டுக் கலாசாரங்களிலிருந்து அவற்றைக் காப்பியடிக்கும் நம்மூர் மக்களும் வருங்காலத்தில் டிரெண்ட் என்ற பெயரில் இதைப் பின்பற்றினாலும் ஆச்சர்யமில்லை.