Published:Updated:

BMW: ரூ.23 லட்சம் பைக்; அஜித் மாதிரி `வலிமை’ பார்ட்டிகளால்தான் ஐரோப்பா முழுக்க இதை ஓட்ட முடியும்!

Ajith in BMW

இந்த அதிக எடைதான் ஹைவேஸில் நிலைத்தன்மையைக் கொடுக்கும் அதே நேரத்தில், சட் சட் என கார்னரிங் செய்வதில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். அதாவது, சிட்டிக்குள் ஓட்டத் தனித் திறமை வேணும்.

BMW: ரூ.23 லட்சம் பைக்; அஜித் மாதிரி `வலிமை’ பார்ட்டிகளால்தான் ஐரோப்பா முழுக்க இதை ஓட்ட முடியும்!

இந்த அதிக எடைதான் ஹைவேஸில் நிலைத்தன்மையைக் கொடுக்கும் அதே நேரத்தில், சட் சட் என கார்னரிங் செய்வதில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். அதாவது, சிட்டிக்குள் ஓட்டத் தனித் திறமை வேணும்.

Published:Updated:
Ajith in BMW
அஜித் நண்பர்களிடம் பேசினால்… அவரைப் பற்றி அவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் சொல்வார்கள். பைக் ரைடர்கள் என்றால் அஜித்துக்கு அவ்வளவு இஷ்டம். ஷூட்டிங் பிரேக்கில்… மற்ற நடிகர்களைப் பார்க்க பெரிய பெரிய விஐபிக்கள் வந்தால்… அஜித்தைப் பார்க்க பைக் கிளப்பினரோ… சூப்பர் பைக் உரிமையாளர்களோ வருவார்களாம். அவர்களிடம் லேட்டஸ்ட் சூப்பர் பைக்குகள் பற்றிய விஷயங்களை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வாராம்.

அஜித்துக்கு அப்படிப்பட்ட ஒரு நெருங்கிய பைக் ரைடர் நண்பர்தான் லண்டனைச் சேர்ந்த சுப்ரெஜ் வெங்கட் . அட்வென்ச்சர் பைக் ரைடர் மற்றும் வொய்ல்டு லைஃப் ஆர்வலருமான இவரின் ட்விட்டர் அக்கவுன்ட்டில்தான், அஜித் ஒரு பிஎம்டபிள்யூ பைக்கில் நிற்பதுபோன்ற புகைப்படம் முதன் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்துதான் அஜித்தின் அந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் செம வைரலாகிவிட்டது.

பக்காவான ரைடிங் கியருடன் அஜித் ஹோட்டல் ரூமுக்கு வெளியே கிளம்புவதிலிருந்து, படிக்கட்டில் இறங்கி, யூரோ டனல் ட்ரெயினுக்குள் பைக்கைக் கொண்டு போய், அந்த பிஎம்டபிள்யூ பைக்கில் நின்று போஸ் கொடுப்பதுவரை அவர் பதிவிட்ட புகைப்படங்கள், அஜித் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது.

அஜித்
அஜித்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளித் தாடியுடன் அஜித்துக்கு இணையாக கிண்ணென இருக்கும் அந்த பைக், பிஎம்டபிள்யூ R 1200 RT எனும் டூரிங் பைக். இதன் விலை சுமார் 23 லட்ச ரூபாய். இது இந்தியாவில் சுமார் 20 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது தயாரிப்பில் இல்லை; ஆனால் ஐரோப்பிய மார்க்கெட்டில் இது உண்டு. இது சுப்ரெஜ்ஜின் பைக்கா என்று தெரியவில்லை. அஜித் இதுபோல், நண்பர்களின் பைக்கில் ரைடு போவது வழக்கம். இந்தியாவில் மற்றொரு பிஎம்டபிள்யூ பைக்கில் சிக்கிம், மேகாலயா என்று வட கிழக்கு இந்தியாவில் டூர் அடித்தவர், இந்த முறை லண்டன் நகரிலிருந்து ஐரோப்பா முழுக்க பெரிய ட்ரிப் அடித்திருக்கிறார். அடுத்ததாகவும் வினோத் இயக்கத்தில், பெயரிடப்படாத AK61 படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் இந்த டூரை ப்ளான் செய்திருக்கிறார் அஜித். அஜித் பயணித்த அந்த பிஎம்டபிள்யூ R 1200 RT பைக்கில் என்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம்!

அஜித்
அஜித்
இது 2005–ல் பிஎம்டபிள்யூவில் இருந்து வந்த ஒரு பக்கா அட்வென்ச்சர் டூரிங் பைக். இதுதான் அந்த நிறுவனத்தின் என்ட்ரி லெவல் டூரிங் பைக். RT என்பது Road Touring அல்லது Roadster என்பதைக் குறிக்கும். இதிலேயே RS என்றால், அது Racing Sports அல்லது Road / Sport என்று அர்த்தம். பொதுவாக, ஸ்போர்ட்ஸ் பைக்கைவிட டூரிங் பைக்கில்தான் வசதிகள் அதிகமாக இருக்கும்.

அதாவது, ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டத்தில் ஆரம்பித்து, சேடில் பேக் என்று சொல்லக்கூடிய (Cowboy படங்களில் குதிரைக்கு மேலே வைப்பார்களே!) பாக்ஸ் வரை ஏகப்பட்ட வசதிகள் உண்டு. இந்த சேடில் பையில், டூர் விரும்பிகள் தங்களுக்கான உணவுப் பொருட்கள், துணிமணிகள், ரைடிங் கியர்கள், ஏன் குட்டி கேஸ் ஸ்டவ் கூட வைத்துக்கொள்ளலாம். மேலே ஒரு டாப் பாக்ஸும் உண்டு இந்த பைக்கில். இதிலும் ஹெல்மெட் போன்ற பொருட்கள் வைத்துப் பூட்டிக்கொள்ளலாம். இதனாலேயே இந்த பைக்கின் எடை தாறுமாறாக இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இதில் ஆன்போர்டு ட்ரிப் கம்ப்யூட்டர் என்றொரு வசதி உண்டு. இதில் நம் பெர்சனல் கம்ப்யூட்டர் மாதிரி பல விஷயங்களைச் சேமித்துக் கொள்ளலாம். கடைசியாகப் போன இடம், டாப் ஸ்பீடு, மைலேஜ், சர்வீஸ் ரிமைண்டர், எரிபொருள் செலவு, போக வேண்டிய இடம், தூரம் என்று எல்லாமே இதில் பதிவாகும்.

எவ்வளவு வேகமாகச் சென்றாலும், காற்று முகத்தில் அறையாமல், இதிலிருக்கும் பெரிய விண்ட்ஷீல்டு பக்காவாகத் தடுத்து மேலே அனுப்பிவிடும். இதில் எலெக்ட்ரானிக் சமாசாரங்கள் ரொம்ப அதிகம். விண்ட்ஷீல்டே எலெக்ட்ரானிக்தான். (வைப்பர்தான் கொடுக்கலை!) இதன் ‘ஹீட்டட் ஹேண்ட் கிரிப்’ சூப்பர் அம்சம். வெயில் காலங்களில் சிலருக்கு உள்ளங்கை வியர்க்கும். அதோடு பைக் ஓட்டுவது கடுப்பாக இருக்கும். அந்தப் பிரச்னை இதில் இருக்காது. அதேபோல், குளிர்காலங்களில் நம் கையைக் கதகதப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

அஜித்
அஜித்
இதிலிருப்பது 1,200 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின். இதன் பவர் 124bhp. இந்த 285 கிலோ எடை கொண்ட இந்த பைக்குக்கு இது ஓகேயான பவர்தான் என்றாலும், இது அதிகபட்சமாக 140 கிமீ வேகத்தில் பறக்கும். இதன் ஓட்டுதலுக்குப் பெரிதும் துணையாக இருப்பது, இதிலிருக்கும் 125Nm டார்க். சும்மா விருட்டென சிக்னலில் இருந்து சீறும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இருக்கிறது.

பைக்கின் தாறுமாறு எடைதான் இதில் முக்கிய ப்ளஸ் மற்றும் மைனஸ். இதன் எடை சுமார் 285 கிலோ. சேடில் பைகளோடு இன்னும் அதிகமாகும் இதன் எடை. இந்த அதிக எடைதான் ஹைவேஸில் நிலைத்தன்மையைக் கொடுக்கும் அதே நேரத்தில், சட் சட் என கார்னரிங் செய்வதில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். அதாவது, சிட்டிக்குள் ஓட்ட தனித் திறமை வேணும். அஜித் போன்ற வலிமை மிக்க பார்ட்டிகளால்தான் இதை எளிதில் கையாள முடியும். அட, சுமார் 835 மிமீட்டருக்கு மேல் இருக்கும் இந்த பைக்கின் சீட்டில் காலைத் தூக்கிப் போட்டு உட்காரவே தெம்பு வேணும் பாஸ்! இது வழக்கமான பைக்குகளைவிட சுமார் 100 மீட்டராவது அதிகம். நம் ஊரில் யெஸ்டி அட்வென்ச்சருக்குப் பிறகு இதே சீட் உயரம் கொண்ட பைக் சுஸூகி வி–ஸ்ட்ராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இதன் ரைடிங் பொசிஷன் செம கம்ஃபர்ட்டாக இருக்கும். சீட் அத்தனை பெருசு. அதைவிட, பில்லியன் ரைடருக்குத்தான் இதில் நல்ல சொகுசு கிடைக்கும். அகலமான இதன் முன் பக்க ஃபேரிங், கிட்டத்தட்ட ஹேண்ட்பாரின் கடைசி வரை நீண்டிருப்பது செமயாக இருக்கும். இதில் 3 பார்ட் ஹெட்லைட்ஸ் மற்றும் டூயல் எல்இடி கொரோனா ரிங்க்ஸ் இருப்பது, பிஎம்டபிள்யூ கார்களை நினைவுப்படுத்தும்.

இதை ஓட்ட ஆசையைத் தூண்டுவது, இதில் உள்ள ரைடிங் மோடுகள்தான். Rain, Road, Standard என 3 மோடுகள். ஐரோப்பா குளிர்ப் பிரதேசம் என்பதால், இந்த பிஎம்டபிள்யூ R 1200 RT, அந்த ஏரியாவுக்கு நன்றாகவே ஒத்துழைக்கும். ரெயின் மோடில் ஓட்டினால்… இந்த 17 இன்ச் வீல்களில் பக்காவான கிரிப்… மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் நன்றாக ஒத்துழைத்து, பைக் கீழே சரியாமல் இருக்க உதவும். இதில் 265 மிமீ பின் பக்க டிஸ்க்கும், 320 மிமீ முன் பக்க டிஸ்க்கும், நான்கு கேலிப்பர்களுடன் ஏபிஎஸ் பிரேக்ஸோடு உண்டு. அதனால், ஸ்கிட் ஆவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.

இந்த பைக் நம் ஊரில் டுகாட்டிக்கு மல்ட்டிஸ்ட்ராடாவுக்குப் போட்டியாக வந்தது. ஆனால், போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறியதால், இதன் தயாரிப்பை நிறுத்தி விட்டது பிஎம்டபிள்யூ.

என்னது, மைலேஜா?! இந்த 25 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட R 1200 RT, சுமார் 14 – 15 கிமீ மைலேஜ் தருமாம்! அஜித்துக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையா பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism