Published:Updated:

பள்ளியில் பாக்குத் தோட்டம்; அந்த வருமானத்தில் பள்ளிக்கு பேருந்து... அசத்தும் கர்நாடக அரசுப் பள்ளி!

School Bus ( Photo by Element5 Digital on Unsplash )

இப்பணத்தில் தொலை தூரத்தில் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவதற்காக, 26 இருக்கைகள் கொண்ட பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்கியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் விட்டல் தாலுகாவில் அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. 112 ஆண்டுகள் பழைமையான வரலாற்றைக் கொண்ட இப்பள்ளிக்கு, 4 ஏக்கர் நிலம் உள்ளது. வெறுமனே உள்ள அந்த நிலத்தில் 2017-ல் பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுவும் (எஸ்.டி.எம்.சி), ஆசிரியர்களும், கிராம மக்களும் இணைந்து 628 பாக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

School Children
School Children
Pandi.U

மரக்கன்றுகளைப் பராமரிப்பது போன்ற வேலைகள் உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்டுக்கு 2.50 லட்ச ரூபாய் வருமானம், இம்மரங்களின் விளைச்சலில் இருந்து பள்ளிக்குக் கிடைத்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்பணத்தில் தொலை தூரத்தில் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவதற்காக, 26 இருக்கைகள் கொண்ட பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்கியுள்ளனர். இந்தப் பேருந்தை நிர்வகிக்கும் பொறுப்பு எஸ்.டி.எம்.சி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விளைச்சலில் இருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து பேருந்து நிர்வகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளியில் பாக்குத் தோட்டம்; அந்த வருமானத்தில் பள்ளிக்கு பேருந்து... அசத்தும் கர்நாடக அரசுப் பள்ளி!

அண்மையில் எம்.எல்.ஏ சஞ்சீவ மதந்தூர் பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எஸ்.டி.எம்.சி-யின் முயற்சியைப் பாராட்டியவர், பள்ளிக்குக் கூடுதலாக ஒரு அறை கட்ட அனுமதியும், எதிர்வரும் நாள்களில் கான்கிரீட் சாலையும் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

பள்ளியின் புதுவித முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.