Published:Updated:

பாதம் தாவும் கங்காரு; தொடையில் டால்ஃபின்...  டிரண்டிங் மினிமலிஸ்ட் டாட்டூ!

டாட்டூக்கள் மிகவும் எடுப்பாகவும் பெரிதாகவும் சிக்கலாகவும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சிறியதாகவும் எளிமையாகவும்கூட இருக்கலாம் என்கிறது மினிமலிச டாட்டூ.

சோஷியல் மீடியாக்களில் மட்டுமல்ல, ஃபேஷன் ட்ரெண்டிங்கிலும் இன்றைய இளைஞர்கள் நிறையவே அப்டேட்டாக இருக்கிறார்கள். புராணகால அடையாளங்கள், விதவிதமான பூக்கள், வித்தியாசமான உருவங்கள், ஆக்ரோஷத்தை, பிரமாண்டத்தைப் பிரதிபலிக்கும் வடிவங்கள் போன்றவற்றை உடலில் ஆங்காங்கே அல்லது உடல் முழுவதும் டாட்டூக்களாக வரைந்து கொள்கிறார்கள்.

இந்தப் பழக்கம் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கத்திய உலகில் பிரபலமாக இருந்தாலும், இந்திய இளைஞர்களை அது முழுமையாகக் கவரவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக டிரெண்டிங் ஆகி இருக்கும் மினிமலிச டாட்டூ இப்போது இந்தியாவின் அனைத்து வயதினரையும் ஆவலுடன் ஆட்கொண்டு வருகிறது.

பாதம் தாவும் கங்காரு; தொடையில்  டால்ஃபின்... 
டிரண்டிங் மினிமலிஸ்ட் டாட்டூ!

டாட்டூக்கள் மிகவும் எடுப்பாகவும் பெரிதாகவும் சிக்கலாகவும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சிறியதாகவும், எளிமையாகவும்கூட இருக்கலாம் என்கிறது மினிமலிச டாட்டூ. விரல்கள், கழுத்து, கணுக்கால், புஜம், காதுமடல் என உடலின் எந்த இடத்திலும் மினிமலிச டாட்டு பொருந்திவிடும். பொதுவாக டாட்டூ வரைந்திருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற பொதுப் பார்வையையும் தகர்க்கிறது மினிமலிச டாட்டுகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மினிமலிச டாட்டூ ஆதிகாலம் தொட்டு இருக்கிறது. நம் பாட்டிகளின் கை மணிக்கட்டுகளைப் பார்த்தால் மயில்களாகவோ, ஓவியங்களாகவோ மினிமலிச டாட்டூகள் இன்னமும் கதைபேசிக் கொண்டிருக்கின்றன.

புஜத்தில் பயணிக்கும் சிறிய பாய்மரக் கப்பல், நடுவிரலில் வைரத்தின் பளபளப்பு, மணிக்கட்டில் மெல்லிய இணைக்கோடுகளால் ஆன பிரேஸ்லேட், நடுமுதுகிலிருந்து கழுத்தை நோக்கிப் பறக்கும் தட்டான், கையின் உட்புறத்தில் தைரியம் சொல்லும் ’பி பிரேவ்’, காதருகில் இசைக் குறிப்பு, பாதத்துக்கு மேலாகத் தாவும் கங்காரு, அக்குளுக்குக் கீழே அழகான பூங்கொத்து, தொடையில் நீந்தும் டால்ஃபின், கழுத்துக்குழியில் சாவியின் துளை… இவையெல்லாம் மினிமலிச டாட்டூக்களுக்கு சில சாம்பிள்கள். சிறியதாக இருக்கும் இந்த டாட்டூக்களில் இருக்கும் செளகர்யமே, எதை எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பதுதான்.

சிறிய நாகம், தேள், வேல், உருவங்கள் முதற்கொண்டு பெயர்கள் வரை பச்சை குத்தும் வழக்கம் அவர்களின் காலம் தொட்டு இன்றுவரை தொடரத்தான் செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறைவே நிறைவு என்கிறது மினிமலிச தத்துவம். அதை அப்படியே டாட்டூ ஆர்டிஸ்ட்கள் மினிமலிச டாட்டூ கலாசாரத்திற்குள் புகுத்தியிருக்கிறார்கள். இந்தக் கலையை வளர்த்தெடுப்பதில் மிகப்பெரிய பங்கு இவர்களுக்கு இருக்கிறது. இன்றைய நிலையில் இந்த வகை டாட்டூக்களை போட்டுக் கொள்ள 300 ரூபாயிலிருந்து 2,500 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.  

டாட்டூ போடுவதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாக டாட்டூ ஆர்டிஸ்ட்கள் குறிப்பிடுவது இங்க் குவாலிட்டியைத்தான். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காகத் தரமில்லாத இங்க் பயன்படுத்தும் டாட்டூ ஸ்டூடியோக்களை இளைஞர்கள் அணுகவேண்டாம் என்பது அவர்களின் கோரிக்கை.

ஏனெனில், மூலைக்கு மூலை டாட்டூ ஸ்டூடியோக்கள் முளைத்திருக்கின்றன. அதனால் டாட்டூ போடுவதற்கு முன்பாக டாட்டூ ஸ்டுடியோ குறித்து விசாரிப்பது அவசியம் என்கிறார்கள்.

பாதம் தாவும் கங்காரு; தொடையில்  டால்ஃபின்... 
டிரண்டிங் மினிமலிஸ்ட் டாட்டூ!
உள்ளத்து உணர்ச்சிகள், லட்சியங்கள், அச்சம், தைரியம், குடும்பம், வாழ்க்கை தத்துவம், எதிர்காலம் என அனைத்தையும் நேரடியாக அல்லது மறைபொருளாக வெளிப்படுத்துகின்றன மினிமலிச டாட்டூக்கள்.

பளிச் வண்ணங்களில் சில புள்ளிகள், சில கோடுகள் முதல் விலங்குகள், வடிவங்கள், எழுத்துகள், குறிகள் என ஒவ்வொருவரும் தனது தனித்துவத்தையும் அடையாளத்தையும் வெளிப்படுத்த இவை உதவுகின்றன. அதனால்தானோ என்னவோ இன்றைய இளைஞர்களின் ஈர்ப்பாக வளர்ந்துகொண்டிருக்கிறது மினிமலிச டாட்டூ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு