Published:Updated:

உபர் ஈட்ஸில் உணவு டெலிவரி ரோபோ பாய்ஸ்!

டெலிவரி ரோபோ
பிரீமியம் ஸ்டோரி
டெலிவரி ரோபோ

உணவு டெலிவரி ரோபோ

உபர் ஈட்ஸில் உணவு டெலிவரி ரோபோ பாய்ஸ்!

உணவு டெலிவரி ரோபோ

Published:Updated:
டெலிவரி ரோபோ
பிரீமியம் ஸ்டோரி
டெலிவரி ரோபோ

டெலிவரிக்கு மட்டும்தான் ரோபோக்களைப் பயன்படுத்தாமல் இருந்தார்கள். இப்போது அதுவும் நடந்து விட்டது. ஹலோ... இது நீங்கள் நினைக்கிற டெலிவரி இல்லை; உணவு டெலிவரி. ஆம், அமெரிக்காவில் `உபர் ஈட்ஸ்’ ஆப்பில் உணவு ஆர்டர் செய்தால், உங்கள் வீட்டுக்கு ஒரு ரோபோ வந்து கதவைத் தட்டி டெலிவரி தருகிறது. இதன் மூலம் உலகின் முதல் ரோபோ டெலிவரி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது உபர் ஈட்ஸ்.

`தொழில்நுட்பம் மற்றும் ரோபோட்டிக் ஆட்டோமேஷன்தான் எதிர்கால லாபத்திற்கு முக்கியமானது’ என்று நம்பும் உபர் நிறுவனம், இந்த மாதம் லாஸ் ஏஞ்சலஸ் மாநகரில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆப்ஷன் வழங்கியது. ஒன்று சாதாரண டெலிவரி, மற்றொன்று ரோபோ டெலிவரி. ரோபோ டெலிவரி தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, எவ்வாறு ரோபோக்களிடமிருந்து உணவைப் பெறுவது என்பதற்கான வழிமுறைகள் உபர் ஆப்பில் காட்டப்படுமாம். டெலிவரி ரோபோக்கள் க்யூட் மற்றும் வண்ணமயமான கார்ட்டூன்போல இருக்கின்றன... சாரி.. . இருக்கிறார்கள்.

உபர் ஈட்ஸ் நிறுவனம் இந்த ரோபோ டெலிவரி பைலட்டுகளை, `சர்வ் ரோபோடிக்ஸ்’ எனும் ரோபோடிக் டெலிவரியை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துடனும், `மோஷனல்’ எனும் தானியங்கி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்துடனும் கூட்டணி வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறது. ரோபோ டெலிவரி மூலமாக உணவு பெறும் வாடிக்கையாளர்கள் உணவின் விலையோடு சேர்த்து தனியாக ரோபோக்களுக்கும் சார்ஜ் செலுத்த வேண்டுமாம். காரணம், அமெரிக்காவில் தானியங்கி டெலிவரி செய்யும் ரோபோக்களுக்குத் தனியாக பர்மிட் வாங்க வேண்டும்.

சோதனை முயற்சி என்பதால் பாதுகாப்புக்காக, ஒரு டிரைவர் (மனிதர்) ரோபோ வாகனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது தற்காலிகம்தான். இந்தத் திட்டத்தில் பல சவால்கள் இருக்கின்றன. ரோபோக்கள் சாலைகளை முறையாகக் கடக்க வேண்டும், உணவைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் மற்றும் பணம் வசூலிக்கப்பட்டதா என்று சரி பார்க்க வேண்டும்.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை வேலையில்லாப் பட்டதாரிகளுக்குச் சோறு போடுவதே இந்த டெலிவரி பாய் வேலைதான். அதிலும் ரோபோக்கள் வந்து விட்டால்...? அவ்வ்வ்!

உபர்  ஈட்ஸில் உணவு டெலிவரி ரோபோ பாய்ஸ்!
உபர்  ஈட்ஸில் உணவு டெலிவரி ரோபோ பாய்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism