பிரீமியம் ஸ்டோரி

ன்ஸ்டாகிராம் எல்லாம் நமக்கு எதுக்கு என ஒதுங்கியிருந்த காலம் மாறி, இப்போது பலர் வாழ்வது இன்ஸ்டாகிராமத்தில் தான். சினிமா நடிகைகளுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் அளவுக்கு, இப்போது நம்ம சின்னத்திரை, வைரல் ஸ்டார்ஸ்கூட லட்சக்கணக்கில் பின் தொடரப்படுகிறார்கள். அவர்களில் ஒரு ஷார்ட் & க்யூட் லிஸ்ட் இதோ..

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோஷ்னி நடித்து வருகிறார். 'கண்ணம்மா' என்று எல்லோராலும் அறியப்படும் இவர் சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரண்ட். இன்ஸ்டாகிராமில் இவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

கேரளா டான்ஸர் ரேஷ்மா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் Dance Jodi dance என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழில் பிரபலமான இவர் 'பூவே பூச்சூடவா' என்ற சீரியலிலும் நடிக்கிறார். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை இன்ஸ்டாவில் பின்தொடர்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

'ப்ளாக் ஷீப்' யூ டியூப் சேனலில் நடித்து வருபவர். நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார். 'இவள்' என்ற வெப்சீரிஸ் மூலம் 'இவள் நந்தினி' என்று பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் 1.5 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

Vriksham என்ற பெயரில் பெண்களுக்குத் தேவையான அறிவுரைகளை ஆன்லைனில் வழங்குகிறார். முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் பராமரிப்பு டிப்ஸ்களை வழங்குகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

விஜய் டிவி 'கடைக்குட்டி சிங்கம்', ஜீ தமிழில் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி செல்வம். மாடலிங் செய்து வந்த இவர் சில படங்களிலும் நடிக்க இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 1.8 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

பிரபலமான மாடல் அனுகீர்த்தி வாஸ், திருச்சியைச் சேர்ந்தவர். 'Femina Miss India-2018' டைட்டிலை வென்றவர். பிக்பாஸ் முகேன் ராவ் உடன் இணைந்து 'வெற்றி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 1.9 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா. இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் இவரை 4 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அங்கு பெண்களுக்கு தேவையான பொருள்கள் பற்றி பேசி வருகிறார்,

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

கோவையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. 2015 'Miss Ethnic Face of Madras', 2016 'Princess of Coimbatore’ உள்ளிட்ட டைட்டில்களை வென்றவர். தற்போது இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உடன் 'பேச்சுலர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 3.5லட்சம் ஃபாலோயர்ஸ்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே-வாக பிரபலமானவர் ராகவி. தற்போது யூ டியூபிலும் கலக்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அழகுப் பொருள்களைப் பற்றியும் பேசும் ராகவியை 2லட்சத்து 16ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

காமெடி நடிகர் வடிவேலுவின் வசனங்களை தனக்கேயுரிய பாணியில் ஜாலியாக வீடியோவாக்்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதன் மூலம் வைரலானவர் பிரகதி. வடிவேலுவைப் போல் இவரது உடல்மொழிக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பேர் இவரை பின்தொடர்கிறார்கள். இவரது Scoob என்ற நாய்க்கும் இன்ஸ்டாவில் 2000 ஃபாலோயர்ஸ்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

'ரெட்டை வால் குருவி' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் பவானி. தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரை 3லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..!

விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்தவர் சஞ்சனா. தற்போது Time Enna Boss என்ற சீரிஸிலும் நடித்திருக்கிறார். இவரை 1.5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு