Published:Updated:

ஷர்ட் ஒண்ணு... ஸ்டைலு அஞ்சு!

அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா

பெரும்பாலான பெண்களின் ஃபேவரைட் உடையாக மாறியிருக்கும் பலாஸோ பேன்ட்டுக்கும் ஷர்ட் அணியலாம்.

ஷர்ட் ஒண்ணு... ஸ்டைலு அஞ்சு!

பெரும்பாலான பெண்களின் ஃபேவரைட் உடையாக மாறியிருக்கும் பலாஸோ பேன்ட்டுக்கும் ஷர்ட் அணியலாம்.

Published:Updated:
அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா

விதவிதமாக உடை அணிய யாருக்குத்தான் பிடிக்காது... பட்ஜெட் தான் பலருக்கும் பிரச்னை. அதிக செலவில்லாமல் அதே நேரம் டிரெண்டுக்கு ஏற்ற வகையில் ஒரே ஒரு ஷர்ட்டைப் பயன்படுத்தி வெரைட்டியாக ஸ்டைலிங் செய்துகொள்ள டிப்ஸ் தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.

ஷர்ட் ஒண்ணு... ஸ்டைலு அஞ்சு!

புடவை

ஜர்தோஸி, மிரர் வொர்க், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுஸ் தைக்க நிறைய செலவாகும். ஆனால், சிம்பிளாக வொயிட் ஷர்ட்டுடன் நீங்கள் புடவையை உடுத்தலாம். புடவையுடன் பிளவுஸுக்குப் பதிலாக ஷர்ட் அணிவதுதான் நியூ டிரெண்ட். ஷர்ட்டில் கடைசி மூன்று பட்டன்களைப் போடாமல் வலது புறமும், இடது புறமும் இருக்கும் ஷர்ட் முனைகளை இணைத்து முடிச்சிட்டுக் கொள்ளலாம். இதன் மேல் புடவை உடுத்த வேண்டியதுதான். புடவையின் தன்மைக்கேற்ப ஆக்ஸிடைஸ்டு, மெட்டாலிக், ஃபேஷன் ஜுவல்லரியை அணியலாம். வொயிட் ஷர்ட் எல்லாநிற புடவைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். கலர்ஃபுல் லுக் வேண்டும் என்றால் புடவையின் நிறத்துக்கு கான்ட்ராஸ்டான நிற ஷர்ட்களையும் மேட்ச் செய்யலாம்.

ஷர்ட் ஒண்ணு... ஸ்டைலு அஞ்சு!

ஸ்கர்ட்

காட்டன், சில்க் என எந்த வகை ஸ்கர்ட்டுக்கும் ஷர்ட்டை மேட்ச் செய்யலாம். சில்க் ஸ்கர்ட்டுடன் ஷர்ட்டை மேட்ச் செய்யும்போது லெஹெங்கா அவுட்ஃபிட் லுக் கிடைக்கும். ரிசப்ஷன் மற்றும் மாலை நேர நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமான உடை இது.

ஷர்ட் ஒண்ணு... ஸ்டைலு அஞ்சு!

டெனிம் பேன்ட்

டெனிம் மெட்டீரியலில் டிசைன் செய்யப்படும் பேகி பேன்ட் (Baggy Pant) இப்போது டிரெண்டில் உள்ளது. இந்த பேன்ட்டுடன் வொயிட் ஷர்ட்டும் சன் கிளாஸும் அணிந்து, ஃப்ரீ ஹேர் ஸ்டைல், செய்துகொண்டால் அசத்தலாக இருக்கும். பேகி பேன்ட் இல்லையென்றால் நார்மல் ஜீன்ஸ் பேன்ட் கூட ஓகே. பார்ட்டி, அவுட்டிங் போன்றவற்றுக்கான அவுட் லுக் இது.

ஷர்ட் ஒண்ணு... ஸ்டைலு அஞ்சு!

பலாஸோ

பெரும்பாலான பெண்களின் ஃபேவரைட் உடையாக மாறியிருக்கும் பலாஸோ பேன்ட்டுக்கும் ஷர்ட் அணியலாம். எல்லா நிற பேன்ட்டுக்கும் வொயிட் ஷர்ட் பொருத்தமாக இருக்கும். அகலமான, ஃப்ரீ ஃபிட் பலாஸோ பேன்ட் அணிந்து கட் ஷூ, சிம்பிள் ஜுவல்லரி அணிந்தால் பார்ட்டி லுக் ரெடி.

ஷர்ட் ஒண்ணு... ஸ்டைலு அஞ்சு!

பிளேஸர்

மார்டன் லுக்கில் அசத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் வொயிட் ஷர்ட்டுடன் ஜெகின்ஸ் அல்லது ஃபார்மல் பேன்ட் அணிந்து, பேன்ட்டுக்கு மேட்ச்சிங் நிறத்தில் பிளேஸர் அணியலாம். கறுப்பு நிற வெட்ஜெஸ் (Wedges), வாட்ச் போன்றவற்றை மேட்ச் செய்துகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism