Published:Updated:

அலுவலகத்தில் வரும் விமர்சனங்களை ப்ளஸ்ஸாக மாற்றுங்கள்...

Career
News
Career

விமர்சனங்கள் தான் வெற்றியின் ஆரம்பம் என சொல்லப்பட்டாலும், பணியிடங்களில் சொல்லப்படும் அதிகப்படியான விமர்சனங்கள் ஒருவிதமான மன அழுத்தத்தை தரும்.

அலுவலகத்தில் வரும் விமர்சனங்களை ப்ளஸ்ஸாக மாற்றுங்கள்...

விமர்சனங்கள் தான் வெற்றியின் ஆரம்பம் என சொல்லப்பட்டாலும், பணியிடங்களில் சொல்லப்படும் அதிகப்படியான விமர்சனங்கள் ஒருவிதமான மன அழுத்தத்தை தரும்.

Published:Updated:
Career
News
Career

விமர்சனங்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரு கண்ணாடி. விமர்சனங்கள் தான் வெற்றியின் ஆரம்பம். எனபதெல்லாம் உண்மை தான். ஆனால் பணியிடங்களில் சொல்லப்படும் நெகட்டீவ் விமர்சனங்கள் ஒருவிதமான மன அழுத்தத்தை தரும். மேலும் நாம் சரியாக வேலை செய்யவில்லையோ என எண்ணத்தை விதைக்கும், தன்னம்பிக்கையை குறைக்கும். திறமையையும் பாதிக்கும். அலுவலகத்தில் எழும் விமர்சனங்களை எந்த டென்ஷனும் இல்லாமல் எளிதாக கடந்து செல்வது எப்படி என்று வழிகாட்டுகிறார் மனிதவள மேம்பாட்டாளர் பாலமுருகன்.

பாலமுருகன்
பாலமுருகன்

விமர்சனங்களை பர்ஷனலாக எடுத்துக் கொள்ளாதீர்கள் :

அலுவலகத்தில் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வது சில நேரங்களில் சிரமமாகத் தான் இருக்கும். உங்கள் திறமையை குறைத்து எடை போடுவதாக கூட தோன்றலாம். ஆனால் விமர்சனங்கள் எல்லாம் உங்களின் திறமையின் மீதோ அனுபவத்தின் மீதோ வைப்படுகிறது என்று எண்ணாமல் அலுவலகத்தின் குறிக்கோள்கள், டார்கெட்டுகள் அதை நீங்கள் செய்து முடிக்க எடுத்துக் கொண்ட நேரம், அல்லது முழுமைத்தன்மை என அலுவலக தேவைகளோடு சம்பந்தப்பட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் அலுவலகத் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவதோடு விமர்சனங்களால் எழும் தாழ்வு மனப்பான்மையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தவறுகளைத் தட்டிக் கழிக்காதீர்கள் :

தவறுகள் என்பது மனிதனுக்கு இயல்பாக நிகழக்கூடிய ஒன்று. நீங்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அதன் மீது விமர்சனங்கள் செய்யப்படும் போது, நீங்கள் செய்த தவறை சரி என்று நிரூபிக்க முயலாதீர்கள். இந்த பழக்கம் உங்களின் மதிப்பையே கெடுத்து விடும். அதற்குப் பதிலாக கவனக் குறைவால் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால், தவறு நிகழ்ந்துவிட்டது.

Work
Work

அடுத்த முறை நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லும் போது, உங்கள் மீதான மதிப்பு உயரும். நீங்கள் செய்த தவறு என்று எதை நிறுவனமோ, அல்லது உங்கள் தலைமை அதிகாரியோ சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதை முதலில் உள்வாங்கிக் கொள்ளுங்கள். உண்மையிலேயே அது தவறு என்று திருத்திக்கொள்ளலாம். அடுத்த முறை அந்தத் தவறு நிகழாமல் பார்த்துக்கொண்டாலே, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

விமர்சனங்களை ஆராயுங்கள்

அலுவலகத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் உங்களை விமர்சிக்கலாம். விமர்சனங்கள் எல்லாம் உண்மை ஆகாது என்று கூலாக கடந்து செல்வது நல்லது தான் என்றாலும், விமர்சனங்களை ஆராயும் போது சில தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதே உண்மை.

Job (Representational Image)
Job (Representational Image)

அதனால் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை, உங்களின் நிறை குறைகளுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். விமர்சனங்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை மாற்றத்திற்கான ஆரம்பமாக நினைத்து தவற்றை திருத்திக்கொள்ளலாம். விமர்சனங்களில் உண்மையில்லையெனில் விமர்சனங்கள் தான் உங்களை மனதளவில் வலுப்படுத்தும் என நினைத்து கடந்து செல்லுங்கள்.

விமர்சனங்கள் தான் பாஸிட்டீவ் எனர்ஜி :

உங்களுக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்கவே சில சமயங்களில் உங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படலாம். அதனால் உங்களை மற்றவர்கள் விமர்சிக்கும் போது அது தவறாகவே இருந்தாலும் பொறுமையுடன் கேளுங்கள். அதன் பின் விமர்சனம் வழங்கியவர்களுக்கு ஒரு சின்ன சிரிப்புடன் நன்றி கூறுங்கள். உங்களின் இந்த ஆட்டிடியூட் உங்களை பாஸிட்டீவ் எனர்ஜி உள்ள வராகவும், மனதளவில் உறுதியானவராகவும் பிரதிபலிக்கும். அதனால் அடுத்த முறை வீண் விமர்சனங்கள் உங்கள் மீது எழ வாய்ப்பே இல்லை.

job
job
pixabay

அவசரமான ரியாக்‌ஷன்கள் வேண்டாமே :

உங்களைப் பற்றிய விமர்சனங்களை மற்றவர்கள் சொல்லும் போது அதற்கு உடனே ரியாக்ட் செய்வதை கூடுமானவரைத் தவிர்த்து விடுங்கள். அப்படி உடனடி ரியாக்‌ஷன் செய்யும் போது அது கோபமாகவோ, அல்லது அழுகையாகவோ கூட வெளிப்படலாம். இது உங்களின் மதிப்பை கெடுக்கும். எனவே மற்றவர்கள் உங்களை விமர்சனம் செய்யும் போது விமர்சனங்களை வைப்பவர் யார்? அதில் நிஜமான அக்கறை இருக்கிறதா என்பதை சில நிமிடங்கள் சிந்தித்து பாருங்கள். அதன் பின் அதற்கு தகுந்தார் போல் உங்களின் மனநிலையை வெளிப்படுத்துவது நல்லது.

Office Job
Office Job

விமர்சனங்களும், தனிப்பட்ட வளர்ச்சியும் :

உங்கள் மீது வைக்கப்படும் அதிகப்படியான விமர்சனங்கள் உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியை பாதிக்கலாம். இது போன்ற சூழலில் உங்களின் தலைமையுடன் அமர்ந்து உங்கள் பணி குறித்து உள்ள நிறை குறைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். இதுவே பணியிடத்தில் உங்களுக்கான வளர்ச்சியாக இருக்கும்.

ஆல் தி பெஸ்ட்.