Published:Updated:

திருமண உறவுகளில் `யூஸ் அண்ட் த்ரோ’ கலாசாரம்... நீதிமன்றம் வேதனை!

கேரள உயர் நீதிமன்றம்
News
கேரள உயர் நீதிமன்றம்

ஒரு பொருளைப் பயன்படுத்திய பின் வீசி எறியும் `யூஸ் அண்ட் த்ரோ’ பழக்கம், திருமண வாழ்க்கையிலும் வந்துவிட்டது வேதனையானது. சிறிய காரணங்களுக்குகூட விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

திருமண உறவுகளில் `யூஸ் அண்ட் த்ரோ’ கலாசாரம்... நீதிமன்றம் வேதனை!

ஒரு பொருளைப் பயன்படுத்திய பின் வீசி எறியும் `யூஸ் அண்ட் த்ரோ’ பழக்கம், திருமண வாழ்க்கையிலும் வந்துவிட்டது வேதனையானது. சிறிய காரணங்களுக்குகூட விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

Published:Updated:
கேரள உயர் நீதிமன்றம்
News
கேரள உயர் நீதிமன்றம்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் `யூஸ் அண்ட் த்ரோ’ நுகர்வு கலாசாரம் போல மனிதனின் திருமண வாழ்க்கையும் உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. லிவ்-இன் உறவுகள் அதிகரித்துள்ளதால் விவாகரத்துகளும் அதிகரிப்பதாக கேரள உயர் நீதிமன்றம் வேதனையுடன் கூறியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த அந்த ஆணும், இளம்பெண்ணும் 5 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தனர். அதன் பிறகு 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இனிய இல்லறத்தில் இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

காதல்
காதல்
சித்திரிப்புப் படம்

2018-ம் ஆண்டு வரை திருமண வாழ்க்கை சுமுகமாகச் சென்றது. இந்நிலையில், மனைவி என் மீது சந்தேகம் கொண்டு அடித்துக் கொடுமைப்படுத்துகிறார். ஆகவே, தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று, ஆலப்புழா குடும்பநல நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், மனைவிக்கு எதிரான குற்றங்களை அவரால் நிரூபிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு விவாகரத்து வழங்க ஆலப்புழா குடும்ப நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த உத்தரவை எதிர்த்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் அமர்வு விசாரித்தது.

தன் கணவரின் நடத்தையை, நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும் மனைவிக்கு நியாயமான கோபம் வருவது இயல்பானதுதான், அதற்காக விவாகரத்துக்கு கணவன் முறையிடுவது ஏற்புடைய தல்ல என்று கருதிய நீதிமன்றம், கணவரின் வாதங்களை நிராகரித்தது.

திருமணம்
திருமணம்
சித்திரிப்புப் படம்

``தன் கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவை வைத்திருப்பதை அறிந்த ஒரு மனைவியின் இயல்பான மனித எதிர்வினைகளை வைத்து மனைவியின் நடத்தையை அசாதாரணம் அல்லது கொடுமை என்று கூற முடியாது" என்று தீர்ப்பளித்தது.

மனைவிக்கு அவரின் மாமியார் மற்றும் அவரின் கணவரின் உறவினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் கணவரின் குடும்பத்தினர் அனைவரும், ``அவர் குடும்பத்தை நேசிக்கும் நல்ல குணமுள்ள பெண்” என்று கூறியதாகத் தனது உத்தரவில் குறிப்பிட்டது உயர் நீதிமன்றம்.

வெறும் சண்டைகள், திருமண உறவுகளின் சில உணர்வுகளின் சாதாரண வெளிப்பாடுகள் போன்றவை விவாகரத்துக்கு முகாந்திரம் அளிக்கும் கொடுமைகளாகக் கருத முடியாது என்று கூறியது.

உயர் நீதிமன்றம் வேதனை

நீதிபதிகள் வேதனையுடன் கூறியிருப்பதாவது:

``கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, ஒரு காலத்தில் நன்கு பிணைக்கப்பட்ட குடும்ப அமைப்பைக் கொண்டிருந்தது. திருமண பந்தம் மிகவும் உறுதியாக இருந்தது. திருமணம் என்பது பாலியல் தூண்டுதலுக்கு உரிமம் வழங்குவதற்கான வெற்று சடங்கு அல்ல... திருமணங்கள், பழங்காலத்திலிருந்தே, புனிதமானவையாகக் கருதப்பட்டன. வலுவான சமுதாயத்தின் அடித்தளமாக இருந்த திருமணங்களின் நிலை இப்போது, தலைகீழாக மாறிவிட்டது.

ஒரு பொருளைப் பயன்படுத்திய பின் வீசி எறியும் `யூஸ் அண்ட் த்ரோ’ பழக்கம், திருமண வாழ்க்கையிலும் வந்துவிட்டது வேதனையானது. சிறிய காரணங்களுக்குகூட விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

குடும்ப அமைப்பு
குடும்ப அமைப்பு

இன்றைய இளைஞர் சமூகம், தனது சொந்த விருப்பத்தின்படி வாழ, திருமண பந்தத்தைப் பெரும் இடையூறாகக் கருதுகின்றனர். எப்போது வேண்டுமானாலும் குட்பை சொல்லி பிரிந்து போகின்ற, `லிவிங் டுகெதர்’ உறவு போல் வாழவே விரும்புகின்றனர். இப்படியே போனால் வருங்காலத்தில் ஆதரவற்றோராகும் குழந்தைகள் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துவிடும்.

இது சமூகத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த சமூகத்தில் இந்த நிலை அதிகரிப்பது நல்லதல்ல. அது நமது சமூக வாழ்க்கையின் அமைதியை மோசமாக பாதிக்கும்.

சுயநல காரணங்களுக்காக அல்லது திருமணத்துக்குப் புறம்பான உறவுகளுக்காக, தங்கள் குழந்தைகளைக்கூட பொருட்படுத்தாமல் திருமண பந்தத்தை முறித்துக்கொள்வது போல் தெரிகிறது. குழப்பத்தால் அழிந்த குடும்பங்களில் இருந்து வெளிவரும் அலறல் சப்தம் மனசாட்சியை உலுக்கக்கூடியது'' என்று தெரிவித்த நீதிபதிகள் கணவரின் விவாகரத்து மனுவை மறுத்தனர்.