Published:Updated:

`நான் அவன் இல்லை' ரக ஆண்களை கண்மூடித்தனமாக நம்பும் பெண்கள்! என்ன மாதிரியான உளவியல் அது?

மோசடி ஆண்கள்; நம்பும் பெண்கள்
News
மோசடி ஆண்கள்; நம்பும் பெண்கள்

``சில பெண்கள் அவர்கள் காதலிக்கிற நபர்களின் நெகட்டிவ் பக்கத்தை எவ்வளவுதான் ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். இதுவும் ஒரு வகை போதை நிலைதான்.''

`நான் அவன் இல்லை' ரக ஆண்களை கண்மூடித்தனமாக நம்பும் பெண்கள்! என்ன மாதிரியான உளவியல் அது?

``சில பெண்கள் அவர்கள் காதலிக்கிற நபர்களின் நெகட்டிவ் பக்கத்தை எவ்வளவுதான் ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். இதுவும் ஒரு வகை போதை நிலைதான்.''

Published:Updated:
மோசடி ஆண்கள்; நம்பும் பெண்கள்
News
மோசடி ஆண்கள்; நம்பும் பெண்கள்

ஒரு நபரை தான் காதலிக்கிறோம் என்கிற ஒரே காரணத்தால் `அவர் ரொம்ப நல்லவர்' என்று கண்மூடித்தனமாக நம்புகிற பெண்களை நாம் அனைவருமே சந்தித்திருப்போம். ஆனால், நீங்கள் நம்புகிற நபர் ஒரு மோசடிப் பேர்வழி; அவர் ஏற்கெனவே திருமணமானவர்; உங்களை அவர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்று காவல்துறையினர் சொல்லியும் நம்பாத பெண்கள் பற்றித் தெரியவரும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்திருக்கிறது. அந்த ஆண் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவன். பெயர் பயாஸ். சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களை மனரீதியாகவும் பண ரீதியாகவும் மோசடி செய்து வந்திருக்கிறான். பல பெண்களிடம் திருமணம் செய்வதாகக் கூறியும் பயன்படுத்தி வந்திருக்கிறான். சமீபத்தில் இந்த நபரை ஆரணி காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். பயாஸை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துகொண்டிருக்கும் போது, அவனுடைய செல்போனுக்கு பல பெண்கள் போன் செய்திருக்கின்றனர். அவர்களிடம் எல்லாம், `அவன் ஏற்கெனவே திருமணமானவன்; அவன் உங்களையெல்லாம் மோசடி செய்து வந்திருக்கிறான்; அவனை இனிமேலும் நம்பாதீர்கள்; அவனுக்கு போன் செய்யாதீர்கள்' என்று காவல்துறையினர் அறிவுரை கூறியிருக்கின்றனர்.

ஆண் - பெண்
ஆண் - பெண்

பதிலுக்கு அந்தப் பெண்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? போன் செய்த பெண்களில் சிலர், `அவர் ரொம்ப நல்லவர்' என்று போலீஸாரிடமே வாதாடியிருக்கின்றனர். சில பெண்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று `அவர் விடுதலையாகி வந்தவுடன் அவரைத்தான் திருமணம் செய்வேன்' என்றும் பிடிவாதம் பிடித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட பெண்களை `நான் அவனில்லை' என்பது போன்ற சில சினிமாக்களில்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜத்தில் சில பெண்கள் இப்படி இருப்பதற்கு உளவியல் பின்னணி என்னவென்று உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கரிடம் கேட்டோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எப்படிப் பேசினால் பெண்களை வசப்படுத்த முடியும் என்கிற உளவியல் அந்த நபருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. பெண்களுடைய உணர்வுகளைத் தொடுகிற அளவுக்குப் பேசவும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. சில பெண்கள் அவர்கள் காதலிக்கிற நபர்களின் நெகட்டிவ் பக்கத்தை என்னதான் ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். `யார் என்ன சொன்னாலும் நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்' என்பதிலும் கண்மூடித்தனமான உறுதியுடன் இருப்பார்கள். கிட்டத்தட்ட அந்த ஆணுக்கு அடிமையான மனநிலையில் பெண் இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு மயக்கத்துடன் இருப்பார்கள். இதுவும் ஒரு வகை போதை நிலைதான். இப்படிப்பட்ட பெண்களுக்கு எப்படி விளக்கிச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் முதல் வகையினர்.

உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

இரண்டாம் வகையினர், `நான் அவரை நம்பி என் உடல், பொருள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர்தான் என் வாழ்க்கை' என்பதில் உறுதியாக இருப்பார்கள். மூன்றாவது வகையினர், `அவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் என்னிடம் அன்பாக இருக்கிறான். அதனால் அவனை எப்படியாவது திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்துவிடுவேன்' என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அந்த ஆணை நம்பிக்கொண்டிருப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படிப்பட்ட பெண்களிடம் கேட்பதற்கு ஓர் உளவியல் ஆலோசராக என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. மோசடிப் பேர்வழி என்று தெரிந்தும் ஓர் ஆணை நம்புவதை உங்களுடைய பலம் என்று நினைக்கிறீர்களா அல்லது பலவீனம் என்று நினைக்கிறீர்களா? பலம் என்று நினைத்தால், அதனால் உங்கள் மனம், உடல், பொருள் அனைத்தும் பறிபோய் விடுவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம். எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தின் கண்களுக்கு முன்பாக உங்களுடைய சுயமரியாதையையும் இழந்துவிடுவீர்கள். இவற்றுக்கெல்லாம் நீங்கள் தயாரா என்று பலமுறை யோசித்து நல்ல முடிவை எடுங்கள்.

பெண் - ஆண்
பெண் - ஆண்
Representational Image
உங்கள் நம்பிக்கைக்கு ஒரு பாஸ் பட்டனை அழுத்திவிட்டு அவனைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தேட ஆரம்பியுங்கள்.''
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

ஒருவேளை `என் பலவீனத்தால்தான் அந்த மோசடி நபரை நம்பினேன்' என்பதைப் புரிந்துகொண்டால், எந்த இடத்தில் உங்கள் பலவீனம் அந்த மோசடியாளனை நம்பியது என்பதை யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். இப்படி யோசிக்க ஆரம்பித்தால், அவனுடனான உறவுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதையும் நீங்களே முடிவெடுத்து விடுவீர்கள். ஆதலால் பெண்களே... நீங்கள் நம்பி நேசிக்கிறவன் நல்லவன் இல்லை என்று யாராவது சொன்னால் அதை அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லைதான்.

ஆனால், நீங்கள் நேசிக்கிற ஒரே காரணத்தாலேயே அந்த ஆண் நல்லவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் உங்கள் நம்பிக்கைக்கு ஒரு பாஸ் பட்டனை அழுத்திவிட்டு அவனைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தேட ஆரம்பியுங்கள். நல்லவன் என்றால் காதல் தொடரட்டும். கெட்டவன் என்றால் பிரேக் அப் மட்டுமே உங்கள் வாழ்க்கையையும் சுயமரியாதையையும் காப்பாற்றும்" என்கிறார் சரஸ் பாஸ்கர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism