சமையல் கலை

''சமையல்ங்கறது ஒரு வேலை இல்லை. அது ஒரு கலை; உலகில் எல்லோரையும் உயிர்வாழ வைக்கிற உன்னத கலை. சமையல் கலைக்கு சமமா எதையுமே சொல்ல முடியாது!''

- ரசித்துப் பேசுகிறார் சூர்யா கணேஷ். இவர்... கடுகு, மிளகு வித்தியாசம் தெரியாதவர்களுக்குகூட, 'ஒரே வாரத்தில் சமையலில் கில்லாடி ஆகலாம்..!’ என்று கியாரன்ட்டி கொடுத்து சமையல் பாடம் நடத்தும் 'குக்கரி டீச்சர்'!

மைசூரில், 40 ஆண்டுகளாக, தலைமுறைகள் தாண்டியும் பல கைகளுக்கு, உலகின் பற்பல வெரைட்டி சமையல்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் இந்த தமிழ்ப் பெண்மணி!

. ''பிறந்து, வளர்ந்தது எல்லாம் பெங்களூருதான். கணவர் கணேஷோட ஊர், திண்டுக்கல். கல்யாணத்துக்குப் பிறகு மைசூர்ல செட்டில் ஆயிட்டோம்!'' என சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்ட சூர்யா, சமையல் வகுப்பெடுக்க வந்த பின்னணியில் இருந்து பேச்சை ஆரம்பித்தார்..
''அக்கா, தங்கை, நான்னு எல்லாரையும் பொழுதுபோக்குக்காக, 1968-ம் வருஷத்துல சமையல் கிளாஸுக்கு அனுப்பினாங்க எங்கம்மா. கிளாஸ் முடிச்சவுடன், ஆளுக்கு ஒரு 'மைக்ரோவேவ் அவன்’ வாங்கிக் கொடுத்தாங்க. சகோதரிகள், அதை பரண்ல போட்டுட்டாங்க. ஆனா, என்னோட 'அவன்’, என் வாழ்க்கைக்கு பெரிய சப்போர்ட்டா ஆனதுல எனக்கு ஆனந்த ஆச்சர்யம்!'' என்றவர்,

''எனக்கு ரெண்டு பசங்க பிறந்து, அவங்க ஸ்கூலுக்குப் போனபிறகு, கேட்டரிங் கிளாஸ், பேக்கிங் கிளாஸ்னு கத்துக்கிட்டேன். ஒரு தடவை பக்கத்து வீட்டுல இருந்தவங்க, அவங்க மகளுக்கு சமையல் சொல்லித்தரச் சொன்னாங்க. ஒரே வாரத்தில் இந்திய சமையல்ல அவளை எக்ஸ்பர்ட் ஆக்கினேன். அவளோட கைப்பக்குவத்தை ரசிச்ச வங்ககிட்ட எல்லாம், அவ என்னைக் கைகாட்ட, அக்கம்பக்கத்துல நிறைய பேர் வந்துட்டாங்க. கூட்டம் பெருகினதால, அதை ஒருங்கிணைக்க ஒரு ஒழுங்குமுறை தேவைப்பட்டது. கைடு தயாரிச்சு, நோட்ஸ் கொடுத்து, பல பேட்ச்களா வகுப்புகளைப் பிரிச்சு... முறையான 'குக்கிங் ஸ்கூல்’னு என் வீட்டுக் கிச்சன் மாறினது, அப்போதான்! பாட்டி, அம்மா, பேத்தினு மூணு தலைமுறையா எங்கிட்ட சமையல் சூட்சமம் கத்துக்கிட்டவங்களும் உண்டு!'' எனும் சூர்யா, இதுவரை 2,000 பேருக்கும் மேல் சமையல் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

''சிட்டி பெண்கள் பலரும், திருமணத்துக்கு நாள் குறிச்ச பின்தான், 'எப்படியவாது ஒரு மாசத்துல சமையல் கத்தாகணும்!’னு வந்து நிப்பாங்க. சிம்பிள் சமையல்ல ஆரம்பிச்சு, சூப்பர் டூப்பர் விருந்து வரை எளிமையான முறையில கத்துக்கொடுப்பேன். நான் கொடுக்கிற நோட்ஸ், காரைக்குடி வத்தக்குழம்பு, கேரளா இடியாப்பம், வட இந்தியா பரோட்டா வகைகள்னு விதவிதமான சமையல்கள், அவங்க சந்தேகங்களை பொறுமையா களையற ஃப்ரெண்ட்லியான அணுகுமுறை... இதெல்லாம் என் ஸ்டூடன்ட்ஸ்கிட்ட எனக்கு 'குட் மாஸ்டர்’ பெயரை வாங்கிக் கொடுத்துச்சு.

கேக், பிஸ்கட், பப்ஸ்னு பேக்கரி வகைகளையும், இத்தாலி, சைனீஷ், மலேஷியன், இந்தியன்னு இன்டர்நேஷனல் ரெசிபிகளையும் இப்போ எல்லாரும் ஆர்வமா கத்துக்கிறாங்க'' எனும் சூர்யாவுக்கு, இளம் பெண்களில் ஆரம்பித்து அரசுத்துறை உயர் அதிகாரிகள், கல்லூரிப் பேராசிரியைகள், டாக்டர்கள், வெளிநாட்டவர்கள் என விரிகிறது மாணவக் கூட்டம்.

''கணவரோட பிஸினஸ் ரொம்பவே டல்லாகி சிரமப்பட்டப்போ, குடும்பச் செலவுகளை தாங்கினது, பொழுதுபோக்குக்காக நான் கத்துக்கிட்ட சமையல்கலை தந்த வருமானம்தான். இப்ப இன்ஜினீயரா இருக்கிற ரெண்டு மகன்களையும் படிக்க வெச்சதும், என் கிச்சன்தான். தனியார் மைக்ரோவேவ் அவன் நிறுவனத்துக்கு என்னைக் 'குங்கிங் அட்வைஸரா’ நியமிச்சு இருக்கிறது, சமீபத்திய சந்தோஷம். இப்படி என் வாழ்க்கை முழுக்க இந்த சமையல்கலை எனக்குத் தந்திருக்கிற சந்தோஷங்கள் நிறைய!'' என்று நெகிழ்ந்தவர்,

'' 'என்ன தெரியும் எனக்கு?’னு நொந்துக்காம, தெரிஞ்ச சமையலைக் கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம், சாதிக்கலாம்!'' என இல்லத்தரசிகளுக்கு இனிப்பான வார்த்தைகள் சொல்லி முடித்தார் சூர்யா கணேஷ்