போராட்டம்

'உரிமையை அடைய வேண்டுமானால், போராடக் கற்றுக் கொள்ளுங்கள்!’

'பெண்ணிடம் மோதினால், சுக்குநூறாவார்கள்!’

'ஒவ்வொரு கிராமமாகப் போவோம். புதிய சுதந்திரம் பெறுவோம்!’

'குலாபி கேங்... ஜிந்தாபாத்!’

- இந்தியில் தொண்டைகிழிய கோஷமிடுகிறார்கள், 'குலாபி கேங்’ பெண்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தின் புன்தில்கண்ட் பகுதியில் கைகளில் கம்புகளை ஏந்தி, பிங்க் நிறப் புடவைகள் அணிந்து இவர்கள் போராட்டத்தில் இறங்கினால், வரதட்சணையில் இருந்து அரசு இயந்திரத்தின் அலட்சியம் வரை அத்தனை பிரச்னைகளும் தீர்வை நெருங்குகின்றன!

பாந்தா, ஜலோன், ஜான்சி, ஹமீர்பூர், சித்ரகுட், மஹோபா மற்றும் லலித்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி, புன்தில்கண்ட். ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில எல்லைகளில் அமைந்துள்ள இப்பகுதி, கல்வித் தரத்தில் பின்தங்கி, தொழிற்சாலைகள் இன்றி, வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி, அரசியல்வாதிகள் எட்டியும் பார்க்காத... இந்தியாவிலேயே மிகவும் வறட்சிப் பகுதி; புறக்கணிக்கப்பட்ட பகுதி.

இங்குதான் புரட்சியாக வெடித்து இருக்கிறது, 'குலாபி கேங்’ பெண்கள் அமைப்பு! குடிகாரக் கணவன், காதலித்து கைவிட்டவன், நிலப்பட்டா தர லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், அடக்கியாளும் காவல்துறையினர் என... எல்லாப் புகார்களும் இவர்களைத் தேடி வருகின்றன. பிரச்னைக்கு ஏற்றபடி ஐம்பதில் இருந்து ஆயிரம் வரை எனக்கூடும் இப்பெண்கள், கைகளில் கம்பு, பிங்க் நிறப் புடவைகளுடன் போராட்டத்தில் இறங்க, அடிமைப்படுத்தும் கணவன் தொடங்கி, அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு அநியாயம் செய்பவர்கள் வரை வழிக்கு வந்துவிடுகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்ட அமைப்பின் நிறுவனர், தலைவி... சம்பத் பால். ஐம்பது வயதாகும் இவரை, 'அத்ரா’ எனும் சிறிய ஊரில் உள்ள 'குலாபி கேங்’ தலைமை அலுவலகத்தில் சந்தித்தோம்.

''சிறுவயது முதலே போராட்டக் குணம் கொண்டவள் நான். 'எப்போது பார்த்தாலும் என்னை மட்டும் வீட்டில் அடைத்து வைத்து, அண்ணனை மட்டும் வெளியில் அனுப்புகிறீர்களே? அவனுக்கு உள்ள உரிமை எனக்கு ஏன் இல்லை?’ என்று சண்டையிடுவேன். இந்த நிலையில், ஆறாம் வகுப்பு முடித்த கையோடு, அதாவது 12 வயதில் மணம் முடித்துவிட்டனர். தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடியே இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து, புகுந்த வீட்டில் நிறைய அடக்குமுறைகள். கொடுமையாக இருக்கிறதே என்று பொங்கினாலும், கணவர் ராம்பிரசாத் எனக்கு ஆதரவாக இருந்ததால், அமைதியாக இருந்தேன்.

ஒரு குழந்தை பிறந்தபின், என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அடிமைப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்தேன். எனக்கு சுதந்திரம் கிடைத்தது. அடுத்து, அக்கிராமத்து பெண்களுக்கான பிரச்னைகளிலும் மெள்ள தலையிடத் துவங்கினேன். பெண்கள் சுயமாக சம்பாதிப்பதே அவர்களின் பிரச்னைகளுக்கான விடிவாக இருக்கும் என்பதால், அரசாங்க உதவி மூலம் பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதிலும் முனைந்தேன்'' என்பவர், பல பெண்களையும் முதல் முறையாக ஓர் குடையின் கீழ் ஒன்றிணைத்தது, அந்த முக்கியக் கோரிக்கைக்காக.

''அத்தரியில் மிக மோசமான நிலையில் இருந்தது அந்த முக்கிய சாலை. ரிக்ஷாக்காரர்கள்கூட சவாரிக்காக வரத் தயங்கும் சாலையை சீர்செய்ய, பெண்களை ஒன்றுபடுத்திப் போராட முடிவெடுத்தேன். சம்பந்தப்பட்டவர்களின் கவனம் ஈர்க்க வேண்டியும், எங்களுக்கு ஒரு அடையாளம் தேவை என்பதாலும், நூறு பெண்களும் பிங்க் நிறப் புடவை அணிந்து, மாவட்டக் கலெக்டர் அலுவலகம் சென்று கோஷமிட்டு, போராடினோம். கலெக்டரை வற்புறுத்தி, மூன்று கி.மீ. தூரம் வரை நடந்து வந்து சம்பந்தப்பட்ட சாலையை பார்வையிட வைத்தோம். ஒரே வாரத்தில் சாலை சரிசெய்யப்பட்டது!'' - இந்த முதல் வெற்றி, அவர்களை இன்னும் பல போராட்டங்களை முன்னெடுக்க வைத்து இருக்கிறது.

''ரேஷன் கடையின் உணவுப் பொருட்களுடன் கடத்தப்பட்ட இரு லாரிகளை மடக்கி, போலீஸுக்கு போன் செய்தோம். அவர்கள் வரவில்லை. 'அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போலீஸ், பொதுமக்களுக்குச் சேரவேண்டிய பொருட்களை திருடுபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்களே... இவர்களைவிட, நன்றியுடைய நாய்களே நமக்கு சிறந்த பாதுகாப்பு’ என்பதை உணர்த்தும்விதமாக, சுமார் 500 நாய்களுடன் காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலம் நடத்தினோம். ரேஷன் திருடர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டனர்.

இதுபோன்ற சில தொடர் போராட்டங்களுக்குப் பின் மக்கள் எங்களை 'குலாபி கேங்’ என்று அழைக்கத் துவங்க, அதையே எங்கள் குழுவின் பெயராக 2003-ம் ஆண்டில் பதிவு செய்தோம். எங்கள் சேவைகள் குறித்துக் கேள்விப்பட்டு அக்கம், பக்கம் உள்ள கிராமம் மற்றும் மாவட்டத்தினரும் எங்கள் அனுமதியுடன் ஆங்காங்கே ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டனர். இப்போது எங்கள் 'குலாபி கேங்’... ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது!'' எனப் பெருமிதம்கொள்ளும் சம்பத் பால், சிலசமயம் அராஜக போலீஸ் மற்றும் அதிகாரிகளிடம் கைகளை ஓங்கவும் தயங்குவதில்லை. 'குலாபி கேங்’ கையிலிருக்கும் தடிகள், பெண்களை டார்ச்சர் செய்பவர்களை பதம் பார்ப்பதும் உண்டு. இதனால் சிறைவாச அனுபவமும் உண்டு சம்பத் பாலுக்கு. எனினும், எதற்கும் அசரவில்லை அவர்.

சம்பத் பாலின் உதவியாளரான அறுபது வயது ஜெயப்பிரகாஷ் ஷிவ்ஹரே நம்மிடம், ''பெண் கல்வியின் அவசியம், அரசியல் பங்களிப்பு, எதிர்க்கவேண்டிய குடும்ப அடக்குமுறை என இவற்றை அவர்களிடம் சேர்க்க சம்பத் பால் எடுத்து இருக்கும் ஆயுதம், பாடல்கள். இவை படிப்பறிவு இல்லாத பெண்களுக்கும் விஷயத்தை ஆழமாக உணர்த்திவிடுகிறது. பஞ்சாயத்துத் தேர்தலில் பெண்கள் வென்றாலும், அப்பா, கணவர் என அவர்களை இயக்க, பெண்கள் டம்மியாகவே இருந்தனர். இதை தன் பாடல்கள் மூலம் இவர் சாட, அதுவரை ரப்பர் ஸ்டாம்புகளாக இருந்த பெண்கள், ஆண்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சுயமாக செயல்பட ஆரம்பித்தனர். பஞ்சாயத்துத் தேர்தலில், 'குலாபி கேங்’ சார்பாக போட்டியிட்ட 23 வேட்பாளர்களில், 21 பேர் வென்றனர்!'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

இந்த வெற்றி, இங்கு மட்டுமல்ல... இந்தியா தாண்டி உலகம் முழுவதும் குலாபி கேங் மீது கவனத்தை திருப்பியிருக்கிறது. பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவர், சம்பத் பாலின் சேவைகளை நூலாக எழுதி, பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளார். இந்த 'கேங்’ பற்றிய ஒரு டாக்குமென்ட்ரி படம், லண்டனில் பல விருதுகளை வென்றுள்ளது. அங்குள்ள 'கார்டியன்’ எனும் ஆங்கில நாளிதழ், கடந்த மார்ச் மாதம் தேர்ந்தேடுத்து வெளியிட்ட உலகின் சிறந்த பெண்மணிகளில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்களுள், சம்பத் பாலும் ஒருவர். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில், இந்த 'கேங்’ பற்றி ஆய்வும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் நடந்த 'குளோபல் வுமன் ஃபோரம் ஃபார் எகனாமி அண்ட் சொசைட்டி’க்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக் கிறார் சம்பத் பால்.

பல அரசியல் கட்சிகளும் வலைவீசிய 'குலாபி கேங்’கின் தலைமை கமாண்டர் சம்பத் பாலுக்கு, அடுத்த வருடம் வர இருக்கும் உ.பி தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

''களம் எதுவாக இருந்தாலும், நேர்மையான போராட்டமும், நல்ல தீர்வுமே எங்கள் நோக்கம்!''

- தீர்க்கத்துடன் காத்திருக்கிறார் அந்தப் போராளி !