''ஒரு நாள் பள்ளிக்கூடம் போனா, மூணு நாளைக்கு மட்டம் போட்டுட்டு நாடகம், டான்ஸுனு கௌம்பிப் போன வயசுங்க அது. எம்.ஜி.ஆர் படம்னா... வாரம் முழுக்க ஸ்கூலுக்கு 'கட்’தான். இந்த நிலையில, 'ஒரு தாய் மக்கள்’ங்கிற படத்தோட ஷூட்டிங்குக்காக கோயம்புத்தூருக்கு எம்.ஜி.ஆர். வந்திருக்கிறதா சேதி கேட்டா எப்படி இருக்கும்?! யூனிஃபார்மோட அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்னால போய் காலை, மாலைனு நிக்க ஆரம்பிச்சுட்டேன். எந்த காரு அந்தப் பக்கமா போனாலும், 'எம்.ஜி.ஆர். இருப்பாரோ!'னு கை காட்டுவேன். ஸ்கூலுக்கும், வீட்டுக்கும்

தெரிஞ்சு, அடி பின்னி எடுத்த தாலும், அந்த ஹோட்டல் முன்னால நிக்கறத நான் நிறுத்தல. தொடர்ந்து என்னைக் கவனிச்ச எம்.ஜி.ஆர்., ஒரு நாள் கூப்பிட்டுப் பேசினார். என்னோட நடிப்பு ஆர்வத்தைக் கேட்டு, நடிக்கச் சொல்லி பார்த்து ரசிச்சார். இந்த விஷயம் தெரிஞ்ச பிறகுதான், என்னோட சினிமா ஆசைக்கு எங்க வீட்டுல க்ரீன் சிக்னல் காட்டினாங்க.!''

''1995-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்போ, 'சங்கம் கலா’ குரூப் நடத்தின இசைப் போட்டிக்கு, சிறப்பு விருந்தினரா ஏ.ஆர்.ரஹ்மான் சார் வந்திருந்தார். இறுதியா தேர்வான நாலு சிறுமிகள்ல, நானும் ஒருத்தி. எங்க வாய்ஸை தியேட்டர்ல ரெக்கார்ட் செய்து பார்க்கலாம்னு ரஹ்மான் சார் சொல்ல, அங்கேயும் போய் வாய்ஸ் கொடுத்தோம். ஆறு மாதம் கழிச்சு ஒருநாள் திடீர்னு சுஹாசினி மேடம்கிட்ட இருந்து போன். ''நாங்க 'இந்திரா’னு ஒரு படம் எடுக்கப் போறோம். அதுல நீ ஒரு பாட்டுப் பாடணும். மியூசிக், ஏ.ஆர்.ரஹ்மான்..!’'னு சொன்னார். நம்பவே முடியல. 'இந்திரா' படத்தில் வரும் 'நிலா காய்கிறது... நேரம் தேய்கிறது...’ பாட்டுத்தான் அது. நான் பாடகியா அறிமுகம் ஆனது... அந்த 14 வயதில்தான்!''

''மதுரை, சென்ட்ரல் ஸ்கூலில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். கோடை விடுமுறையில், அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்திய அளவில் வருடா வருடம் நடைபெறும் மாணவர்களுக்கான மலை ஏறும் பயிற்சிக்கு, நானும் தேர்வாகி இருந்தேன். டேராடூன் நகரில் நடந்த பயிற்சி முகாமில், இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் 30 மாணவிகள் கலந்து கொண்டோம். ஐ.ஏ.எஸ். முடித்து, பயிற்சிக்காக வந்திருந்தவர்களை அங்கே சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஐ.ஏ.எஸ். என்பதை ஒரு படிப்பு என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு, 'ஐ.ஏ.எஸ்.’ என்கிற கிரேடின் மதிப்பு, பவர் எல்லாமே அதன் பிறகுதான் புரிந்தது. 'ஐ.ஏ.எஸ் படிப்பின் சிறப்பையும், அந்தப் படிப்பால் கிடைக்கும் பதவியையும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும்' என்கிற தேடலை அங்கிருந்தே ஆரம்பித்தேன்... அந்த 14 வயதில்!''

''சின்னச் சின்ன மேடைங்கள்ல மட்டுமே பாடிக்கிட்டிருந்த இந்த சின்னபொண்ணு, முதன்முதலா தேவா சாரோட இசையில ரெக்கார்டிங் தியேட்டர்ல பாடினது பதினாலு வயசுலதான். அதுல இன்னொரு சந்தோஷம்... அப்போ பிரபலமா பாடிட்டிருந்த சசிரேகா மேடத்தோட சேர்ந்து பாடினேன்கிறதுதான். 'சூரிய தோரணங்கள்’ங்கற பேர்ல வந்த ஆல்பம் அது! இப்போ எல்லாருக்கும் தெரியற அளவுக்கு இந்த சின்னபொண்ணு இருக்கறதுக்கு திருப்புமுனையா அமைஞ்சது அந்த ஆல்பம்தான்!

''கடலூர் மாவட்டம், அகரத்துல இருந்து மூணு கிலோமீட்டர் தொலைவுல இருக்கற பரங்கிப்பேட்டையிலதான் படிச்சேன். ஒருநாள் ஸ்கூல் போயிட்டிருந்தப்ப... வழியில மோட்டார் சைக்கிள் விபத்துல சிக்கி கீழ விழுந்து கிடந்தார் எங்க ஊரை சேர்ந்த ராமஜெயம்! அக்கம்பக்கம் இருக்கறவங்க, அவரை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனாங்க. ஊர்க்கார பொண்ணுங்கற முறையில, நானும் கூடவே போனேன்... ஸ்கூல் போறதை தவிர்த்துட்டு. இதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம். இதுவே நாளாக எங்களுக்கு காதலா உருமாறிடுச்சு. பல போராட்டங்களை கடந்து, வீட்டு சம்மதத்தோட கல்யாணம் நடந்துச்சு. எங்க காதல் துளிர்க்கக் காரணமா இருந்த அந்த சின்ன விபத்து நடந்தப்போ என்னோட வயசு 14.''