''ஒருவழியா எங்க செல்வம் புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் வெச்சுருக்கார். நீங்க இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்!''

- அன்புக் கட்டளையோடு வரவேற்றார் 'திருமதி செல்வம்’ டைரக்டர் குமரன்!

ஒரு சாதாரண மெக்கானிக்காக இருந்த செல்வம் (சஞ்சீவ்), தன் உழைப்பாலும், மனைவி அர்ச்சனாவின் (அபிதா) உந்துதலாலும் முன்னேறி, இன்று மூன்று கோடி ரூபாய் மதிப்பில் வீடுகட்டி, கிரஹப்பிரவேசம் வைக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார். தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உதவியாக இருந்தவர்கள் அத்தனை பேரையும் விசேஷத்துக்கு அழைக்கிறார்கள் செல்வம் - அர்ச்சனா தம்பதி... தன் அப்பா, சித்தியைத் தவிர!

கிரஹப்பிரவேசத்தன்று, திடீரென போலீஸ் வந்து செல்வம் தம்பதியைக் கைது செய்ய... சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் 'விகடன் டெலிவிஸ்டாஸ்' வழங்கும் 'திருமதி செல்வம்’ நெடுந்தொடரின் விறுவிறுப்பு, அடுத்த கட்டமாக இப்படி மேலும் பல மடங்கு கூடுகிறது!

மாவிலைத் தோரணம், வாழைமரம் கட்டி, சீரியல் பல்புகளுடன் சென்னை, புறநகர்ப் பகுதியான வளசரவாக்கத்தில் மின்னிக் கொண்டு இருந்த புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டில் 'கிரஹப்பிரவேச’ ஷூட்டிங். டைரக்டர் குமரனின் அனுமதி வாங்கி, ஒரு பிரேக்கில் ஆர்ட்டிஸ்ட்டுகள் அனைவரையும் வீட்டுத் தோட்டத்துக்குக் கடத்தினோம்!

''போதும்ப்பா! எவ்வளவு நேரந்தான் ரெண்டு பேரும் அந்தக் குட்டிக் காத்தாடியை (எலெக்ட்ரானிக் ஹேண்ட் ஃபேன்) வெச்சு ஸீன் போட்டுட்டு இருப்பீங்க?! மேக்-அப் எல்லாம் கலையாது... வந்து சேருங்க!'' என செல்வம் மற்றும் வாசு (டிங்கு) ஆகியோரை செல்வத்தின் உயிர் நண்பன் சிவா (விஜய்) கலாய்க்க, ''ஏய்... பப்ளிக்... பப்ளிக்!'' என்று பதறியபடியே பாய்ந்து வந்தார்கள் இருவரும்!

''சீரியல் ஆரம்பிச்ச நாலு வருஷமா கிரீஸ் அப்பின காட்டன் பேன்ட், அழுக்குச் சட்டைனு பரிதாப காஸ்ட்யூம்ல வந்த மெக்கானிக் அண்ணன்... இப்போ கோட், சூட்டுனு என்னமா கலக்கு கலக்குறாரு?! போதாததுக்கு, கிரஹப்பிரவேசத்துக்கு பட்டு வேட்டி, சட்டை எல்லாம். புது மாப்பிள்ளை மாதிரி இருக்கடா!'' என்று வாசு பொறாமைப் பெருமூச்சுவிட,

''ஹீரோடா!'' என்று ஒற்றை வார்த்தை சொல்லி பொறாமைத் தீயில் எண்ணெய் வார்த்தார் செல்வம்!

சிவகாமி அத்தை (வடிவுக்கரசி) வருவதைப் பார்த்த செல்வம், மற்றவர்களின் காதில் ஏதோ கிசுகிசுக்க, அவர்களும் 'ஓகே' சொன்னார்கள். உடனே, ''அத்தை... நான் உங்ககிட்ட ரொம்பநாளா ஒண்ணு கேட்கணும்னு இருந்தேன்...'' என இழுக்க,

''சொல்லுங்க மாப்பிள்ள! என்னோட பொண்ணை மகாராணி மாதிரி வெச்சுருக்கீங்க. நீங்க என்ன கேட்டாலும் செய்றேன்!'' என தானும் ஆட்டத்துக்கு ரெடியானார் அத்தை.

''அத்தை... உங்களோட வெயிட் என்னனு தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எனக்கு மட்டுமில்ல... ஒட்டுமொத்த டீமுக்கும்! ஒரே ஒரு தடவை... உங்களைத் தூக்கிப் பார்த்து உங்க வெயிட்டை கண்டுபிடிச்சுடறேன்!'' என்று செல்வம் ரெடியாக,

''அடப்பாவி! நம்மள மரியாதையான மாமியார் - மருமகன்னு ஊருல எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க. இமேஜைக் கெடுத் துடாதடா...'' என்று அத்தை பதறி விலக, விடாது துரத்தினார் செல்வம்.

சட்டென எழுந்த சிவராமன் (சந்தானம்), ''மாப்பிள்ளை... 'கிரஹப்பிரவேசம்' நடந்துட்டு இருக்கு. உங்க இடுப்பு எலும்பு உடைஞ்சு, ஷூட்டிங் கேன்சல் ஆகி, டைரக்டர் டென்ஷன் ஆகி... இதெல்லாம் தேவையா?! என் பொண்டாட்டியை விட்டுடுங்க. ஐயோ சிவகாமி... சிவகாமி!'' என்று தன் பங்குக்கு காமெடி திரி கொளுத்த, மொத்த டீமும் வெடித்துச் சிரித்தது.

'சைலன்ஸ்!’ என்றபடி மைக்கோடு வந்த குமரன்... ''இப்போ இங்கே ஒரு போட்டி நடக்கப் போகுது. ஆக்டர்ஸ் தரப்புல இருந்து ஒருத்தரும், ஆக்ட்ரஸ் தரப்புல இருந்து ஒருத்தரும் முன்ன வாங்க!'' என்று அழைக்க, ''செல்வம்... செல்வம்..!'' என்று பில்ட் - அப் கொடுத்து முன்னே தள்ளியது நடிகர்கள் டீம்.

''ரயிலு முன்னாடி போகாதே... அர்ச்சனாகிட்ட மோதாதே!'' என்று பஞ்ச் லைன் எல்லாம் பாடிப் பதற வைத்து, அவரை ஆட்டத்துக்கு அனுப்பினார்கள் நடிகைகள் டீம்.

''செல்வம் தோளை அழுத்தி, அவரைக் குனிய வைக்கணும். இதுதான் போட்டி. செல்வம் குனிஞ்சுட்டா, அர்ச்சனா வின்னர். வளையாம ஸ்டெடியா நின்னுட்டா, செல்வம் வின்னர். ஒரு நிமிஷம்தான் டைம்!'' என்று குமரன் அறிவிக்க,

''இப்படி ஒரு மொக்கைப் போட்டியை எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சீங்க சார்?!'' என்று முறைத்தது ஒட்டுமொத்தக் கூட்டமும்.

''ஓகே... ஓகே..! ஷூட் டென்ஷன்ல இருக்கேன்பா. மண்டையில எந்த மின்னலும் வெட்ட மாட்டேங்குதே!'' என்று குமரன், எக்ஸ்க்யூஸ் வாங்க, அதற்குள் செல்வம் - அர்ச்சனா ரெடி ஆகிவிட்டனர் மோதுவதற்கு!

''அர்ச்சனா விட்டுடாதீங்க... ப்ளீஸ்! நம்ம டீமோட மானத்தைக் காப்பாத்துங்க!'' என ப்ரியா (காவியா) சீரியஸாக சவுண்ட் விட,

''செல்வம்... அசால்ட்டா இருந்துடாதடா. பார்ட்டிங்க எல்லாம் பாக்டீரியாஸ்!'' என்று அலர்ட் செய்தார் வாசு. ஒட்டுமொத்த பலத்தையும் சேர்த்து அர்ச்சனா அழுத்த, ஊர் எல்லை அய்யனார்போல அட்டென்ஷனில் நின்றார் செல்வம்.

''மாமா... அர்ச்சனா அக்கா ஜெயிக்கணும்னு தானே நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தீங்க? இப்போ நீங்களே அவங்க தோற்க காரணமா இருக்கலாமா..?!'' என்று திடீரென ரேவதி (சொப்னா) கேமரா ஆன் ஆகாமலேயே டயலாக் விட,

''அட ஆமாம்!'' என்றபடியே சட்டென செல்வம் வளைந்துவிட,

''ஹே!'' என்று ஆர்ப்பரித்தது ஆக்ட்ரஸ் டீம்!

''இது அழுகுணி ஆட்டம்!'' என்று 'டூ’ விட்டபடியே, ''அடப்பாவி, இந்த அளவுக்கு வளைஞ்சுட்டியேடா...'' செல்வத்தை ஆக்டர்ஸ் டீம் சூழ்ந்து கொள்ள..

''ஆகா, வடை போச்சே...'' என்று கன்னத்தில் கை வைத்தார் செல்வம்.

''ஓகே... எல்லோரும் ரெடியாகுங்க. அடுத்த ஷூட் ஆரம்பிக்கலாம்!'' என குமரன் காரியத்தில் கண் ஆக... நாமும் கலாட்டாக்களுக்கு பேக் அப் சொன்னோம்.

இத்தனை நேரம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அபிதாவின் குழந்தை அல்சா அழ ஆரம்பிக்க, பதறி ஓடினார். ''இப்போ உனக்கு ஷாட் இருக்கில்ல? நீ போ. நாங்க எல்லாம் ஃப்ரீயாதானே இருக்கோம். பாப்பாவைப் பார்த்துக்கறோம்!'' என்று வடிவுக்கரசி, சொப்னா, காவியா எல்லோரும் அல்சாவை வாங்கிக்கொள்ள, ஆன் ஆனது கேமரா!

சூப்பர் சீரியல் குடும்பம்ப்பா!