''நான் வியக்கும், மதிக்கும், போற்றும் மிக அரிதான விஷயங்களில் 'பெண்’ என்ற பதத்துக்கு மிகமுக்கியமான இடம் உண்டு. தன் உயிரை வளர்ப்பது மட்டுமில்லாமல், தனக்குள்ளும் ஓர் உயிரை வளர்த்தெடுப்பது என்பது ஆச்சர்யத்தின் உச்சம்தானே! வாழ்க்கை நதியில் மிதந்து வரும் பூக்கள்தான் பெண்கள். ஆனால், அச்சுறுத்தலான சூழல் எழுகையில் புயலாகவும் அவதாரமெடுக்கும் பெண்மையை இந்த உலகம் இன்னமும் முழுதாகப் புரிந்து கொள்ளவுமில்லை, போற்றிடவுமில்லை என்பதுதான் என் வருத்தம்!''

- ஆச்சர்யமும், அக்கறையும் அழுந்தப் பேசுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்!

பெண் இனம் போற்றுதல் குறித்து, எப்போதுமே முழு வீச்சாகப் பேசுபவர், சத்குரு. உடலை நேராக்கி, உயிரோட்டத்தை சீராக்கும் யோகா கலையைக் கற்றுத்தரும் 'ஈஷா ஃபவுண்டேஷன்' நிறுவனரான சத்குருவை, அவள் விகடன் 14-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக சந்தித்தோம்.

'' பெண் என்றால் சட்டென்று உங்களுக்கு நினைவுக்கு வருவது..?''

''நித்திரையின் நடுவில் எழுப்பிக் கேட்டாலும் 'அம்மா’ என்றே பதிலளிப்பேன். எனக்கு மட்டுமில்லை... உலகத்துக்கே 'பெண்’ என்றால் 'பெற்றவள்’தான் நினைவுக்கு வரவேண்டும். இதுதான் தாய்மைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை.''

''உங்கள் அம்மாவைப் பற்றி சொல்லுங்களேன்...''

''என் அம்மாவிடம் அன்புக்கு நிகராக நான் பார்த்து நெகிழ்ந்த விஷயம், நேர்த்தி. அந்தளவுக்கு ஒரு துரும்பைத் தூக்கிக் குப்பைக் கூடையில் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியைக் கடைபிடித்தவர். வீட்டில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து அழகு செய்வார். தலையணை உறையில் ஒரு சிறிய எம்ப்ராய்டரி வேலையாவது செய்யப்பட்டிருக்கும். கடுகளவுகூட எதையும் மறக்காமல் மளிகைப் பட்டியல் தயாரிப்பதாகட்டும், தசரா போன்ற வைபவங்களுக்கு வீட்டை அலங்கரிப்பதாகட்டும்... ஒவ்வொன்றிலும் ஒழுக்கம் மிளிரும். இதெல்லாம் அம்மாவுக்கு ஆனந்தத்தை தந்தது, எங்களுக்கு... 'நாமும் இதுபோல் ஒழுக்கமாக, நேர்த்தியாக இருக்க வேண்டும்' என்கிற உத்வேகத்தைத் தந்தது.

இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லியாகவேண்டும்... என் அம்மா வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டியதில்லை. ஆனாலும் எந்தவிதத்திலும் அவரை யாரைவிடவும் தாழ்வாக நினைத்திட முடியாது. வீட்டை 'இல்லமாக’ மாற்றும் பணிகளில் அவர் காட்டிய ஈடுபாடுதான் அவரை இமயமளவுக்கு எங்கள் முன் விஸ்வரூபப்படுத்தியது. ஐ லவ் மை மா ஃபார் எவர்!''

''பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்கிற வாதத்துக்கு வலு சேர்ப்பது போலிருக்கிறதே?''

''எல்லாப் பெண்களும் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டும், ஆண்கள் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்பது தவறான வாதம். நானும் அப்படி சொல்ல வரவில்லை. நீங்கள் வாழும் வாழ்க்கை, உங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அது நீங்கள் அலுவலகத்துக்குச் செல்வதால் ஈடேறும் என்றால், அலுவலகம் செல்லலாம். வீட்டில் இருந்தால் ஈடேறும் என்றால் வீட்டில் இருக்கலாம். அது ஒவ்வொருவரின் சூழலை, தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது. என் அம்மாவைப் பொறுத்தவரையில், அவர் வீட்டில் செய்த பணிகள் அவருக்கு அன்புமயமான அனுபவத்தைக் கொடுத்ததோடு, எங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தியது. இப்படி தன் நலத்தையும் தாண்டி பிறர் நலனுக்காக அக்கறையுடன் ஒவ்வொருவரும் உழைக்கும்போதுதான் ஒட்டுமொத்த உலகமும் அழகாகிறது.''

''ஆணைவிட பெண் தாழ்ந்தவள் என்ற பாகுபாடு இன்னமும் உயிரோடு இருக்கிறதே..?''

''பெண்ணுக்கென்று சில தனித்தன்மைகள் இருக்கின்றன, ஆணுக்கு சில தனித்தன்மைகள் இருக்கின்றன. ஆணையும், பெண்ணையும் இருவேறு தன்மைகளாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, இருவேறு உயிரினங்களாக பார்க்கக்கூடாது. 'நீயும் வைத்துக்கொள்’ என்று இரக்கப்பட்டு பெண்ணுக்கு உரிமையையும், அந்தஸ்தையும் கொடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும், சாதனையிலும் அதிசயிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

இன்று பெண்கள் பெற்றுள்ள உரிமைகளுக்கும், அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கும் நேற்று பெண் விடுதலைக்காக போராடியவர்களின் தீர்க்கமும், தியாகமும் முக்கியக் காரணம். ஆனால், ஓர் உண்மையை வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். இன்று 'பெண் விடுதலை’ என்று சொல்லி பாடுபடுபவர்களில் சிலர், பெண்மை தழைத்தோங்க பெரிய சேவை செய்வதில்லை. பெண்கள் அமைப்புகள் நடத்திய சில கூட்டங்களில் நான் பங்கு பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் பேச்சு, பெண்மை நிறைந்ததாக இருப்பதைவிட, ஆண்களைவிட, இவர்கள் அதிகம் ஆண்மைத் தன்மை வாய்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் முனைப்பிலேயே இருக்கும். பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலையை மாற்றத்தான் போராட வேண்டுமே தவிர, பெண் தன்மையையே மாற்றிடும் வகையில் செயல்படுவது அபத்தம்!''

''வீடு, அலுவலகம் என்று அடிமைக் கட்டளை களை, பாலின பாகுபாட்டுச் சூழல்களை எதிர்கொள்ளும்போது, பெண்களின் பதில்வினை எப்படி இருக்க வேண்டும்..?''

''பெண் 'ரௌத்திரம்’ பழக வேண்டும். ஆனால் 'ஆத்திரம்’ கொள்ளக்கூடாது. ரௌத்திரத்துக்கும், ஆத்திரத்துக்கும் மலையளவு வேறுபாடு இருக்கிறது. ஒருவர் உங்களை அடக்கி ஆளும்போது நீங்கள் ஆத்திரப்பட்டு, கொந்தளித்து உங்கள் மனதையும் உடலையும் மேலும் சேதப்படுத்திக் கொள்கிறீர்கள். இது மிகத் தவறு. இந்த வகையில் நீங்களும் உங்களுக்கு எதிரியாகிறீர்கள். சில நேரங்களில் சத்ரிய தனத்தைவிட சாணக்கியத்தனம் சமர்த்தானதில்லையா?!

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும், நேர்மறையாகச் சிந்திக்க, செயல்பட கற்றுக் கொள்ள வேண்டும். அச்சம் அறுத்தெறிய வேண்டும், தயக்கம் தளர்ந்து போகவேண்டும். இந்த உலகத்தை நீங்கள் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால், உங்களை ஒரு விநாடியில் மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு யோகா போன்ற கலைகள் கைகொடுக்கும். பெண்கள் சார்ந்த பல உடல் உபாதைகளை தீர்க்கும் மகத்துவமும் யோகாவுக்கு உண்டு.''