'ஒரு பிள்ளையைப் பெற்று வளர்ப்பதற்கே மூச்சு முட்டுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் 10, 15 என்று பிள்ளைகளைப் பெற்று, எப்படித்தான் வளர்த்து ஆளாக்கினார்களோ!' என நினைக்கும்போதே... நம் தாத்தா, பாட்டிகள் மீது மரியாதை பல மடங்கு கூடிவிடுகிறதல்லவா!

அப்படி நிறைய பிள்ளைகள் பெற்ற பாக்கியவதியை, 14-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக சந்திக்கத் தேடினோம். தேனி மாவட்டம், வருசநாடு பகுதியில் உள்ள உரக்கண்டான் கிராமத்தில் கிடைத்தார்... 78 வயதாகும் சிவகாமி பாட்டி! இவர், மொத்தம் 14 பிள்ளைகள் பெற்ற பாக்கியவதி!

''சாமீ... இந்தக் காலத்துல ஒரே ஒரு புள்ளையப் பெத்துப் போட்டுட்டு, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்குறாளுக. என்னயப் பேப்பருல போட்டா, 'பார்றா இந்தக் கெழவி ஒரு கிராமத்தையே பெத்துப் போட்டிருக்கா!’னு கேலி பேசமாட்டாகளா..?'' என பொக்கை வாயால் சிரித்தபடியே தயங்கினார்!

''மக்களைப் பெத்த மகராசினு கொண்டாடுவாக பாட்டி!'' என சமாதானப்படுத்திய பிறகே, பேச்சை ஆரம்பித்த பாட்டி, ''அந்தக் காலத்துல, பொம்பளப் புள்ளைக சடங்கானதுமே... எவன் கையிலயாவது புடுச்சு கொடுத்துடுவாக. அப்படித்தான் எனக்கும் கல்யாணம் முடிஞ்சுது. அந்த வருசம் பார்த்து, நாட்டுல பெருவாரிப் பஞ்சம். கஞ்சித் தண்ணிக்குக்கூட கதியில்ல. கோராங்கிழங்கத் தோண்டித் தின்னு உசுரை வெச்சுக்கிட்டு இருந்தோம். 'வருசநாட்டுல, காடு வெட்டி குடியேறுறவங்க போய் குடியேறலாம்’னு உத்தமபாளையம் சந்தையில கிணிமிட்டி அடிச்சுச் சாட்டுனாக.

அதைக் கேட்டுட்டு... 'இந்தப் பஞ்சத்துல சாகறதவிட, வருசநாட்டுக்குப் போகலாம்’னு வீட்டுக்காரர் சொல்ல... கோழிக் குஞ்சுகள அடிச்சுத் தின்னுட்டு; மாடு, கன்னுகள மேகமலையில ஓட்டிவிட்டுட்டு; பொட்டி, சட்டியக் கட்டிக்கிட்டு... வருசநாடு பஞ்சந்தாங்கி மல அடிவாரத்துல குடியேறுனோம். இந்த உரக்குண்டான், இன்னிக்கு ஒரு ஊரா உருமாறியிருக்கு. ஆனா, அப்போ எங்க பாத்தாலும் கருங்காடு. யானை, கரடினு காட்டுச் சீவனுங்கதான் திரியும். உசுரக் கையில பிடிச்சுக்கிட்டு... காடு வெட்டி, நெலம் சேர்த்தோம். வனாந்தரத்துல இருக்குற புளிச்ச செடியப் புடுங்கித் தின்னா, நாள் முழுக்கப் பசிக்காது. உடம்பும் தெம்பா இருக்கும். அதுதான் சனங்களுக்குப் பல வேள பசியை ஆத்துச்சு.

நாங்க வெட்டுன காட்டுல... சாம, குதிரவாலி, தினை, வரகு, கேப்ப (கேழ்வரகு), ஆமணக்குனு 13 பயிரை ஒரே வெள்ளாமையா வெதச்சோம். களம் கொள்ளாத அளவுக்கு வெளஞ்சது. அதைஎல்லாம் அடிக்கி வைக்கிற அளவுக்கு வீடும் இல்ல, இப்ப மாதிரி அள்ளி அடைஞ்சு வைக்க சாக்குமில்ல. விளைஞ்ச தவசத்தை ஏவாரிக கேக்கிற விலைக்கு வித்துக் காசு சேர்த்தோம்.

இதுக்கிடையில எனக்கு மொதப்புள்ள ஜனிச்சுச்சு. தலைப் பிரசவத்துக்கு ஆத்தா வீட்டுக்குப் போகலாம்னா, அவுகளும் பஞ்சம் பொழைக்கக் கொடைக்கானலுக்கு உருளைக்கிழங்கு தோண்டப் போயிட்டாக. வேற வழியில்ல... இந்தக் காட்டுலதான் மூத்த மக மாடத்தி பொறந்தா. அவ பொறந்த நேரம்... பஞ்சம் பொழைக்க வந்த எடத்துல வயிறாரச் சாப்பிட வெளையவே... நிரந்தரமா இங்கயே தங்கிட்டோம். சாமான் ஏதாச்சும் வாங்கணும்னா... ரெண்டு எடத்துல வைகை ஆத்தக் கடந்து, அஞ்சு கல் தூரமிருக்கற மயிலாடும்பாறைக்குதான் போகணும். பொழுதிருக்க வீடு அடையலனா... வனாந்தரத்துல இருக்கற ஜந்துக ஆள அடிச்சுக் கொன்னுடும். புலி அடிச்சு, யானை மிதிச்சினு பலர் செத்திருக்காக...'' என்று கிலி குறையாதவராகச் சொன்ன பாட்டி, தொடர்ந்தார்.

''இப்புடி ஓடின வாழ்க்கையில வருசம் ஒரு புள்ளைனு, 14 புள்ளையாச்சு. 12 ஆணு, ரெண்டு பொண்ணு. ஒண்ணு கையில இருக்கும், ஒண்ணு மூக்க ஒழுக விட்டுக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்கும், ரெண்டு அடிச்சு சண் டையப் போட்டுக்கும். வீடே ஒரே சச்சரவா இருக்கும். பாட்டோட பாட்டா அம்புட்டும் வளந்ததுக. மூத்த மக மாடத்திக்குக் கலியாணப் பேச்சு வந்தப்ப, பதினாலாவது புள்ள என் வயித்துல! 'கடவுளே இனிப் புள்ளையக் கொடுக்காதே'னு வேண்டியும், கடைசியாப் பொறந்தவதான் 'போதும்பொண்ணு’. நல்லவேளையா அதுக்குப் பொறவு புள்ள இல்ல. குடும்பக் கட்டுப்பாடு பத்தி ரேடியோவுல பேசுறதக் கேட்டிருக்கேன். ஆனா, சாமி கோவுச்சிக்கிரும்னு அதுக்கு போகல.

கடைசி பொண்ணு பொறந்தப்ப... எந்தக் காலத்துலயும் இல்லாத அளவுக்கு அப்பிய (ஐப்பசி) பேய் மழ. எங்க பாத்தாலும் வெள்ளக்காடு. சனங்க ஆத்தக் கடக்க முடியாம முடங்கிப் போனோம். ஆடு, மாடுகளெல்லாம் செத்து மடிஞ்சுச்சு. 'பிளேக்’ நோய் பரவி, முத்துமாடன் செத்தான். அப்ப அவனுக்குப் 10 வயசு. ஆறு மாசம்கூட ஆகல... ஊருல பெரியம்மை பரவி சின்னமாடன் செத்துட்டான். அவனுங்க மட்டும் இருந்திருந்தா, ஒரு ஊர் சனத்தையே, ரெண்டுல ஒண்ணுனு பாத்துடுவானுங்க. அம்புட்டு வேகமானவனுங்க. அவனுங்க போன ஏக்கத்துலயே என் வீட்டுக்காரரும் போய்ச் சேர்ந்துட்டாரு. இப்போ எம் பேரப்புள்ளைக கணக்கு மட்டும் 32. இனி என்ன வேணும். வீடு போ போங்குது... காடு வா வாங்குது. ஆண்டு அனுபவிச்சாச்சு. இப்பவே என் உசுரு போனா... மோச்சியம்!''

- எந்த உதவியும் இல்லாமல் எழுந்து கொள்ளும் சிவகாமி பாட்டியிடம், அப்படியரு தாய்மை தெம்பு!