மற்ற எல்லா மேக்கப்களை விடவும் சவாலானது... மணப் பெண்ணுக்கான பிரைடல் மேக்கப்! நெற்றியில் வைக்கும் பொட்டு தொடங்கி, கட்டப் போகும் புடவை வரை எந்த விஷயத்திலும் அசட்டையோ, அஜாக்கிரதையோ காட்டாமல் இருக்க வேண்டியதும் இந்தத் திருமண மேக்கப்புக்குத்தான்!

உங்கள் முகூர்த்தப் புடவையின் நிறம், நெக்லஸ், மாலை, வளையல், நெற்றிச்சுட்டி என்று அணியப் போகும் நகைகள் முதற்கொண்டு, தாமரை, மல்லிகை என மணமேடை அலங்காரத்தின் தன்மை வரை முன்கூட்டியே மேக்கப் கலைஞரிடம் சொன்னால்தான்... இவற்றுக்கு எல்லாம் ஏற்றவாறு அவரால் மணப்பெண்ணுக்கு சிறப்பான அலங்காரம் செய்ய முடியும். இல்லையென்றால், மேக்கப் முடித்து, திருமணப் புடவை உடுத்தி கண்ணாடி முன் நின்றால், ஏமாற்றம் ஏற்படலாம்.

'ஐயோ... இந்த மேக்கப் என் புடவைக்கு, நகைகளுக்கு இயைந்து போகவில்லை...’ என்று மேக்கப்பில் திருத்தங்களைச் செய்துகொண்டே இருந்தால், 'இத்தனை பேர் இங்கே மண்டபத்துல காத்துட்டு இருக்கோம். பொண்ணு இன்னுமா மேக்கப் போடுது..?’ என்று மண்டபமே உங்களைத் தேடத்

தொடங்கிவிடும். நீங்களும் திருப்தி இல்லாத மேக்கப்புடன் அவசர அவசரமாக சென்று மணமேடையில் அமர வேண்டியிருக்கும். முன்கூட்டியே விவரங்களைத் தெரிவித்துவிட்டால், உங்களுக்குப் பொருந்திப்போகும் மேக்கப் எது என்று முடிவு செய்வதுடன், அதற்கு எத்தனை மணி நேரம் ஆகும் என்பதையும் கணித்து, அதற்கு ஏற்றாற்போல முன்கூட்டியே அலங்காரத்தை ஆரம்பிக்க முடியும்.

முழு திருப்தியுடனும், தாமதமில்லாமலும் மேக்கப் போட்டுக் கொள்ள... இன்னும் ஒரு டிப்ஸ்... மணநாள் அன்று மணப்பெண் மேக்கப் போடும்போது, துணைக்கு ஒரே ஒரு தோழியை மட்டும் உடன் வைத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர் என்று ஏகப்பட்ட நபர்கள் சேர்ந்துவிட்டால்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்வார்கள். அதை நிராகரித்தால், தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று எல்லோரின் யோசனைப்படியும் மேக்கப் போட ஆரம்பித்தால், அது விபரீதத்தில்தான் முடியும்!

இந்த இதழுக்காக மணப்பெண் மேக்கப் போட்டுக்கொள்ள முன்வந்தவர், விதி (வித்தி யாசமான பேருல்ல!). 'ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணி முகத்தை சுத்தமா வாஷ் பண்ணிட்டுத்தான் வந்திருக்கேன். கிளென்ஸர் எல்லாம் வேண்டாம். நேரடியாவே மேக்கப்பை ஆரம்பிங்க’ என்றார் விதி. 'அப்படியா?!’ என்று ஒரு டிஷ்யூ பேப்பரைக் கொண்டு அவரின் முகத்தைத் துடைத்துக் காட்டினேன். டிஷ்யூ பேப்பர் கறுப்பாகி இருந்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால்... வீட்டிலிருந்து கிளம்பும்போது என்னதான் முகத்தை வாஷ் செய்து வந்தாலும், பியூட்டி பார்லருக்கு வரும் வழியில் முகத்தில் படிகிற புகையோடும் தூசோடும் மேக்கப் போடவே கூடாது.

பிரைடல் மேக்கப் என்று இல்லை, எந்த மேக்கப் போட்டாலும் கிளென்ஸர் போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தாமல் ஆரம்பிக்கவே கூடாது. மேக்கப் போடும்போது தலைமுடி முகத்தில் விழாமல் இருக்க, 'ஹேர் பேண்டு’ மாட்டிவிடுவார்கள். இதன் காரணமாக, நெற்றிப்பகுதியில் முழுமையாக மேக்கப் போடமுடியாமல் போகலாம் என்பதால், இவருக்கு நான் ஹேர் பேண்ட் போடவில்லை. இவருக்குக் கண்களைச் சுற்றி கருவளையம்

இருந்ததால், அதை கன்சீலர் கொண்டு மறைத்துவிட்டேன்.

விதிக்கு முழுக்க கிரீம் பேஸ்லேயே மேக்கப் போடுவது என்று முடி வெடுத்ததால், ஃபவுண் டேஷன் போடுவதற்கு முன்பு மாய்ஸ்ச்சரை ஸர் கூடப் போட வில்லை. இவருக்கு மூக்கு உப்பலாக இருப்ப தால்... இதைக் கூர்மை யாகக் காட்ட மூக்கின் நுனியில் துவங்கி நெற்றிப்பொட்டு வைக் கும் இடம்வரை ஹாஃப் வொய்ட் கிரீம் அப்ளை செய்தேன். இந்த இடம், முகத்தின் மற்ற இடத்திலிருந்து தனித்துத் தெரியக்கூடாது என்பதால், டிரான்ஸ்லூசன்ட் பவுடர் அப்ளை செய்யும்போது அதை முகத்தின் மற்ற இடங்களில் இருக்கும் கலருக்கு ஏற்றவாறு பிளண்ட் செய்திருப்பதையும் கவனியுங்கள். தாடைக்கு மேலே இருக்கும் எலும்புகளின் மீது ஷிம்மரும், அதற்குக் கீழே பிளஷ§ம் அப்ளை செய்திருக்கிறேன்.

ஜர்தோஸி வேலைப்பாடுகள் கொண்ட 74 ஆயிரம் ரூபாய் பிங்க் கலர் காக்ரா சோளியை இவர் அணியப் போகிறார் என்று தெரியும் என்பதால், அந்தக் கலரிலேயே அவருக்கு ஐ ஷேடோ கொடுத்திருக்கிறேன். செயற்கையான ஐ லேஷஸ் பற்றி ஒரு வார்த்தை. இதைப் பொருத்துவதாக இருந்தால், நிச்சயம் மஸ்கரா அப்ளை செய்ய வேண்டும். இல்லை என்றால்... செயற்கையான ஐ லேஷஸும் இயற்கையான ஐ லேஷஸும் தனித்தனியாகத் தெரியும்!

- மிளிரும்...
ஆடை உதவி: கலாநிக்கேத்தன்