'பெண் குழந்தை பிறந்தால் வீட்டுக்கே கேடு' என்கிற மூடநம்பிக்கை, ஒரு காலத்தில் இந்தியாவின் அசைக்க முடியாத சொத்து. இன்றும்கூட பல மாநிலங்களில் அது நீடிக்கத்தான் செய்கிறது. இந்தக் கொடுமைக்கு எதிராக போர் தொடுக்க நினைத்த முன்னோர்கள்... ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை கைகளில் எடுத்தனர். பீகார் மாநிலம், பாகல்பூர் அருகிலுள்ள தர்ஹரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இதற்காக கையில் எடுத்தது பசுமை ஆயுதம் !

ஆம்... 'பெண் குழந்தை பிறந்தால் மரங்களை நடு' என்றொரு விஷயத்தை நூறாண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு புண்ணியவான் இங்கே பதியம் போட... இன்று அந்தக் கிராமத்தில் எங்கு திரும்பினாலும் பழ மரங்கள் காய்த்துக் குலுங்குவது... பெண் இனமே பெருமைப்பட வேண்டிய விஷயம்!

தர்ஹரா கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா தேவி அதைப் பற்றி பூரிப்புடன் நம்மிடம் பேசினார். ''எனக்கு 1961-ம் ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. அது பெண்ணாக பிறந்துவிட, ஊரெல்லாம் அதைக் கரித்துக் கொட்டியது. பெற்றவளாகிய நானும்கூட வருத்தப்பட்டேன். ஆனால், என் கணவர் போலா, 'பெண் குழந்தை என்றால் இளக்காரமா..?' என்றபடியே குழந்தைக்காக தோட்டத்தில் முப்பது மாமரங்களை நட்டு வைத்தார். அடுத்த குழந்தையும் பெண்ணாகிவிட, நான் மிகுந்த கவலைக்குள்ளாகி விட்டேன். ஆனால், அவரோ... இன்னும் பலமடங்கு உற்சாகமாகி, மேலும் ஐம்பது லிச்சி மரங்களை நட்டு வைத்தார்.

இதையெல்லாம் பார்த்த அக்கம் பக்கத்தார், அவரை வெகுவாகக் கிண்டலடித்தனர்... உறவினர்களும்கூட! ஆனால், ஆண்டுகள் உருண்டோட... வளர்ந்து நின்ற மரங்களைப் பார்த்த குடும்ப உறுப்பினர்கள், குஷியாகிவிட்டனர். இதையடுத்து, பெண் குழந்தைகள் பிறந்தால், மரம் நடுவது என்பதை அவர்களும் பின்பற்றத் தொடங்க... இப்போது எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே... பத்து ஏக்கரில் மா மற்றும் லிச்சி பழத் தோட்டம் இருக்கிறது'' என்று பெருமையோடு சொன்னவர்,

''நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் எங்கள் ஊரில் இருக்கிறது. என்றாலும், இடையில் பெரிதாக அதை யாரும் எடுத்துச் செய்யவில்லை. அதனால்தான் எனக்கு பெண் பிறந்ததும், மரங்களை நடவு செய்தார் என் கணவர். அதன் மூலம் கிடைத்த பலனைப் பார்த்துவிட்டு, தற்போது ஏழை, பணக்காரர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், உயர்ந்த சாதியினர் என்று எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் எங்கள் கிராமமே பழ மரங்கள் நிறைந்த காடாக மாறிவிட்டது'' என்று கைகளை நீட்டினார் காட்டை நோக்கி!

கிராமத்தின் தென்பகுதியில் கங்கை, வடகிழக்கில் கோசி நதி ஆகியவை ஓடுகின்றன. தண்ணீருக்குப் பஞ்சம் இல்லாததால், மரங்கள் அனைத்தும் செழுமையுடன் வளர்கின்றன. நிலப்பகுதி சுருங்கிக் கொண்டே வரும் நிலையிலும், குறைந்தபட்சம் பத்து மரங்களையாவது நடுவதை தற்போது வழக்கத்தில் வைத்துள்ளனர். இவை, எதிர்காலத்தில் பெண் குழந்தைகளை வாழ வைக்கும் என்கிற அவர்களின் நம்பிக்கை வீண் போகாமல், அந்த மரங்கள் கைகொடுத்து வருகின்றன என்பதுதான் விசேஷமே!

அதைப் பற்றி பேசிய ரூபேஷ்குமார் சிங், ''குழந்தைகளுக்காக மரங்களை நடுவது, ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை போடுவது போலத்தான் நாங்கள் நினைக்கிறோம். பெண் குழந்தை

பிறக்கும்போது நடப்படும் பழ மரங்கள், அதனுடன் சேர்ந்து வளர்ந்து, திருமணச் செலவுக்கு கைகொடுக்கின்றன. என்னுடைய மூன்று சகோதரிகளுக்கும், அப்படித்தான் என் பெற்றோர் மணம்முடித்து வைத்தனர்.

எங்களுடைய இந்த முயற்சி சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைப்பதுடன், நோய்நொடியின்றி எங்களை வாழ வைப்பதற்கும் உதவுகிறது. இதை உணர்ந்த பீகாரின் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், இங்கு இருமுறை விஜயம் செய்து, பீகார் மாநிலத்தின் 'ரோல் மாடல் கிராமம்' என அறிவித்ததோடு, கூடுதலாக இரண்டு பள்ளிக்கூடங்களையும் இங்கே திறந்து வைத்திருக்கிறார்'’ என்றார் குஷியோடு.

தன் பேத்தியைக் கொஞ்சியவாறு இருந்த ராம்சரண், ''இன்றும்கூட நாட்டில் ஆண் குழந்தைகள் மீதான மோகம் குறைந்தபாடில்லை. இவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைத்தால் மணமாகி தம் பெற்றவர்களை மறந்துவிடுகின்றனர். ஆனால், பெண் பிள்ளைகள் மணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டாலும், அவர்கள் பெயரால் நடப்பட்ட மரங்கள் கடைசி வரை பலனைத் தருகின்றன. இதேபோல ஆண் குழந்தைகளுக்கும் மரங்களை நட்டிருந்தால், அவர்களால் பெற்றோருக்குக் கிடைக்காத பலன், மரங்களின் மூலமாவது கிடைத்திருக்கும்'’ என சோகம் பொங்கச் சொன்னார், தன் மகன் தன்னைக் கவனிப்பதில்லை என்கிற வருத்தத்தை பதிவு செய்யும் வகையில்!

இந்தக் கிரா£மத்தின் பெயர், தற்போது உலக அளவில் பரவ ஆரம்பிக்க, கடந்த நூறு ஆண்டுகளில் பிறந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுடைய வம்சாவளியினர், நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்று அனைத்துத் தகவல்களையும் சேகரித்து ஆவணப்படுத்தும் வேலை ஆரம்பமாகி இருக்கிறது.

பரவட்டும் இந்த பசுமைப் புரட்சி!