Published:Updated:

வெற்றி ரகசியம்!

வெற்றி ரகசியம்!

வெற்றி ரகசியம்!

ரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்படி ஒரு திருமண விருந்தை அதற்கு முன் நான் உட்பட அங்கு வந்திருந்த பலரும் சுவைத்திருக்க மாட்டார்கள். பெங்காலி ஸ்வீட்ஸ் துவங்கி, நம் ஊர் இனிப்பு வரை அத்தனை இனிப்பு வகைகளையும் குட்டி குட்டியாக செய்து பரிமாறினார்கள். செட்டிநாடு குழிப்பணியாரம் துவங்கி, சைனீஸ் நூடுல்ஸ், இத்தாலியன் பாஸ்தா... என்று பல வகை அயிட்டங்களால் அசத்தி இருந்தார்கள். ஃப்ரூட் சாலட், ஐஸ்க்ரீம்... என்று எதையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளை இம்ப்ரஸ் செய்ய பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் என்று தனி ஏரியா வேறு!

எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பெரியம்மா ஒருவர், அன்று விரத நாள் என்பதை சுட்டிக்காட்டி, ‘எனக்கு சாப்பாடு வேண்டாம். டிபன் அயிட்டம் இருந்தா வைங்க... இல்லைனாலும் பரவாயில்லை’ என்று சொல்ல... இப்படி விரதமிருப்பவர்களும் வருவார்கள் என்பதை எதிர்பார்த்து, அவர்களுக்கும் ஏற்பாடு செய்திருந்ததைக் கண்டு பலரும் வியந்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பந்தியில் உட்கார்ந்திருந்த வேறொருவர், ‘என்னைப் போலவே இப்போது பலருக்கும் சுகர் இருக்கு. ஒரு கரண்டி கோதுமை உப்புமாவும், சுக்கா ரொட்டியும் இருந்தாலே போதும். அதெல்லாம் இங்க கிடைக்குமா என்ன’ என்று சொல்லி வாய் மூடுவதற்குள், அவையும் வந்தன. பாட்டி ஒருவர், `ஒரு டம்ளர் வெந்நீர் கிடைக்குமா’ என்று சந்தேகத்தோடு கேட்க... ‘இந்தாங்க பாட்டி’ என்று ஓடி வந்து கொடுக்க...

`இது என்ன மாயாபஜார் மாதிரி கேட்பதெல்லாம் கிடைக்கிறதே!’ என்று பலருக்கு வியப்போ... வியப்பு!

வியக்க வைத்த இந்த விருந்தின் மிகப்பெரிய வெற்றி ரகசியம்..?

`விருந்தினரின் மனதைக் குளிர்விக்க... நிறைய பண்டத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டும் என்பதில்லை. வந்திருப்பவர்களின் தேவை அறிந்து இன்முகத்துடன் பரிமாறினாலே போதும் என்பதை யோசித்தோம்... ஏற்பாடு செய்தோம்’ என்று சிம்பிளாகச் சொன்னார்கள், கல்யாண வீட்டினர்.

மணமகள் இதழையும் இதேபோலத்தான் உங்களுக்குப் பரிமாறியிருக்கிறோம். உங்களின் மனஓட்டத்தை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம்.

- ஆசிரியர்

ணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல், 044-66802922 என்ற எண்ணில் உங்கள் குரலிலேயே பதிவுசெய்யுங்கள்!