Published:Updated:

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

லகின் ஒவ்வொரு நாட்டிலும் திருமண முறைகளில் எத்தனை வேறு பாடுகள், சுவாரஸ்யங்கள், நம்பிக்கைகள், நெகிழ்ச்சிகள்! வாருங்கள் ஒரு சர்வதேச திருமணச் சுற்றுலா சென்று வரலாம்..!

தங்க ரிப்பன், வெள்ளி ரிப்பன் வெட்டி...

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தெற்காசிய நாடான தாய்லாந்திலும் ஜோதிடர் மூலம் முகூர்த்த நாள் குறிக்கிறார்கள். புத்தமத துறவிகளின் ஆசி முக்கியம் என்றாலும் திருமண நிகழ்வில் மத அம்சங்கள் குறைவுதான். இங்கும் வரதட்சணை உண்டு. ஆனால், மணமகன் குடும்பம் சார்பில் பெண்ணுக்கு இது அளிக்கப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாக வர, மணமகன், மணமகள் இருக்கும் வீட்டின் ஒவ்வொரு கதவாக திறந்து உள்ளே சென்று பரிசுகளை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். தங்க ரிப்பனும், வெள்ளி ரிப்பனும்தான் கதவுகள். திருமணத்தின்போது மணமக்கள் பாரம்பர்ய உடை அணிந்திருக்க, இருவர் தலையிலும் வட்ட வடிவில் வெள்ளை நூல் அணிவிக்கப்பட்டு இணைக்கப்படுகிறார்கள். இருவர் வாழ்க்கையும் இணைந்திருக்கும் அதே நேரத்தில் அவர்களின் தனித்தன்மையும் காக்கப்படுவதை இது குறிக்கிறது!

மனைவியைப் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது!

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

ஆப்பிரிக்க நாடான நைஜீரிய திருமணத்தில், இசையும் நடனமும், விருந்தும் என குதூகலம்தான். மணமகள் குறிப்பிட்ட நாள் வரை தனி குடிசையில் இருக்க வேண்டும். மணமகன் எல்லோருக்கும் சிக்கன் மற்றும் புகையிலை விருந்தளித்த மறுநாள், ஒரு ஆடு வெட்டப்பட்டு அதன் ரத்தம் குடிசை மீது தெளிக்கப்படுகிறது. மணமகளின் தாய் அவளிடம் திருமணத்துக்குச் சம்மதம் பெற, மணமகன் அந்த குடிசைக்குள் நுழைய, திருமணம் அறிவிக்கப்படுகிறது. விருந்தினர்கள் மணமகளுக்குப் பரிசு (நாணயம்) அளிக்க வேண்டும். நம்மூரில் கணவன் பெயரை மனைவி சொல்வதில்லை எனும் வழக்கம்போல, நைஜீரியாவில் கணவன், மனைவி பெயரை சொல்வதேயில்லை. பெண்ணின் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுக்குத் தான் அவரது பெயரைச் சொல்லும் உரிமை இருக்கிறது. அங்கு மணமாகாத பெண்களை மட்டுமே பெயர் சொல்லி அழைக்கலாம். மணமான பெண் என்றால் அவரது தந்தை பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்!

மோதிரம் மட்டுமல்ல... நெக்லஸ், காதணியும்!

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

சீனாவின் தாக்கம், தெற்காசிய நாடான வியட்நாமின் கலாசாரத்தில், குறிப்பாக திருமணச் சம்பிரதாயங்களிலும் உண்டு. முகூர்த்த நாள் குறிப்பது, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது இங்கும் உண்டு. பொதுவாக நிச்சயதார்த்தம் ஆறு மாதங்களுக்கு முன் நடக்கிறது. மணமகன் குடும்பம் சார்பாக மணமகள் குடும்பத்துக்கு பரிசு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பரிசும் சிவப்புத்துணி மூடி அளிக்கப்படும். திருமணத்தில் மணமகள் பாரம்பர்ய ஆடை அணிந்திருப்பார். சில பகுதிகளில் மணமகள் நகை மட்டும் அணிந்திருக்க மாட்டார். அதுதான் மணமகன் தரவிருக்கிறாரே? ஆம்... மோதிரம் அணிவிப்பதுடன் காதணி, நெக்லஸ் ஆகிய நகைகளையும் திருமணத்தில் மாப்பிள்ளை, பெண்ணுக்கு அணிவிப்பார்!

ரொமான்டிக் ஸ்காட்லாந்து திருமணம்!

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

கோட்டைகளுக்கும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கும் பெயர் பெற்ற ஸ்காட்லாந்தில், திருமணத்தின் போது தந்தை பெண்ணை மணமகனிடம் ஒப்படைக்கிறார். மணப்பெண் அவளுக்கான வாகனத்தில் ஏறிக்கொண்டதும் அவளது அப்பா உள்ளூர் குழந்தைகள் எடுத்துக்கொள்வதற்காக நாணயங்களை வீசி ஏறிவார். இதன் மூலம் மகளின் வாரிசுகளுக்கு அவர் அதிர்ஷ்டத்தை நாடுவதாகப் பொருள். சர்ச்சில் மணமக்கள் மோதிரம் மாற்றி, முத்தமிட்டுக்கொள்ள, விருந்தினர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்வார்கள். பின்னர் காட்லாந்து இசைக்கருவியான பேக்பைப்பர் முழங்க மணமக்கள் விருந்தினர் படைசூழ இல்லம் செல்வார்கள்!

திருமணத்துக்கு முன் பார்த்துக்கொள்ளக் கூடாது!

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

சம்பா நடனத்துக்குப் பெயர் பெற்ற பிரேசில் நாட்டில், திருமணங்கள் செலவு மிக்கவை. பொதுவாக மணமகள் குடும்பமே செலவை ஏற்கும் வழக்கம் இருந்தாலும் நவீன காலங்களில் திருமணச் செலவு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. திருமணத்துக்கு முன் மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அதிர்ஷ்டமில்லாததாக கருதப்படுகிறது. நிச்சயதார்த்தத்தின் போது வலது கையில் அணிந்த மோதிரத்தை சர்ச்சில் நடக்கும் திருமணத்தின்போது இடது கைக்கு மாற்றி அணிந்து கொள்கிறார்கள் மணமக்கள்!

ஏழு தலைமுறை பொருத்தம்!

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

இந்த மத்திய ஆசிய நாட்டின் திருமணம்தான் உலகிலேயே கடினமான திருமணமாக இருக்க வேண்டும். ஏனெனில் கஜகஸ்தான் வழக்கப்படி ஏழு தலைமுறைகளாக உறவினர்களாக இல்லாதவர்களே திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே முதலில் இருதரப்பினரும் தாங்கள் உறவினர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்கு குடும்பத்தின் பாரம்பர்ய மரபை அறிந்திருக்க வேண்டும். திருமணம், பொருத்தம் பார்ப்பதில் இருந்து துவங்குகிறது. 40 நாட்கள் வரை திருமண காலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மணமகனின் உறவினர் பெண் ஒருவர் மணப்பெண் காதில் தங்க காதணி அணிவிப்பார். பின்னர் மணமகனின் தாய் மணப்பெண்ணின் தாய்க்கு பெண்ணை பெற்று வளர்த்ததற்காக பரிசு அளிப்பார். விருந்து, இசையுடன் திருமணம் முடிவுக்கு வரும்.

மணமகளுக்கு சாக்லேட் பரிசு!

உலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்!

ஆசிய நாடான ஆர்மினிய வழக்கப்படி மணமகன் மணப்பெண்ணின் சம் மதத்தை முதலில் கோர வேண்டும். இதற்கு ‘கோஸ்க் ஆர்னல்’ என்று பெயர்.மணமகள் ஏற்றுக்கொண்டால் இந்தச் செய்தி உறவினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ‘கோஸ்க் கேப்’ என்று பெயர். இதன் மூலம் இரு குடும்பத்தாரும் நெருங்கி வருகின்றனர். மணநாளுக்கு முந்தைய இரவு கொண்டாட்டம் துவங்குகிறது. மணமகன் குடும்பத்தினர், மணமகளுக்கான ஆடை, காலணி, சாக்லேட் என்று பரிசுகளை வாரி வழங்குவார்கள். மணப்பெண், அங்குள்ள கன்னிப்பெண்கள் தலை மீது அலங்காரத்துணியை அணிவிக்க, பின்னர் மணமான பெண் ஒருவர் அதை மணப்பெண்ணுக்கு முகத்தை மூடும் வகையில் அணிவிப்பார். மறுநாள், சர்ச்சில் திருமணம்!

- சைபர்சிம்மன்