Published:Updated:

பொருத்தம் மனதிலும் வேண்டும்!

பொருத்தம் மனதிலும் வேண்டும்!
பொருத்தம் மனதிலும் வேண்டும்!

நம் திருமண அமைப்பின் உண்மையைச் சொன்னார், 20 வருட அனுபவமிக்க சென்னையைச் சேர்ந்த குடும்பநல ஆலோசகர் சராஸ் பாஸ்கர்.

பொருத்தம் மனதிலும் வேண்டும்!
பொருத்தம் மனதிலும் வேண்டும்!

‘‘திருமணத்துக்கு உயரம் தொடங்கி,  ஜாதகம் வரை எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கிறோம். எல்லா வற்றையும்விட முக்கியமானது இருவரும் வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என்ற அபிப்ராயங்களும், எதிர்பார்ப்புகளுமே. ஆனால், அதைப் பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வது கிடையாது. மற்றவர்களுக்கு, அதை அறிவதற்கான வழி தெரியாது!’’ -  நம் திருமண அமைப்பின் உண்மையைச் சொன்னார், 20 வருட அனுபவமிக்க சென்னையைச் சேர்ந்த குடும்பநல ஆலோசகர் சராஸ் பாஸ்கர்.

பொருத்தம் மனதிலும் வேண்டும்!

‘‘மனப் பொருத்தத்தை அறிந்து கொள்ள மற்றும் உயர்த்திக்கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, கை கொடுக்கும்... இந்த கொஸ்டினர்! திருமணமாகவிருக்கும் மாப்பிள்ளை, மணப்பெண் இருவரும் தனித்தனியாக இதை பூர்த்தி செய்யுங்கள். இருவரின் பதிலும் இணைந்து போனால், மனப்பொருத்தமும் இணைந்து போகும், சேர்ந்து ஆரம்பிக்க இருக்கிற வாழ்வின் சூழலும் அப்படியே அமையும்! பதில்கள் மிகுதியாக வேறுபடும் பட்சத்தில், இருவரும் இப்போதே அந்த விஷயங்கள் குறித்து பக்குவமாக ஆலோசியுங்கள். அதற்காக, ஒருவரோடு ஒருவர் அத்தனை அம்சங்களிலும் பொருந்திப் போக வேண்டும் என்பதில்லை. துணைக்கு ஏற்ப தன்னை பக்குவப்படுத்திக்கொள்ளும், விட்டுக் கொடுக்கும் மனம் இருவருக்கும் இருந்தால், எல்லா பொருத்தங்களும் சாத்தியமாகும்!’’ - அழகாகச் சொன்னார் சராஸ் பாஸ்கர்!

- ந.ஆஷிகா

அடுத்த கட்டுரைக்கு