Published:Updated:

ஆச்சர்யம்... ஆனந்தம்... அசத்தலான அழைப்பிதழ் சூட்சுமம்!

ஆச்சர்யம்... ஆனந்தம்... அசத்தலான அழைப்பிதழ் சூட்சுமம்!

திருமண அழைப்பிதழ்களில் எண்ணிலா வகைகள், சுவாரஸ்யங்கள், கற்பனைச் சிறகுகள் கோத்து கலக்கிக் கொண்டிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த  ‘கிரியேட்டிவ் வெடிங் கார்ட்ஸ்’ஸின் வெடிங் கார்டு டிசைனர் மாதேஷ்!

ஆச்சர்யம்... ஆனந்தம்... அசத்தலான அழைப்பிதழ் சூட்சுமம்!

“விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டு, ‘இது க்ளிக் ஆகுமா?’னு சோதனை முயற்சியா செய்து பார்த்ததுதான் திருமண அழைப்பிதழ்கள் டிசைனிங். இந்த ஒரு வருஷமா பிசினஸ்ல நான் படு பிஸி!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- சிரிக்கிறார் மாதேஷ்.

‘‘என் தங்கை திருமண அழைப்பிதழ் தான், என்னோட கன்னி முயற்சி. தங்கை, மாப்பிள்ளை ரெண்டு பேருமே ஐ.பி.எல் விசிறிகள். அதோட அவர்களின் முகூர்த்த தேதியும் நாடு ஐ.பி.எல் ஃபீவர்ல இருந்தப்போ குறிக்கப்பட்டது. அவங்களுக்காக நான் டிசைன் செஞ்சது, ஐ.பி.எல் தீம் வெடிங் கார்டு. ஐ.பி.எல் டிக்கெட் மாதிரி டிசைன் செய்த அந்த அழைப்பிதழுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அந்த சந்தோஷம்தான் தொடர்ந்து இதில் கற்பனையோட களமிறங்க வெச்சது.

ஆச்சர்யம்... ஆனந்தம்... அசத்தலான அழைப்பிதழ் சூட்சுமம்!

நூத்துக்கணக்கான வெடிங் கார்டு டிசைன்களைப் பார்த்து, அதுல ஒண்ணை செலக்ட் செய்து கொடுக்குற காலமெல்லாம் இப்போ மலையேறிவிட்டது. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் மிக முக்கியமான நிகழ்வான திருமணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் கொண் டாட நினைக்கிறாங்க, அழகான நினைவா தக்கவைக்க ஆசைப்படுறாங்க. அப்படித்தான் அழைப்பிதழிலும் புதுமையை நிரப்ப ஆர்வமா இருக்காங்க. ‘சே... இப்படி ஒரு கார்டை பார்த்தேயில்ல!’னு அவங்களுக்குப் பாராட்டு வாங்கித் தர்ற கார்டுகளா நான் டிசைன் செய்து கொடுக்கறேன்.

எங்கிட்ட கார்டு ஆர்டர் கொடுக்க, மணமகன், மணமகள் ரெண்டு பேரும் என்னை நேரடியா சந்திக்கணும். அவங்க படிப்பு, வேலை, பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்பார்ப்புகள், குடும்ப பின்புலம், காதல் திருமணமா, பெற்றோர்கள் ஏற்பாடு செய்ததானு எல்லா கதைகளையும் கேட்ட பிறகுதான், அவங்களுக்கு என்ன தீம்ல டிசைன் பண்ணலாம்னு நானும், என் டீம் மேட்ஸ் ஆறு பேரும் சேர்ந்து யோசிப்போம். ‘வாவ்! இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை!’னு மணமக்கள் பரவசமாகற வகையில புதுமையா ஒரு லைன் பிடிப்போம். கார்டு டிசைன் அவங்களுக்கு திருப்தியான பின்தான் பணமே வாங்குவோம். 

ஆச்சர்யம்... ஆனந்தம்... அசத்தலான அழைப்பிதழ் சூட்சுமம்!

இப்படி பல தீம்களில் நான் வெடிங் கார்டுகள் டிசைன் செய்திருக்கேன். அதில் எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட 250 மணி நேரம் உழைப்பை எடுத்துட்டு உருவான ஒரு வெடிங் கார்டுதான். அதாவது, ஃபேஸ்புக் மூலமாக பெண்ணுக்கு அறிமுகமாக இளைஞன் ஒருதலையாக காதலிக்கிறான். பிறகு அந்த பெண்ணின் மொபைல் எண்ணை பெற்று சாட்டிங், `வாட்ஸ் அப்’ என வளரும் காதல் காபி ஷாப், தியேட்டர் என ஊர் சுற்றிய இடங்களில் தொடங்கி திருமணம் முடியும் வரையிலான அனைத்தையும் 8 பக்க இன்விடேஷனில் சொல்லியிருக்கிறேன்.  இதுதவிர, இரு வீட்டாரும் முதலில் சந்தித்துக்கொண்ட இடம், பெண் பார்த்த நிகழ்வு, மணமக்களுக்குப் பிடித்த உணவுனு இதையெல்லாம் சொல்லும் ஸ்டோரி போர்டு டிசைன், மணமக்கள் பணியாற்றும் சூழலைப் பிரதிபலிக்கும் கார்டு, அவர்கள் இருவருக்கும் இணைந்து பிடித்த திரைப்படம்னு கார்டுக்கான கரு எதுவாவும் இருக்கும். நாங்க எதிர்பார்க்கற ரிசல்ட் ஒண்ணே ஒண்ணுதான்... கார்டைப் பார்த்துட்டு மணமக்களுக்கு ஏற்படுற சர்ப்ரைஸ் சந்தோஷம்!’’

- இமைகள் மூடித் திறக்கிறார் மாதேஷ்!

அழைப்பிதழில் கேரிகேச்சர்கள்!

ஆச்சர்யம்... ஆனந்தம்... அசத்தலான அழைப்பிதழ் சூட்சுமம்!

‘இளோ கேரிகேச் சர்ஸ்’ஸின் உரிமையாளர் இளங்கோ, வெடிங் கார்டுகளில் கேரிகேச்சர் டிசைனிங் செய்து கொடுக்கும் டிசைனர். ‘‘லயோலாவில் விஸ் காம் முடிச்சிட்டு, கேரி கேச்சர் டிசைனரா கேரியரை ஆரம்பிச்சேன். திரைப் படங்களுக்கும் கேரிகேச்சர் டிசைனிங் செய்திருக்கேன். கார்டுக்கு ஒரு தீமுக்கு 5,000 ரூபாய் வரை வாங்குவேன். டிசைனிங் மட்டும்தான் செய்து கொடுப்பேன். இன்றைய இளைஞர்கள் கார்டு டிசைனிங் கொடுக்க வரும்போது, தாங்களே ஒரு பிளானோடதான் வருவாங்க. அதை டியூன் செய்து, மற்றும் சிலருக்கு நானே ஐடியாஸ் சொல்லி ஒரே வாரத்தில் டிசைன் செய்து கொடுத்துடுவேன். தங்களை கேரிகேச்சர்ஸா பார்க்கும்போது மணமக்கள் ரொம்பவே வித்தியாசமா, பரவசமா உணர்வாங்க!’’ என்கிறார்.

- ந.ஆஷிகா
படங்கள்: இரா.யோகேஷ்வரன்