Published:Updated:

கல்யாண சாப்பாடு போடுங்க..!

கல்யாண சாப்பாடு போடுங்க..!

‘‘ஒரு திருமணத்தை சிறப்பாக்குவது, அதன் விருந்து. பத்து வருடங்கள் ஆனாலும், ‘அவர் வீட்டுக் கல்யாண சாப்பாடு, ஆஹா...’ என்று அதன் சுவை நுனிநாக்கில் இருக்க வேண்டும்!’’

கல்யாண சாப்பாடு போடுங்க..!

- சுவைத்துப் பேசுகிறார், சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, ‘குரு ராயர் கேட்டரிங் சர்வீஸ்’ - வேதப்பிரியா. தனது 29 வருட கேட்டரிங் சர்வீஸ் அனுபவத்தின் அடிப்படையில் திருமண வீட்டினருக்கு உபயோகப்படும் வகையில் சில தகவல்களையும், திருமண விருந்தின் அடிப்படை சாப்பாட்டு அயிட்டங்கள் மற்றும் இன்றைய  திருமண விருந்துகளில் இடம்பெறும் புதுப்புது சமையல் அயிட்டங்களையும், தோராயமான மெனு கட்டணத்தையும் பகிர்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘கல்யாண சமையலுக்கான சமையல்காரர் அல்லது கேட்டரிங் நிறுவனத்தினரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு...

கல்யாண சாப்பாடு போடுங்க..!

 அவர் சமைக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து, அவர் சமைக்கும் முறை, பதார்த்தங்களின் சுவை போன்றவற்றை அறியவும்.

கல்யாண சாப்பாடு போடுங்க..!

 அவர் ஏற்கெனவே சமைத்த திருமண வீட்டினரிடம் கருத்து கேட்கவும்.

கல்யாண சாப்பாடு போடுங்க..!

 அவர் சமையலின் ருசி, சமையல் பதார்த்த வகைகளை நேரில் பார்த்தே ஆர்டரை உறுதி செய்யவும்.

கல்யாண சாப்பாடு போடுங்க..!

 முக்கியமாக சாப்பாடு தட்டுப் பாடு ஏற்பட்டால் உடனடியாகச் சமாளிக்கும் திறன் உள்ளவரா என்று பார்த்துக்கொள்ளவும்.

கல்யாண சாப்பாடு போடுங்க..!

வழக்கமான சாம்பார், ரசம், பொரியல் மட்டுமல்லாமல், புதுப்புது அயிட்டங்களான ஃப்ரைடு ரைஸ், பானிபூரி, கச்சோரி போன்ற சாட் அயிட்டங்கள், வெஜ் ரோல் போன்ற  ஸ்டார்டர் அயிட்டங்கள், க்ரீன் சாலட், பைனாப்பிள் மின்ட் சாலட் மற்றும் ஸ்வீட் வகைகள் - க்ரீம் பர்ஃபி, மில்க் பிஸ்தா பர்ஃபி, பாதாம் சாக்கோ ரோல், டெண்டர் கோகோநட் பாயசம்,  சூடாக கேரட் அல்வாவை ஐஸ்க்ரீமுடன் கலந்து கொடுப்பது, எண்ணெயில் பொரித்த ஐஸ்க்ரீம் என தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்துகொண்டிருப்பவர்களை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.

திருமண விருந்தினர்களில் சர்க்கரை நோய் அன்பர்களுக்கு தற்போது சுகர்ஃப்ரீ லட்டு, பாயசம் மற்றும் சுகர்ஃப்ரீ ஐஸ்க்ரீம் வகைகளும் கிடைக்கின்றன. இதுபோன்ற  விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்தால்தான் விருந்தினர்கள் அனைவரையும் திருப்திபடுத்த முடியும்.

இப்போது நடக்கும் மாடர்ன் திருமணங்களில், சாப்பாட்டு அயிட்டங் களை வயதானவர்களுக்கான ஃபுட் கவுன்ட்டர், யங்ஸ்டர்களுக்கான பீட்சா, பாஸ்தா, சைனீஸ் வகை கவுன்ட்டர்கள், குழந்தைகளைக் கவரக்கூடிய ஐஸ்க்ரீம்கள், ஜூஸ் வகைகள், சிப்ஸ், சாதம், பருப்பு, நெய் மற்றும் இனிப்பு வகைகள் முதலியவை பேபி கவுன்ட்டரில் என தனித்தனியாக பிரித்து, விருந்தினர்கள் வசதியாக சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் அரேஞ்ச் செய்தும் கொடுக்கிறோம். பஃபே அல்லது இலைபோட்டு பரிமாறுவது என்று எதுவாக இருந்தாலும், உணவை வீணாக்காமல் பார்த்துக்கொள்வதுடன், மீதமாகும் உணவை ஆசிரமங்களுக்குக் கொடுக்கும் ஏற்பாட்டையும் சில கேட்டரர்ஸ் செய்கிறார்கள்.

கல்யாண சாப்பாடு போடுங்க..!

எங்களிடம் ஒரு பிளேட் சாப்பாடு மினிமம் 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. 25 பேரிலிருந்து 3,000 பேர் வரை சமையல் ஆர்டர் எடுக்கப்படுகிறது. 500 பேருக்கு மேல் கட்டணத்தில் 10% சலுகையும், 1,000 பேருக்கு மேல் 20% சலுகை போன்றவைகளும் வழங்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையான பட்ஜெட்டில், வாயில் டெகரேஷன் முதல் சாப்பாடு வரை ஒட்டுமொத்த திருமண கான்ட்ராக்ட்டுக்கான வெடிங் பேக்கேஜுகளும் உண்டு’’ என்று சொல்லும் வேதப்பிரியா, தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி திருமண சாப்பாட்டு மெனுவுக்கான தோராய தொகையைச் சொல்கிறார்...

250 பேருக்கு தோராயமாக 35,000 ரூபாய் செலவில்...

காலை உணவு - 5 வகைகள்

கேசரி, இட்லி, பொங்கல், வடை, பூரி/இடியாப்பம், சட்னி, சாம்பார் வகைகளுடன்.

250 பேருக்கு தோராயமாக 55,000 ரூபாய் செலவில்...

மதிய உணவு - 14 வகைகள்

பச்சடி, கூட்டு, அவியல், பொரியல், சாதம், நெய், பருப்பு, சாம்பார், ரசம், அப்பளம், தயிர், ஊறுகாய், இனிப்பு, பீடா.

250 பேருக்கு தோராயமாக 55,000 ரூபாய் செலவில்...

இரவு உணவு - 13 வகைகள்

இனிப்பு, சப்பாத்தி/பூரி, சன்னா மசாலா/பனீர் பட்டர் மசாலா, வெஜ் புலாவ், சாம்பார், சாதம், வடை, ரசம், தயிர், ஐஸ்க்ரீம், காஷ்மீர் புலாவ், பீடா.

உங்கள் வீட்டுத் திருமணத்தில் என்ன மெனு?!

- கி.வியாகுலமேரி, படங்கள்: அசோக் அர்ஸ்