Published:Updated:

‘லைஃப் பார்ட்னர்’ ட்ரீம்ஸ் !

‘லைஃப் பார்ட்னர்’ ட்ரீம்ஸ் !

வ்வொருவருக்கும் தங்களின் 'லைஃப் பார்ட்னர்’ பற்றிய 'ட்ரீம்ஸ்’ நிறைய இருக்கும். ''உங்க கல்யாணக் கனவுகள் என்ன?''  இந்த பேச்சிலர் ஸ்டார்களிடம் கேட்டோம்..! 

ஆதி

நடித்த படங்கள்: மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், கோச்சடையான், யாகாவாராயினும் நா காக்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரவிருக்கும் படம்: மலுப்பு (தெலுங்கு).

பதில்: அமைதியான அழகியா இருக்கணும். ஓவர் மேக்கப் எனக்கு அலர்ஜி. சுதந்திரமா சிந்திக்கணும். முதல்ல குடும்பம், அப்புறம் வேலைனு அக்கறை செலுத்தணும். ஸீன் போடுற பெண்கள் எனக்கு அலர்ஜி. எதுக்கெடுத்தாலும் கோபப்படுற ஷார்ட் டெம்பர்டு டைப்பா இல்லாம, 'கூல்’ பொண்ணா இருக்கணும். அன்பின் மேல அதீத நம்பிக்கை உள்ளவங்களா இருக்கணும்.

ரீல் க்ரஷ்: 'அலைபாயுதே’ ஷாலினி பிடிக்கும். எந்த கேரக்டரில் நடிச்சாலும் அனுஷ்கா ஷர்மா பிடிக்கும்.

‘லைஃப் பார்ட்னர்’ ட்ரீம்ஸ் !

அஸ்வின்

நடித்த படங்கள்: ஏழாம் அறிவு, மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேகா.

வரவிருக்கும் படங்கள்: ஸீரோ, திரி, தல 56.

பதில்: காமெடி சென்ஸ் கண்டிப்பா இருக்கணும். எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் சக்சஸ்ஃபுல் ஜோடியா தெரிய அது ரொம்ப முக்கியம். அவங்க கனவுகள், ஆசைகளை விட்டுகொடுக்காம இருக்கணும். சுதந்திரமா முடிவு எடுக்கணும். தைரியமா இருக்கணும். எப்பவும் தன்னையும் வீட்டையும்

‘லைஃப் பார்ட்னர்’ ட்ரீம்ஸ் !

பளிச்’னு பார்த்துக்கணும். எனக்கு டிராவலிங் ரொம்பப் பிடிக்கும். என் கூட சலிச்சுக்காம டிராவல் பண்ணணும். 'இப்படி எல்லாம் ஒரு பொண்ணை செஞ்சாதான்  உண்டு’னு சொல்றீங்களா! நான் ஏற்கெனவே பார்த்துட்டேனே! அய்யய்யோ... உளறிட்டேனா?!

ரீல் க்ரஷ்: 'மரியான்’ பட பார்வதியும், படத்துல அவங்க கேரக்டரும் ரொம்பப் பிடிக்கும்.

அஷோக் செல்வன்

நடித்த படங்கள்: சூது கவ்வும், பீட்சா 2  வில்லா, தெகிடி.

வரவிருக்கும் படங்கள்: சவாலே சமாளி, 144, பிறை தேடிய நாட்கள், கூட்டத்தில் ஒருத்தன்.

‘லைஃப் பார்ட்னர்’ ட்ரீம்ஸ் !

பதில்: எனக்குக் கல்யாணத் துல நம்பிக்கையே இல்ல. ஒருவேளை, என்னோட வயசு காரணமா இருக்கலாம். 25தான் ஆகுது. பின்னாடி கல்யாண ஆசை வரலாம். வந்தாலும், வீட்டுல எல்லாம் பொண்ணு பார்க்கச் சொல்ல மாட்டேன். சத்தியமா செட் ஆகாது. என் வேலையைப் பத்தி புரிஞ்சுக்கிற, பெரிய மனசு பண்ணி சகிச்சுக்கிற பொண்ணா இருக்கணும். அப்புறம்... கொஞ்சம் காமெடி சென்ஸ் இருக்கணும். மியூசிக் தெரிஞ்சா இன்னும் சூப்பர்! எதையுமே ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கணும். எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்கவே கூடாது.

ரீல் க்ரஷ்: சின்ன வயசுல இருந்தே குஷ்பு, சிம்ரன் பிடிக்கும்.

நகுல்

நடித்த படங்கள்: பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், கந்தக்கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்.

வரவிருக்கும் படங்கள்: அமளி துமளி, நாரதன்.

பதில்: தோற்றம், மேனரிஸம், கேரக்டர்னு எதுலயாவது எங்கம்மாவோட சாயல் இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். என் மனைவி, எனக்கு நல்ல தோழியா இருக்கணும். இந்த உலகத்தில் நான் சந்திக்கிற எந்தப் பிரச்னையையும் நான் அவங்ககிட்ட பகிர்ந்துக்கத் துடிக்கிற அளவுக்கு ஆதரவும் அரவணைப்பும் தரணும். வளர்ப்புப் பிராணிகளைத் தத்தெடுத்து வளர்க்குற என் ஆர்வத்துக்கு பச்சைக் கொடி காட்டணும். பெரியவங்களை மதிக்கணும். லைஃப்ல நல்ல விஷயங்களை, புது விஷயங்களை கத்துக்க ரெடியா இருக்கணும். மத்தபடி எனக்கு அழகு, நிறமெல்லாம் மேட்டரே இல்ல.

ரீல் க்ரஷ்: மாதுரி தீட்ஷித், ஸ்ரீ தேவி ஆல் டைம் ஃபேவரைட். 'மௌன ராகம்’ ரேவதி, 'குயின்’ கங்கனா ரணாவத், 'மேரி கோம்’ பிரியங்கா சோப்ரா... மை டார்லிங்ஸ்.

‘லைஃப் பார்ட்னர்’ ட்ரீம்ஸ் !

சதீஷ்

படங்கள்: மதராசப்பட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, ஆம்பள, வை ராஜா வை.

வரவிருக்கும் படங்கள்: வா டீல், வி.ஐ.பி 2.

பதில்: சுயசிந்தனை இருக்கணும், சுதந்திரமா இருக்கணும். கிரிக்கெட் பிடிச்சா சேர்ந்து ஜாலியா மேட்ச் பார்க்கலாம். ரிமோட்டுக்கு சண்டையும் வராது. சினிமா பார்க்கணும். கொஞ்சம் புத்தகங்கள் படிக்கணும். என்னைப் பத்தின கிசுகிசுக்களில் நான் படிக்காம மிஸ் பண்ணினதையும் எனக்குப் படிச்சுக் காட்டி சிரிக்கணும். இளையராஜா பாட்டை ரசிக்கிறவங்களா இருந்தா... வீட்டில் தெய்வீக ராகம்தான். அவங்க அப்பா, அம்மாவை நான் நல்லா பார்த்துப்பேன். அதேபோல, என் அப்பா, அம்மாவையும் அவங்க நினைக்கணும். 'யாரு போன்ல?’, 'ஏன் லேட்?’, 'என்ன கலர் சட்டை இது’, 'இன்னும் ஏன் வீட்டுக்கு வரலை’னு எப்பவும் கொஸ்டீன் பேங்கா இருந்தா, நான் ஃபெயில் மார்க்தான் வாங்கணும்!

ரீல் க்ரஷ்: கஜோல் கண்ணுக்கு நான் அடிமை. 'மௌன ராகம்’ ரேவதி ரொம்பப் பிடிக்கும். ஆனா, அது படத்துக்குதான் செட் ஆகும்; வீட்டுக்கு ஆகாது! 'கஜினி’ அஸின் டக்கரு!

கனவுகளோடு இருக்கும் இந்த மாப்பிள்ளைகளுக்கு மனம்போல மனைவி அமைய வாழ்த்துகள்!

- ஷாலினி நியூட்டன்