'ஒரு நாள்... ஏன், ஒரு மணி நேரம்... இல்லயில்ல... ஒரு நிமிஷம்கூட செல்போன் இல்லாம இருக்கவே முடியாது'ங்கிற அளவுக்கு, தூங்குறப்ப, முழிக்கறப்ப மட்டுமில்லாம, மண்டையிடி டிராஃபிக் ஜாம்லகூட சின்ஸியரா (?!) செல்போன் பேசுற 'எந்திரன்... எந்திராணிகள்' அதிகரிச்சுட்டே வர்றாங்க. பரபரப்பான சிட்டியிலகூட, ரோட்ல பேசினபடியே போயிட்டிருக்காங்க.

'இவங்களுக்கெல்லாம் ரோட்ல போறப்ப மட்டும்தான் ஊருல உள்ளவய்ங்க போன் பண்ணி பேசுவாய்ங்களோ?!’னு எல்லாருக்குமே சந்தேகம் வருதுதானே! 'இதை, அவய்ங்ககிட்டயே கேட்டுட்டா என்ன?'னு சென்னையோட ஹாட் டிராஃபிக் ஏரியாவான அண்ணாசாலை, ஸ்பென்ஸர் சிக்னல்ல... காலையில பதினோரு மணியில இருந்து பன்னிரண்டரை வரைக்கும் காத்திருந்து... செல்லுல பேசிட்டே கடந்த பெண்களை நிறுத்தி, ''அப்படி என்னதான் பேசறீங்க... கொஞ்சம் சொல்லுங்களேன்!''னு கேட்டோம்.

என்னமோ, சிம்பன்ஸியே வந்து நின்னு 'சிக்கன் 65' கேட்டது கணக்கா... டென்ஷனாகி, டெரரை கிளப்பிட்டாங்க!

முதல் அட்டெம்ப்ட்டே... தோல்விதான். ''சொல்ல முடியாது'' என்றபடி நம்மை ஏகத்துக்கும் முறைத்தவாறே மின்னலாக கடந்தார் அந்த டீன் ஏஜ் கேர்ள்.

ஸ்வாதி (எத்திராஜ் கல்லூரி): ''தனியா நடக்குறது போர்ப்பா. அதான் இயர்போன்ல பாட்டு கேட்டுட்டே வந்தேன். காலேஜ் பக்கத்துல வந்துட்டதால, நிறுத்திட்டு, போனை 'சைலன்ட் மோட்ல’ போட லாம்னு எடுத்து செர்ச் பண்ணிட்டு இருந் தேன். என் நேரம், நீங்க போட்டோ எடுத்துட்டீங்க.''

அடுத்து நம் கண்ணில் பட்ட அல்ட்ரா மாடர்ன் பெண், ''ஏற்கெனவே இன்னிக்கு ஆபீஸுக்கு லேட்டு. அதனால அவசர அவசரமா போயிட்டு இருக்கேன். எங்க பாஸ் போன் போட்டு வண்டி வண்டியா திட்டுறாரு. இதுல நேரம் காலம் புரியாம நீங்க வேற 'டிஸ்டர்ப்’ பண்ணாதீங்க. ப்ளீஸ்... அண்டர்ஸ்டாண்ட்'' என கை கூப்பி நகர்ந்தார்

திலகவதி - காயிதே மில்லத் முன்னாள் மாணவி: ''என்னோட ஃப்ரெண்ட் 'இன்டர்வியூ’ அட்டெண்ட் பண்ணிகிட்டு இருக்கா. முதல் ரவுண்ட்ல செலக்ட் ஆகிட்டாளாம். கிரேட்! அந்த சந்தோஷத்தை போன் போட்டு சொல்லிட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துல எனக்கும் 'இன்டர்வியூ’. நீங்க கேட்டபிறகுதான், நடுரோட்டுல பேசுறதே எனக்கு தெரியுது..!'' (அடங் கொங்க்காமக்கா...)

லட்சுமி (வீட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கும் பெண்மணி): ''எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். வீட்டுக்காரர் எலெக்ட்ரீஷியனா இருந்தாலும், குடும்ப பாரம் தாங்கல. அதை குறைக்கத்தான் மூணு நாளா

தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் போன் போட்டு, வீட்டு வேலை கிடைக்கு மானு கேட்டுட்டு இருக்கேன். வேலைக்கு வரச் சொல்லி, ஒரு வீட்டுல இருந்து இப்பத்தான் போன் வந்துச்சு. இதை எடுக்கலீனா என் பொழப்பே போயிடும். நானிருக்கற நிலமையில... சுத்தி முத்தி பாக்கத் தோணல.''

அஜிஷா - எத்திராஜ் கல்லூரி: ''ஹலோ, நான் ரோட்டுல பேசுவேன், வீட்டுல பேசுவேன் அதக் கேக்க நீங்க யாரு...? ஏன் போட்டோ எடுத்த முதல்ல டெலிட் பண்ணுங்க.’'

'செல்போன் பேசிக்கொண்டே சாலைகளில் நடப்பது... தண்டவாளத்தைக் கடப்பது உயிருக்கே ஆபத்தானது'

- கடைசியா மெசேஜ் சொல்லிட்டோம்ல!