''அம்மா... நவராத்திரினா என்னம்மா?''

''அதுவா, ஒன்பது நாளைக்கும் கொலு வெச்சு, தினமும் சுண்டல் கொடுப்பாங்க!''

''நீதான் அப்பப்ப சுண்டல் செய்றியே..?''

''இது... சாமிக்காக செய்றது. இதுல நிறைய விசேஷம் இருக்கு!''

''அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?''

''அதுவா... பெரியவங்ககிட்டதான் கேக்கணும். அவங்க செய்தததை நானும் செய்துகிட்டிருக்கேன்''

விழாக்கள்... விரதங்கள்... எல்லாமுமே ஏதோ ஒரு பின்னணியில் உருவாகி, தொன்று தொட்டு தொடர்கின்றன. ஆனால், காரணங்கள் மறைந்துவிட/மறந்துவிட... காரியங்களாகத்தான் பல விழாக்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்... எதற்கு என்று அறியாமலே! நதிமூலம்... ரிஷிமூலம் தெரிந்து, கொண்டாடி மகிழ்வதில்தானே இருக்கிறது பூரணத்துவம்!

ஒவ்வொரு விழாவின் ஆரம்பமும், ஒரு விரதத்துடன் தொடங்கும். நாம் கொண்டாடும் விழாக்கள் என்ன... அவற்றுக்கான விரதங்கள் என்ன... அந்த விரதங்களால் என்ன பலன் கிடைக்கும் என்பதை உங்களில் ஒருத்தியாக அமர்ந்து, உங்கள் மனம் தொட்டு, நேசமுடன் பேச வருகிறேன் தோழிகளே!

இது நவராத்திரி நேரம்... அது கொண்டாடப்படுவதற்கான தாத்பர்யம், அந்த விரதத்தால் கிடைக்கும் பலன்கள்... இவற்றிலிருந்தே தொடரைத் தொடங்குவோமா!

'சர்வம் சக்தி மயம் ஜகத்’ என்பர். சக்தி வழிபாட்டை உயிர்நிலையாகக் கொண்ட கலைத் திருநாள்தான் நவராத்திரி. புரட்டாசி மாதத்தில், மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள், பிரதமை திதி வளர்பிறையில் தொடங்கி... ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. அது ஏன் ஒன்பது நாட்கள்?

எண் கணிதத்தில் ஒன்பது என்ற எண்ணுக்குள், ஒற்றை இலக்க எண்கள் எல்லாம் அடங்கியுள்ளன. அதேபோல், சக்தியிடம் பிரபஞ்சத்தின் அனைத்தும் அடங்கியுள்ளதால் ஒன்பது நாட்கள் விழா!

நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்போர்... முதல் 8 நாட்களும் ஒருபொழுது உணவு உட்கொண்டு, 9-வது நாளான மகா நவமியில் முழுவதும் உபவாசம் இருத்தல் நலம். இது முப்பெரும் தேவியரின் அனுகிரகத்தைக் கொடுக்கும்.

துர்கா பூஜை!

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியது. அச்சம் தரும் அம்சமான சக்தி... துர்கா, காளி, மகிஷாசுரமர்த்தனி என்ற பெயர்களில் வணங்கப்படுகிறாள். சிவன் - திரிசூலம், விஷ்ணு - சக்கரம், வருணன் - சங்கு, வாயு - வில், யமன் - பாசம், சூரியன் - அம்பு, குபேரன் - கதை, அக்னி - வேல் அனைத்தையும் தாங்கி, சிங்கத்தை வாகனமாகக் கொண்டு, விந்திய மலைச்சாரலில் ஆட்சி புரியும்போது, அவளை மணக்க விரும்பி போருக்கு வந்தான் மகிஷாசுரன். ஒன்பது நாட்கள் கொலு இருந்து பத்தாவது நாள் மகிஷாசுரனை அழித்தாள் என்கிறது புராணம். அந்த ஒன்பது நாட்களும் ஊசி முனையில் தவம் செய்து அரக்கனை அழித்தாள் என்பதால், இந்த ஒன்பது நாட்களும் ஊசி எடுத்துத் தைக்கக் கூடாது என்றும் சிலர் நம்புகின்றனர். துர்கா பூஜையால் தைரியம், தன்னம்பிக்கை பெருகும்.

திருமகள் பூஜை!

அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்குரியவை. 'ஸர்வேஜனா: காஞ்சன மாச்ரயந்தே’ - அனைவரும் பொருளையே நாடி நிற்பர் என்பது இதன் பொருள். சோமதேவர் என்ற ஏழை அந்தணரின் வீட்டின் முன் நின்று, 'பவதி பிக்ஷ£ந்தேஹி’ என்று ஆதி சங்கரர் கேட்க, அந்தணரின் மனைவி தர்மசீலை, வீட்டிலிருந்த நெல்லிக்கனியை அன்புடன் அளித்தாள். சங்கரர் மகிழ்ந்து 'கனகதாரா தோத்திரம்’ பாட, தங்க நெல்லிக்கனிகள் மழையெனப் பொழிந்தன. எனவே, இந்நாட்களில் கனகதாராவைப் பாடி, திருமகளை நவராத்திரி விழாவில் வணங்கினால் செல்வம் பெருகும்!

சரஸ்வதி பூஜை!

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிதேவிக்கு உரியவை. கலைமகளை வழிபட்டால் அறிவு வளரும். அறிவால் செல்வத்தையும், அதன் வழி புகழையும் பெறலாம். கலைமகள் விழாவன்று புத்தகங்கள், எழுதுகோல் இவற்றை அடுக்கி, சரஸ்வதியை வழிபட்டால், எந்த இக்கட்டிலிருந்தும் நம்மைக் காக்கும் அற்புத சக்தியான அறிவை முழுமையாக பெறமுடியும்.

தொழிலாளிகளும் தத்தம் தொழில் சார்ந்த கருவிகளைத் தூய்மை செய்து, சந்தனம் பூசி, மலரிட்டு வழிபடுவர். இது 'ஆயுதபூஜை’ என்றழைக்கப்படும்.

வன்னி மரமும்... விஜயதசமியும்!

10-ம் நாள் விஜயதசமி! இந்த நாளை வட மாநிலங்களில் 'ராம் லீலா’ என்ற பெயரில் ஆடிப் பாடிக் கொண்டாடி, ராவணனின் உருவ பொம்மைக்குத் தீயிடுவர்; ராமன், ராவணனை வென்ற நாள் இது!

பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தை முடித்து துரியோதனனை வென்று கொடுமையை ஒழிப்பதாகச் சங்கற்பம் பூண்ட நாள். துர்க்கை அருளால் அவர்கள் வெற்றியும் பெற்றதால், குழந்தைகளுக்குப் பாட்டு, படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆர்வமுள்ளவர்கள் தசமியன்று தொடங்குதல் சிறப்பாகும்!

பார்வதிதேவி களைப்படைந்தபோது வன்னி மரமே நிழல் தந்தது. சீதையைப் பிரிந்த ராமன் வன்னி மரத்தைச் சுற்றி வந்து சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தங்கள் படைக்கலங்களை வன்னிமரப் பொந்தில்தான் ஒளித்து வைத்தார்கள். இப்படிப் பல காரணங்களால் வன்னி மரம் வழிபாட்டுக் குரியதாயிற்று.

உளம் மகிழ... கொலு!

நவராத்திரி பண்டிகையின் சிறப்பம்சம், குழந்தைகளையும் பெரியவர்களையும் கவர்ந்திழுக்கும் கொலு. 'எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன்’ என்று கண்ணன் கூறுவதற்கேற்ப அனைத்து உயிர்களில் இறைவன் குடியிருப்பதை உணர்த்துவதே கொலுவின் தத்துவம்.

இந்நாட்களில் ஒன்பது நாட்களும் விதம்விதமான சுண்டல் படைத்து வழங்கப்படும். கொலு முன் அமர்ந்து பாடுவது, கருவிகளை வாசிப்பது, நாட்டியமாடுவது அனைத்தும் தேவிக்கு உகந்தவை என்பதை,

''கீத வாதித்ர ந்ருத்யை

கர்த்தவ்யம் ச மகோத்சவ:'' என்கிற ஸ்லோகம் மூலம் உணரலாம்.

கலைகளும், பண்பாடும் அழியாது காப்பதற்கும், உறவுகள் பழகி மகிழ்வதற்கும், குழந்தைகளின் பக்தி, அறிவு, ஆற்றலை மேம்படுத்துவதற்கும் நவராத்திரி விழா பெரிதும் துணை செய்வதால் 'மகா நோன்பு’ என்று இதனை அழைத்தல் பொருத்தமே!

- கொண்டாடுவோம்..