இளம் தம்பதிகளுக்கான ஊட்டச்சத்து நிறைந்த சில ரெசிப்பிகள் இதோ...

பனீர் சீஸ் பன்

தேவையானவை: நல்ல தரமான பன் - 6, சீஸ் துருவல், பனீர் துருவல் - தலா அரை கப், கேரட் துருவல், கோஸ் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை: பனீர், சீஸ் துருவலுடன் பச்சை மிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல், கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பன்னை, படுக்கை வாக்கில் 2 துண்டாக வெட்டவும். கீழ்பாகத்தைக் கத்தியால் கீறி சின்ன பள்ளத்தை ஏற்படுத்தவும். ஒரு டேபிள்ஸ்பூன் பனீர் கலவையை, இந்த பள்ளத்தில் அழுத்தி வைத்து, மற்றொரு பாக பன் கொண்டு மூடவும். தவாவை சூடேற்றி ஸ்டஃப் செய்த பன்னை அதன்மேல் வைத்து, சுற்றிலும் வெண்ணெய் தடவி, வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு, நன்கு சூடானதும் எடுத்துச் சாப்பிடக் கொடுக்கவும். லேசாக வறுத்த எள்ளை மேலே தூவியும் பரிமாறலாம்.

நட்ஸ் கீர்

தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பாதாம் பருப்பு - 20, முந்திரிப் பருப்பு - 10, குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன், சிறிய பிஸ்தா பருப்பு - 3 டீஸ்பூன்.

செய்முறை: பாதாம், முந்திரியை அரைத்துக் கொள்ளவும். பாலை, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். ஓரிரு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி... குங்குமப்பூ, பிஸ்தாவால் அலங்கரிக்கவும்.

இதைச் சூடாகவோ, ஃப்ரிட்ஜில் குளிர வைத்தோ பருகலாம்.