நா.முத்துக்குமார், பா.விஜய் மற்றும் யுகபாரதி... இன்றைய தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் பாடலாசிரியர்கள். ஊருக்கெல்லாம் பாட்டெழுதும் இவர்கள்... சொந்தத்துக்காக எழுதிய பாடல் ஏதாவது இருக்கும்தானே! ஆம்... இருக்கிறது. அது அவர்களுடைய மனைவியர்களுக்காக எழுதிய இனிய காதல் கவிதை. திருமணத்துக்கு முன்பாக... திருமண நேரத்தில் என்று இவர்கள் படைத்திருக்கும் இந்த கவிதை வரிகள், இங்கே...

திருமதி பா.விஜய்

என் இல்லத்திற்குள்

புதியவளாய் நீ!

என் சட்டை அடுக்கிய

அலமாரியின் இடுக்கில்

மடிப்பு கலையாத

புது துப்பட்டா!

என் தலையணைக்கு

அருகாமையில் தடவினால்

பொளபொளவென்று

மல்லிகை!

என் அறைக்குள் நிறைய

துவைத்தும் துவைக்காததுமான

சேலைகள்!

என் மேஜைக்கு மேலே

குழம்பு வைக்கும் கரண்டி

குடிவருகிறது!

தேனீர் கோப்பையில்

தேனீர் தருகையில்

ஏற்கெனவே

ருசிபார்த்ததற்கான தடம்!

அழகுபடுத்திய

என் நூலகத்தின் நடுவே

பவுடர் டப்பாவை

பதியமிடுகிறாய்!

முகம்பார்க்கும்

என் ஆளுயரக் கண்ணாடியில்

மேலிருந்து வரிசையாய்

நீ உரித்து ஒட்டிய பொட்டுகள்!

வெள்ளை வெளேர் என்ற

என் பூத்துவாலை துண்டில்

மஞ்சளை அப்பியுள்ளாய்

திட்டுத் திட்டாய்!

யாரும் தொடக்கூடாத

என் பணப்பெட்டியை

கண்ணாடி வளையல்களுக்கான

கஜானாவாய் மாற்றுகிறாய்!

பாத்திரங்களைத் தேய்ப்பதாய்

பந்தாடுவாய்

வறுப்பதாய் காய்களை

கறுக்குவாய்

துடைப்பதாய் பொருட்களை

உடைப்பாய்

இருந்தாலும்

உன்னை எங்கள்

எல்லோருக்கும் பிடித்திருக்கிறது!

காரணம்...

நீ

பூஜையறையில் விளக்கேற்றுவது

எண்ணெய் ஊற்றியல்ல...

உன்னை ஊற்றியல்லவா!

உன்

சாமர்த்தியம் என்ன தெரியுமா?

மகாராணியாய் இருக்கும்

என் அம்மாவுக்கு எதிரே

மற்றொரு

மகாராணியாய் இடம் வகுக்காமல்

இளவரசியாய் மாறி

மகாராணியின் மடியிலேயே

இடம் பிடித்துக் கொண்டாயே

அதுதான்!

- பா.விஜய்

இனிக்கும் பொய்கள்!

எனக்காகப் பிறந்தவளைக்

கண்டுபிடித்தேன்! - அவள்

கண்ணசைவில் ஒரு கோடி

கவிதை படித்தேன்!

என் பாதி எங்கே என்று

தேடி அலைந்தேன்! - அவளை

பார்த்தவுடன் அடடா நான்

முழுமை அடைந்தேன்!

இரு இதயம் ஒன்றாய்

இனி அவள்தான் என் தாய்

சரணம் - 1

வேப்பம் பூ உதிர்கின்ற வீட்டு முற்றம்

அவள் போடும் கோலத்தால் அழகாய் மாறும்1

விண்மீன்கள் வந்துபோகும் மொட்டைமாடி

அவள் கொலுசின் ஓசையினால் மோட்சம் போகும்!

காற்று வந்து கதை பேசும் கொடிக்கயிற்றில்

அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்!

காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து

கடிகார முள்மீது ஆட்டம் போடும்!

சரணம்-2

பாதரசம் உதிர்கின்ற கண்ணாடி மேல்

புதிதாகப் பொட்டு வந்து ஒட்டிக்கொள்ளும்!

பழைய ரசம் அவள் கையால் பரிமாறினால்

பழரசமாய் இனிக்குதென்று பொய்கள் சொல்லும்!

பூக்கடைக்கு போகாத கால்கள் ரெண்டும்

புதுப்பழக்கம் பார் என்று திட்டிச்செல்லும்!

ஆண்களுக்கும் வெட்கம் வரும் தருணம் உண்டு

என்பதை ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்!

- நா. முத்துக்குமார்

நா.முத்துக்குமார், பா.விஜய் மற்றும் யுகபாரதி... இன்றைய தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் பாடலாசிரியர்கள். ஊருக்கெல்லாம் பாட்டெழுதும் இவர்கள்... சொந்தத்துக்காக எழுதிய பாடல் ஏதாவது இருக்கும்தானே! ஆம்... இருக்கிறது. அது அவர்களுடைய மனைவியர்களுக்காக எழுதிய இனிய காதல் கவிதை. திருமணத்துக்கு முன்பாக... திருமண நேரத்தில் என்று இவர்கள் படைத்திருக்கும் இந்த கவிதை வரிகள், இங்கே...

திருமதி பா.விஜய்

என் இல்லத்திற்குள்

புதியவளாய் நீ!

என் சட்டை அடுக்கிய

அலமாரியின் இடுக்கில்

மடிப்பு கலையாத

புது துப்பட்டா!

என் தலையணைக்கு

அருகாமையில் தடவினால்

பொளபொளவென்று

மல்லிகை!

என் அறைக்குள் நிறைய

துவைத்தும் துவைக்காததுமான

சேலைகள்!

என் மேஜைக்கு மேலே

குழம்பு வைக்கும் கரண்டி

குடிவருகிறது!

தேனீர் கோப்பையில்

தேனீர் தருகையில்

ஏற்கெனவே

ருசிபார்த்ததற்கான தடம்!

அழகுபடுத்திய

என் நூலகத்தின் நடுவே

பவுடர் டப்பாவை

பதியமிடுகிறாய்!

முகம்பார்க்கும்

என் ஆளுயரக் கண்ணாடியில்

மேலிருந்து வரிசையாய்

நீ உரித்து ஒட்டிய பொட்டுகள்!

வெள்ளை வெளேர் என்ற

என் பூத்துவாலை துண்டில்

மஞ்சளை அப்பியுள்ளாய்

திட்டுத் திட்டாய்!

யாரும் தொடக்கூடாத

என் பணப்பெட்டியை

கண்ணாடி வளையல்களுக்கான

கஜானாவாய் மாற்றுகிறாய்!

பாத்திரங்களைத் தேய்ப்பதாய்

பந்தாடுவாய்

வறுப்பதாய் காய்களை

கறுக்குவாய்

துடைப்பதாய் பொருட்களை

உடைப்பாய்

இருந்தாலும்

உன்னை எங்கள்

எல்லோருக்கும் பிடித்திருக்கிறது!

காரணம்...

நீ

பூஜையறையில் விளக்கேற்றுவது

எண்ணெய் ஊற்றியல்ல...

உன்னை ஊற்றியல்லவா!

உன்

சாமர்த்தியம் என்ன தெரியுமா?

மகாராணியாய் இருக்கும்

என் அம்மாவுக்கு எதிரே

மற்றொரு

மகாராணியாய் இடம் வகுக்காமல்

இளவரசியாய் மாறி

மகாராணியின் மடியிலேயே

இடம் பிடித்துக் கொண்டாயே

அதுதான்!

- பா.விஜய்

இனிக்கும் பொய்கள்!

எனக்காகப் பிறந்தவளைக்

கண்டுபிடித்தேன்! - அவள்

கண்ணசைவில் ஒரு கோடி

கவிதை படித்தேன்!

என் பாதி எங்கே என்று

தேடி அலைந்தேன்! - அவளை

பார்த்தவுடன் அடடா நான்

முழுமை அடைந்தேன்!

இரு இதயம் ஒன்றாய்

இனி அவள்தான் என் தாய்

சரணம் - 1

வேப்பம் பூ உதிர்கின்ற வீட்டு முற்றம்

அவள் போடும் கோலத்தால் அழகாய் மாறும்1

விண்மீன்கள் வந்துபோகும் மொட்டைமாடி

அவள் கொலுசின் ஓசையினால் மோட்சம் போகும்!

காற்று வந்து கதை பேசும் கொடிக்கயிற்றில்

அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்!

காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து

கடிகார முள்மீது ஆட்டம் போடும்!

சரணம்-2

பாதரசம் உதிர்கின்ற கண்ணாடி மேல்

புதிதாகப் பொட்டு வந்து ஒட்டிக்கொள்ளும்!

பழைய ரசம் அவள் கையால் பரிமாறினால்

பழரசமாய் இனிக்குதென்று பொய்கள் சொல்லும்!

பூக்கடைக்கு போகாத கால்கள் ரெண்டும்

புதுப்பழக்கம் பார் என்று திட்டிச்செல்லும்!

ஆண்களுக்கும் வெட்கம் வரும் தருணம் உண்டு

என்பதை ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்!

- நா. முத்துக்குமார்