விமானத்தில் தாலி கட்டிய அதிசய தம்பதி!

கப்பலில் கை பிடித்த காதல் ஜோடி!

பறக்கும் பலூனில் மணம் முடித்த காதலர்கள்!

தண்ணீருக்குள் நீர்மூழ்கி ஆடைகளுடன் நடந்த அதிசய கல்யாணம்!

அடுத்த கட்டமாக, செவ்வாய் கிரகத்தில் திருமணம் செய்து கொண்ட, செவ்வாய் தோஷ தம்பதி என்றுகூட செய்திகள் வரக்கூடும்!

ஆனால், ''என்னதான் வசதி வாய்ப்பு இருந்தாலும் எங்கள் வீட்டுத் திருமணம்

கோயிலில்தான்'’ என்கிறார்கள் பலரும். அதற்குப் பலப்பல காரணங்களும் இருக்கின்றன அவர்கள் ஒவ்வொருவரிடமும்...

''எங்கள் குலதெய்வக் கோயில் இது. அதனால இங்கதான் திருமணம் நடக்கணும்.''

''இது பிரார்த்தனை தலம். இங்கு வந்து வேண்டிக் கொண்டதால்தான் திருமணம் நிச்சயம் ஆனது. அதனால் இங்கேதான் திருமணம்.''

''தீராத தோஷம் இருக்கிறது. அதனால் இங்கு வந்து திருமணம் செய்துகொண்டால் அந்த தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்.''

''சாமிக்கு முன்பாக திருமணம் செய்துகொண்டால், அந்த மணமக்கள் எந்தவித குறையுமின்றி நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்!''

- இப்படி திருமணத்துக்கென்றே புகழ்பெற்ற கோயில்கள் தமிழகம் முழுக்கவே இருக்கின்றன. சுபமுகூர்த்த நாட்கள் என்றால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கல்யாணங்கள் நடக்கக் கூடிய கோயில்களும் உண்டு. 'ஹவுஸ்ஃபுல்' போர்டு மாட்டாத குறையாக இருக்கும் அத்தகைய கோயில்களில்... திருவந்திபுரம், வைத்தீஸ்வரன்கோயில், மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்கள் இங்கே இடம்பிடிக்கின்றன!

மீனாட்சி கல்யாணம்!

உலகைக் காக்கும் பரம்பொருளான சொக்கநாதரும்... உலகின் அன்னை, பராசக்தி சொரூபம்... மீனாட்சியும் திருக்கல்யாணம் முடித்த ஸ்தலம் என்றால்... சும்மாவா?! இங்கே திருமணம் செய்துகொள்வதற்கு இதைவிட வேறு விசேஷ காரணமும் வேண்டுமோ! இதனால்தான், மதுரையிலேயே மிகமிக அதிகமாக இந்தக் கோயிலில் திருமணங்கள் நடக்கின்றன.

பாண்டிய மன்னன் மலையத்துவசன்- காஞ்சனமாலை தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய, பார்வதியே யாக குண்டத்தில் குழந்தையாகத் தோன்றினாள். அக்குழந்தைக்கு 3 ஸ்தனங்கள் (மார்புகள்) இருப்பதைக் கண்டு, மன்னனும் அரசியும் கவலையுற... 'இவள் மணமுடிக்கப் போகும் ஆணைப் பார்த்த மாத்திரத்தில் ஸ்தனங்களில் ஒன்று மறைந்துவிடும்' என்று அசரீரி ஒலித்தது!

போர் வித்தைகள் அனைத்தும் கற்ற மீனாட்சி, மதுரையின் அரசியாக பட்டம் சூடி ஆட்சி செய்தாள். எட்டுத் திக்கிலும் இருந்த நாடுகளை கொண்டவள், கைலாயத்தை ஆண்ட சிவன் மீதும் போர் தொடுத்தாள். சிவகணங்களை எல்லாம் வீழ்த்தியவள், சிவனைக் கண்ட மாத்திரத்தில் நாணி, தலை கவிழ்ந்து நின்றாள். அவளுடைய ஸ்தனங்களில் ஒன்றும் மறைந்து போனது.

வழக்கமாக புலித்தோல் ஆடை, மண்டையோடு மாலை, உடலெங்கும் சுடலைப்பொடி என்றே இருக்கும் சிவன்... அழகு மாப்பிள்ளையாக மதுரை வந்து சேர... விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்களும், முனிவர்களும் வாழ்த்த... மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கல்யாணம் அரங்கேறியது!

திருவந்திபுரம்... திருமணபுரம்!

மிகப்பெரும்பான்மையாக விவசாயத்தையே சார்ந்திருக்கும் மக்கள் வாழும் இந்தப் பகுதியில்... ஏழை, பணக்காரர் என்று எந்தப் பாகுபாடுமின்றி பெரும்பாலான திருமணங்கள் திருவந்திபுரம் தேவநாதசாமி சந்நிதியில்தான் நடத்தப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில், கடலூருக்கு அருகில் இருக்கிறது இந்த திருவந்திபுரம். இங்கே தேவநாதனாக குடிகொண்டு அருள்பாலிக்கிறார், பெருமாள். சாதாரண மக்களில் ஆரம்பித்து கர்நாடகத்தின் எடியூரப்பா வரை இந்த பெருமாள் மற்றும் மலைமீது இருக்கும் ஹயகிரீவர் ஆகியோரின் தீவிர பக்தர்கள்.

மார்க்கண்டேயரும், பூமிதேவியும் பெருமாளை நினைத்து இந்த இடத்தில் தவம் மேற்கொள்ள, அவர்களின் தவத்தை மெச்சி பெருமாள் அவர்களுக்கு காட்சி கொடுத்ததோடு... அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இதே இடத்தில் தொடர்ந்து தங்கி அருள்பாலிக்கிறார் பெருமாள் என்பது ஐதீகம். கருடன் கொண்டு வந்த நதியான கருடநதி... தற்போது கெடிலம் நதியாக இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கரையில்தான் தேவநாதனின் சந்நிதி.

திருமண வாழ்வில் வளம், எதிரிகள் இல்லாத வாழ்வு, நல்ல குழந்தைகள், தடையறாத கல்வி ஆகியவை கிடைப்பதற்கு, பெருமாளும்... ஹயகிரீவரும் உதவுவார்கள் என்கிற நம்பிக்கையே... பலரையும் இங்கே திருமணம் செய்து கொள்ள வைக்கிறது!

நன்றிக்கு ஒரு கல்யாணம்!

முருகப்பெருமான் - தெய்வானை இருவருக்கும் தேவர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்ற ஸ்தலமாயிற்றே... சிவனும், பார்வதியுமே வந்து மணமக்களை வாழ்த்திய பெருமைக்குரிய இடமாயிற்றே... இதுபோன்ற காரணங்கள்தான்... பலரையும் திருப்பரங்குன்றத்தில் தாலிகட்ட வைக்கிறது! சொல்லப்போனால், மதுரையைக் காட்டிலும் இங்கே, அதிக அளவில் கெட்டிமேளம் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாளெல்லாம்!

தேவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த சூரபத்மனை, திருச்செந்தூர் கடற்கரையில் வதம் செய்த முருகன்... அவனை மயிலும், சேவலுமாக மாற்றி... தன்னுடைய வாகனம் மற்றும் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் மகள் தெய்வயானையை முருகனுக்கு மணம் செய்து கொடுத்தான் தேவலோகத் தலைவன் இந்திரன். முப்பத்து முக்கோடி தேவர்களும் திரண்டு வந்ததில்... திருப்பரங்குன்றமே திணறித்தான் போனது!

'இறைவனின் சந்நிதியில் நமக்குத் திருமணம் நடந்திருக்கிறது. காலகாலத்துக்கும் எக்குறையும் இருக்காது!' என்று புதிதாக இல்லறம் ஏற்கும் தம்பதிகளின் மனதில் நம்பிக்கை விதை வீழ்ந்தால்... அதைவிட வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பது வேறு என்னவாக இருக்க முடியும்?!

செவ்வாய் தோஷ கல்யாணம்!

சீர்காழி அருகில் இருக்கும் இந்த வைத்தீஸ்வரன்கோவில், நவக்கிரகங்களில் செவ்வாய்க்கான ஸ்தலம். உமையாள், தைல பாத்திரம் ஏந்தி அதில் வில்வமரத்து அடிமண்ணும், சஞ்சீவியும் எடுத்துவர, அது கொண்டு உலகத்து மாந்தரின் பிணிகளுக்கு வைத்தியம் செய்பவராக விளங்குகிறார் இங்கு குடிகொண்டிருக்கும் வைத்தியநாதஸ்வாமி. மனிதர்களுக்கு வியாதியைக் கொடுக்கும் அங்காரகன் (செவ்வாய்), தனக்கு வந்த சருமநோயை நீக்க இங்குதான் வந்து வழிபட்டு குணமடைந்தான் என்பது ஸ்தல வரலாறு.

இங்கே தாய் - தந்தையுடன் இருக்கும் செல்வமுத்துகுமாரசாமிக்கு... ஒவ்வொரு கார்த்திகையும் மிகவிமரிசையாக உற்சவம் நடக்கும். குழந்தைப் பேறில்லாதவர்கள் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நாளன்று கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, கார்த்திகை பூஜைகளில் கலந்து கொண்டு, அபிஷேக பிரசாதமான சந்தனக்குழம்பை உண்டால், நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்.

இப்படி... நோய் தீர்க்கும், தோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும்... என அற்புதமான வரங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால்தான், இங்கு வந்து திருமணம் செய்துகொள்வதை விரும்புகிறார்கள். குறிப்பாக, செவ்வாய் தோஷக்காரர்கள்! ஆம், செவ்வாயான அங்காரகனுக்கே தோஷம் தீர்ந்த ஸ்தலமாயிற்றே!

- கரு.முத்து, கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து