'வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணிப் பார்' என்பார்கள். அந்த வரிசையில் 'அவள் விகடன் மணமகள்' தயாரித்துப் பார்... என்கிற வரிகளையும் தாராளமாகச் சேர்த்துவிடலாம்!

வீடு கட்டுவதும் சரி... ஒரு திருமணத்தை பார்த்துப் பார்த்து நடத்தி முடிப்பதும் சரி... எத்தனையோ பேர் சம்பந்தப்பட்ட, எவ்வளவோ நுணுக்கமான திட்டமிடுதல் நிறைந்த, ஏராளமான உழைப்பை வாங்குகிற, மங்கலகரமான விஷயம்! இதை நல்லபடியாக நடத்தி முடிக்கிறபோது, மனதுக்கு ஏற்படுகிற சந்தோஷமும், அதனால் கிடைக்கிற நீண்ட நிலையான எதிர்கால பலன்களும் அளவிட முடியாதவை! உங்கள் கையில் பிரமாண்டமான வடிவில், வண்ணத் துள்ளலோடு தவழ்ந்து கொண்டிருக்கும் 'அவள் விகடன் மணமகள்' இதழுக்கும் இதெல்லாமே முற்றிலுமாகப் பொருந்தும்!

ஒரு கல்யாணத்துக்கே, அப்படியென்றால்... ஊருக்கே கல்யாணக் களை உண்டாக்கும் இந்த இதழ் தயாரிப்புக்கு எவ்வளவு காலம் திட்டமிடுதல் நடந்திருக்கும், எத்தனை பேரின் உழைப்பு இதில் பொதிந்திருக்கும் என்பது இதழைப் புரட்டப் புரட்ட உங்களுக்கே புரிந்துவிடும். ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் இதழைக் கையில் எடுக்கும் உங்களிடமிருந்து பாராட்டு வார்த்தைகளைப் பெறுவதென்றால்... சும்மாவா!

உறவுகளை வளர்க்கும் சீர், சடங்குகளுக்காக ஒரு பயணம், தேடித்தேடி அழைப்பிதழ்கள் தேர்வு, மருதாணி மணத்தைக் கண்டுபிடிக்க ஒரு தேடல்... என்று எட்டு திசையிலும், பலப்பல தேடல்களோடு பயணித்த எங்கள் குழுவுக்கு, மிகவிமரிசையான திருமணத்தை நடத்தி வைத்த திருப்தி இப்போது!

இதழின் வடிவமைப்பில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் தெறிக்கும் புதுமை ஜொலிப்பை நீங்கள் அணுவணுவாக ரசிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயமும் உங்கள் வீட்டுக் கல்யாணத்தில் எதிரொலித்து... சுற்றத்துக்கும், நட்புக்கும் சந்தோஷ பிரமிப்பை உண்டாக்க வேண்டும்.

'ஆமாம்... அப்படியே நடந்தது' என்று உங்களிடமிருந்து உற்சாகமான பாராட்டு கிடைத்தால், அதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும் எங்களுக்கு!

'அவள் விகடன் மணமகள்' வருடத்துக்கு சில இதழ்கள், சீரான இடைவெளியில் இனி, உங்களை வந்தடையும்! மின்னல் வேகத்தில் மாறும் 'கல்யாண டிரெண்ட்'களை, 'பளிச் பளிச்’ என்று 'அப்டேட்' செய்யும்! உங்கள் வீட்டில் ஒரு மணமகள் உடனடியாக காத்திருக்காவிட்டாலும், சேர்த்து வைத்து... பின்னர் எந்த நேரமும் பொக்கிஷமாக பயன்படுத்தும் அளவுக்கு, நிரந்தர பயன்தரும் தகவல்களைத் தாங்கி வருவாள் இந்த 'மணமகள்'!

அப்புறமென்ன... மங்கல மேளம் கொட்டப்போகும் இடமெல்லாம்... இந்தப் புதுமை இதழும் தவறாமல் இருக்கும்தானே!

- ஆசிரியர்

மணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல்,

0446680 2922 என்ற எண்ணில் உங்கள் குரலிலேயே பதிவு செய்யுங்கள்!