திருமணம் என்றால், ஆயிரங்காலத்துப் பயிர். அது நின்று, நிலைத்து வளர... வாழ... ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும் என்கிற ஆவல், பெரியவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இதற்காகவேதான், ஆதிகாலம் தொட்டே... ஆயிரத்தெட்டு சடங்கு, சம்பிரதாயங்களை எல்லாம் கட்டி அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். அவற்றையெல்லாம் கொஞ்சம் உற்றுநோக்கி அலசி ஆராய்ந்தால், ஒவ்வொரு சடங்குக்குப் பின்னும்... அற்புதமான ஒரு விஷயம் ஒளிந்திருக்கும்!

மச்சினன் மோதிரம், சம்பந்தி சாப்பாடு, நாத்தனார் விளக்கு... இவையெல்லாம்தான், இந்தியாவில்... குறிப்பாக தமிழகத்தில் உறவுகளை இன்றளவும் தழைத்தோங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சடங்குகளில் ஒன்றிரண்டு விடுபட்டாலோ, சின்னதாக மாற்றம் கண்டாலோ... இப்போதும்கூட பெரியவர்கள் பதறுவதைத் திருமண மண்டபங்களில் பார்க்க முடியும்!

திருமண சடங்குகளைப் பொறுத்தமட்டில், இனத்துக்கு இனம்... இனத்துக்குள்ளேயே பிரிவுக்கு பிரிவு என்று பலமாதிரியாக வேறுபடும். ஆனாலும், பெரும்பாலான சடங்குகள் அனைத்து இனத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதிலிருந்தே நம்முடைய வேர்களைப் புரிந்துகொள்ள முடியும்!

இங்கே... தமிழகத்திலிருக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கொங்கு வேளாளர் ஆகிய இனத்தைச் சேர்ந்த இரு திருமணங்கள் சாம்பிளாக இடம்பிடிக்கின்றன...

நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமணச் சடங்குகள் பற்றி பேசும் காரைக்குடியைச் சேர்ந்த புகைப்படக்காரர் எம்.சுப்ரமணியன், ''சிவகங்கை, காரைக்குடி, பொன்னமராவதி பக்கம் இருக்குற எங்க இனத்தவங்க, சுமார் 700 வருஷத்துக்கு முன்ன காவிரிப்பூம்பட்டினத்துல (பூம்புகார்) இருந்து இடம் பெயர்ந்து வந்தவங்கனு சொல்லுவாங்க.

இந்தப் பகுதியை சுத்தி... இளையாத்தங்குடி, பிள்ளையார்பட்டி, மாத்தூர், மேமம்கோயில், வைரவன்கோயில், சூரக்குடி கோயில், இலுப்பைக்குடி, இரணியூர் கோயில், வேலங்குடினு ஒன்பது ஊர்கள்ல நகரத்தார்களுக்குனு கோயில்கள் இருக்கு. ஒரு கோயில் வழக்கப்படி வழிபடுறவங்க... பங்காளி முறையைச் சேர்ந்தவங்க. இவங்க, மத்த 8 கோயில் வழக்கப்படி வழிபடுற குடும்பத்துல சம்பந்தம் வெச்சுக்கலாம். இந்த நடைமுறை இன்றளவும் இருக்கு.

பெண் வீட்டார்தான், மாப்பிள்ளை வீட்டுக்குபோய் மணம் பேசி முடிப்பாங்க. 'பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பிடிச்சுப் போச்சு’னு சொன்னதும், அந்த இடத்திலேயே வெத்தல - பாக்கு மாத்தி நிச்சயம் செய்துக்கற வழக்கமும் இருக்கு. பெரும்பாலும் வீட்டுலயே திருமணம் நடத்துறதைத்தான் நகரத்தார் கௌரவமா நினைப்பாங்க. எந்த நாட்டுல, எந்த ஊர்ல வசிச்சாலும், திருமண வைபவம் மட்டும் சொந்த ஊருலதான் நடக்கும்.

திருமணம் பேசி முடிவானதும்... ஐந்து நாட்களுக்கு முன்பே முகூர்த்த கால் நட்டுடுவோம். திருமணத்துக்கு முதல் நாள், உறவினர்கள் எல்லாரையும் வரவழைச்சு 'கூடி ஆக்கி உண்பது’ங்கற நிகழ்ச்சி நடக்கும். அதுல ஆரம்பிக்கற சடங்குகள்... விளக்கு ஏற்றுதல், தும்பு (கயிறு) பிடித்து வீட்டுச்சுவரில் கோலம் போடுதல், மிஞ்சி போடுதல், மனை கட்டுதல், அரசாணிக்கால் இடுதல்னு நீளும்!

திருமணத்தன்னிக்கு காலையில பூ மணம் இடுதல் நிகழ்ச்சிதான் ஆரம்பம். இதுல உடன்பிறப்புகளோட சடங்குகள் நடக்கும். அடுத்து திருப்பூட்டுதல் நிகழ்ச்சி. முதன்முதலா மாப்பிள்ளை வீட்டார் சார்பா தட்டில் பட்டுச்சேலையும், தாலிச்சங்கிலியும் வழங்குவாங்க. அதை கொடுக்கறதுக்கு முன்ன, அவரவர் கோயில் சார்பா பூமாலை அணிவிக்கும் நிகழ்வு இருக்கும். மனைக்கு மேல் பெண்ணும், கீழே மாப்பிள்ளையும் நிற்க திருப்பூட்டுதல் (தாலிக்கட்டுதல்) நடக்கும். இதை 'மணவறைச்சடங்கு'னும் சொல்லுவாங்க.

அடுத்தடுத்து மணமக்கள் மஞ்சள் நீராடுதல், குளம் வாழும் பிள்ளை சடங்குனு போய் ஒட்டுமொத்த திருமண சடங்குகளும் முடியும்'' என்று சொன்ன சுப்பிரமணியன்,

''திருமணம்னா... ஒரு ரூபாய்தான் மொய்ப்பணம் வைப்போம்!'' என்கிற அதிசய தகவலையும் தந்தார்!

இணையற்ற இணை சீர்!

கொங்குவேளாளர் இன திருமண நிகழ்வுகள் பற்றி பேசும்... கொடுமுடி, முத்தூரைச் சேர்ந்த ஈஸ்வரி முத்துசாமி, ''கொங்குவேளாளர்களில் 65-க்கும் மேற்பட்ட கூட்டப் பிரிவுகள் உண்டு. ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி முறையில் வருவதால், வேறு கூட்டத்தில்தான் சம்பந்தம் செய்வார்கள். முதலில் பெண் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கும். கையோட பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை பார்க்க வருவாங்க. ரெண்டு தரப்புக்கும் சம்மதம்னா... 'நல்லவார்த்தை'னு ஒரு நிகழ்ச்சி இருக்கும். பெண் வீட்டு சொந்தங்கள் எல்லாம் கிளம்பிப்போய், மாப்பிள்ளை வீட்டுல பேசி முடிச்சு, சாப்பிடுவாங்க. உடனடியா மாப்பிள்ளை வீட்டுச் சொந்தங்கள் அத்தனையும் கிளம்பி பெண் வீட்டுக்கு வந்து பேசிட்டு சாப்பிட்டு போவாங்க. இது, நிச்சயதார்த்தத்துக்கு முந்தின நிகழ்வு. அடுத்தது நிச்சயதார்த்தம்தான். அப்ப ஆசாரியைக் கூடவே கூட்டி வருவாங்க. அவர் அந்த குலவழக்கத்துக்கு ஏத்த தாலியை தயாரா கொண்டு வருவார். இருந்தாலும் சம்பிரதாயத்துக்காக, அந்த நிகழ்ச்சி நடக்குற இடத்துலயே தங்கத்தை வெச்சு ரெண்டு தட்டுத் தட்டிட்டு, அந்தத் தாலியைக் கொடுப்பார். உடனே பத்திரிகை படிக்கற நிகழ்ச்சி நடக்கும். ஒரு பேப்பர்ல விஷயத்தை எழுதி, மஞ்சள் தடவி, எல்லார் முன்னிலையிலயும் படிப்பாங்க. அடுத்தது... ஜவுளி எடுக்கற நிகழ்வு. எங்க பகுதியில இதுவும் ஏககளேபரமாத்தான் இருக்கும். சொந்தபந்தங்கள் சூழ ரெண்டு வீடும் ஜவுளிக்காக கிளம்பிப் போற அழகே... அழகு!

கல்யாணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நடக்கும். பால்வடியுற மரத்தோட கிளையை வெட்டிட்டு வந்து மணமேடையில முகூர்த்தக்கால் நடுவாங்க. பிறகு, மாப்பிள்ளைக்கு உருமால் கட்டுசீர் நடக்கும். தாய்மாமனுங்க இதைச் செய்வாங்க. பெண்ணுக்கு பட்டம் கட்டுற நிகழ்வை, பெண்ணோட தாய்மாமனுங்க செய்வாங்க. அடுத்தது 'இணை சீர்'ங்கற நிகழ்ச்சி நடக்கும். இது மாப்பிள்ளை, தன் சகோதரிக்கு செய்யும் சிறப்பாகும். இன்னொருத்தி என் வாழ்வில் வந்தாலும், உடன்பிறப்பான உனக்கு செய்ய வேண்டியவற்றை என்றென்றும் செய்து கொண்டே இருப்பேன் என்று உறுதி கூறும் நிகழ்வு. பேழைமூடியில் சகோதரிக்குத் தேவையான சீர்கள் அனைத்தையும் வைத்து, சகோதரன் (மாப்பிள்ளை), கொடுப்பான்.

மறுநாள் காலையில் முகூர்த்தம். இதை நடத்திக் கொடுக்கறதுக்காகவே கொங்குவேளாளர் இனத்துல 'அருமைக்காரர்'கிறவங்க உண்டு. ஊருக்கு ஊர் இப்படிப்பட்டவங்க இருப்பாங்க. அவங்கதான் தாலி எடுத்துக் கொடுப்பாங்க. தாலிகட்டுற நிகழ்வுக்கு 'அருகமணம்'னு பேர் உண்டு. வெத்தலைக் காம்புகளைக் கிள்ளிப் போட்டு வாழ்த்துப்பா பாடி... தாலி எடுத்துக் கொடுப்பார் அருமைக்காரர்.

பிறகு, பொண்ணோட அண்ணன் இல்லனா தம்பியோட கைகோவைங்கிற நிகழ்ச்சி நடக்கும். ஒரு தாம்பாளத்துல இருக்கற அரிசியில மாப்பிள்ளையும் மச்சானும் கைகோத்து, உட்கார்ந்திருப்பாங்க. இந்த சமயத்துல கொங்கு நாவிதர் மங்கல வாழ்த்துச் சொல்வார்...

'அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்

திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திட...'னு ஆரம்பிக்கற அந்தப் பாட்டு,

'கட்டிலும் மெத்தையும் காலங்கி தலையணையும்

வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்

காளை வண்டியும் கன்றுடன் பால் பசுவும்'னு போய்...

'ஆல் போல் தழைதழைத்து.. அருகுபோல் வேரூன்றி...

மூங்கில் போல் கிளைகிளைத்து முசியாமல் வாழ்ந்திருக்க...'னு வாழ்த்தோட முடியும்.

கொங்கு சமூகத்துல நூறுவிதமான சடங்குகள் உண்டு. அதுல ரொம்ப ரொம்ப முக்கியமானது... 'தாயோடு உண்ணுதல்'. அதாவது, கல்யாணம் முடிச்ச பையனும் பொண்ணும் அவங்கவங்க அம்மாவோட சேர்ந்து பால், பழம் சாப்பிடுவாங்க. இது ரொம்ப ரொம்ப உருக்கமான நிகழ்ச்சியாக இருக்கும்!'' என்று உருகி உருகிச் சொன்னார் ஈஸ்வரி!

உறவுகள் வாழட்டும் என்றென்றும்!

- கோவிந்த் பழனிச்சாமி, ம.மோகன், தி.விஜய்

படங்கள்: சாய்தர்மராஜ், ரமேஷ் கந்தசாமி, 'ட்ரீம்' வொர்க்ஸ்