திருமணச் சந்தையின் நவீன பாலம்... மேட்ரிமோனியல் சைட்கள்! பெண்ணோ, பையனோ, பக்கத்து ஊரோ, பக்கத்து நாடோ... எல்லா சாய்ஸ்களிலும் நூற்றுக்கணக்கான வரன்களை கண்முன் கொண்டு வந்து கொட்டும் இந்த 'ஆன்லைன் திருமண தரகு நிலையங்கள்', திருமணத் தேடலை எளிதாக்கி இருக்கின்றன. அதேசமயம், போலி வரன் உள்ளிட்ட சில சிக்கல்களும் இதில் உள்ளன.

'பாரத் மேட்ரிமோனி டாட் காம்’ முதன்மை தலைமை அதிகாரி முருகவேல் ஜானகிராமன், மேட்ரிமோனியல் சைட்களின் வரைமுறைகளைப் பற்றி பேசுகிறார்... உங்களுக்காக...

''மேட்ரிமோனியல் சைட்களில் பதிவது, மிகவும் எளிது. ஊர், ஜாதி, மொழி என்று பல அடிப்படைகளில் மேட்ரிமோனியல் சைட்கள் இயங்குகின்றன. சில சைட்கள் இந்த எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கி இருக்கும். உங்களின் தேடலைப் பொறுத்து, நம்பகமானதைத் தேர்ந்தெடுப்பது முதல் படி.

அடுத்ததாக, ஆண்/பெண் தங்கள் புகைப்படம், பெயர், மதம், ஜாதி, ஜாதகம், படிப்பு, வேலை, சம்பளம், சொத்து மதிப்பு, குடும்ப விவரம், விலாசம் உள்ளிட்ட தகவல்களுடன், தாங்கள் விரும்பும் வரன்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு/நிபந்தனை ஆகியவற்றுடன் ஒரு புரொஃபைல் உருவாக்க வேண்டும். முக்கியமாக, அவர்களின் தெளிவான தொலைபேசி எண்ணையும் கட்டாயம் வழங்க வேண்டும்.இப்படி எங்களிடம் பதிவுக்கு வரும் வரன்களை, அவர்கள் வழங்கியுள்ள தொலைபேசி எண்களில் அழைத்து உறுதி செய்த பின்னர், அந்த புரொஃபைலை எங்கள் இணைய பக்கத்தில் பதிவிடுவோம். போலி வரன்களைத் தடுப்பதற்காகத்தான் இந்த தொலைபேசி என்கொயரி.

உங்கள் புரொஃபைல், எங்கள் வெப்சைட்டில் பதிவு செய்யப்பட்ட பின், உங்களுக்கான யூஸர் நேம், பாஸ்வேர்டு வழங்கப்படும். அதன் மூலம் எங்கள் வெப்சைட்டில் 'லாக் இன்’ செய்து, அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வரன்களில் உங்களுக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். ஆன் லைன் மூலமாகவே, ஜாதக பொருத்தத்தையும் காணமுடியும்!

மேலே சொன்னது பொதுவான நடைமுறை. தவிர, ஒவ்வொரு மேட்ரிமோனியல் தளங்களிலும் சில வித்தியாசமான திட்டங்கள் உள்ளன. எங்கள் வெப்சைட்டைப் பொறுத்தவரை, ஐடி கிரியேட் செய்வதற்கு நீங்கள் எந்தத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், மற்றவர்களின் புரொஃபைல்களையும், அவர்களுடைய தொடர்பு விவரங்களையும் பெற வேண்டுமென்றால், கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம். மேட்ரிமோனியல் சைட்களில் மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என்று வேலிடிட்டி உள்ளது. அது முடிந்துவிட்டால், தேவைப்படும்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த ஜாதியில், இந்தப் படிப்பு படித்த, இத்தனை சென்டிமீட்டர் உயரம் உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்று இப்படி குறிப்பிட்ட கண்டிஷன்களுடன் நீங்கள் கேட்டால், அதற்கேற்ற வரன்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு, உங்கள் பார்வைக்கு சைட்களில் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்தமான வரன்களை நாங்களே அணுகி, இரு வீட்டின் சந்திப்புக்கான ஏற்பாடுகளையும் முன்னெடுப்போம். இதற்கு கட்டணம் சற்று அதிகம்'' என்று சொன்ன முருகவேல் ஜானகிராமன்,

''மேட்ரிமோனியல் மூலமாக கல்யாணம் செய்தால் பிரச்னை என்கிற குற்றச்சாட்டு சில இடங்களில் இருக்கிறது. ஆனால், பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் வரன்களில்கூட பிரச்னைகள் வருகின்றன என்பதுதானே உண்மை. எங்களைப் பொறுத்தவரை இதுவரை 10 லட்சத்துக்கும் மேலான திருமணங்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கின்றன. என் திருமணம்கூட மேட்ரிமோனியல் மூலம்தான் முடிந்தது'' என்று நம்பிக்கையூட்டுகிறார்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: செ.திலீபன்