ஓவியங்கள்: ஹரன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

வாண்டு லாஜிக்!

என் பேரனின் சைக்கிள் ரிப்பேர் ஆகிவிட்டது. சைக்கிள் ரிப்பேர் கடை தூரம் என்பதால் அதை நீண்ட நாட்களாக வீட்டிலேயே போட்டு வைத்திருந்தோம். ஒரு நாள் அவன், ''பாட்டிம்மா... சைக்கிள் கடை தூரமா இருந்தா என்ன? பக்கத்துல இருக்கிற பைக் வொர்க்ஷாப்ல ரிப்பேர் பண்ண மாட்டாங்களா?'' என்று கேட்டான். அதற்கு நான், ''அவங்களுக்கு சைக்கிள் ரிப்பேர் தெரியாதுடா செல்லம்!'' என்றேன். உடனே அவன், ''டூ-வீலர் வொர்க்ஷாப்புனுதான் போர்டு போட்டிருக்கு. என்னோடதும் டூ-வீலர்தான். நான் எல்.கே.ஜி. படிச்சிட்டு யூ.கே.ஜி. போன மாதிரி, அந்த மெக்கானிக்கும் சைக்கிள் ரிப்பேர் பாஸாயிட்டு, அப்புறம்தான் பைக் ரிப்பேர்ல பாஸாகி இருப்பார்!'' என்று மடக்கினான் என்னை.

பதில் சொல்லத் தெரியாமல் சிரித்தேன் நான்... உங்களைப் போலவே!

- ஏ.ஜே.ஜபீன்பேகம், சத்தியமங்கலம்

விக்கிது... விக்கிது!

அன்று வகுப்புக்குள் கொஞ்சம் லேட்டாக நுழைந்தேன். என் வகுப்பு குட்டி தேவதைகள் எல்லாம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, கையில் அழகான கீ-செயினை வைத்துக் கொண்டு, கண்கள் படபடக்க கதை சொல்லிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும், கீ-செயினை தன் பின்னால் மறைத்ததுடன், நான் அதை அவளிடமிருந்து வாங்கப் போகிறேன் என்று பயந்தவள், ''மிஸ் அது விக்கிது.. அது விக்கிது...'' என்றாள். ''அப்படியா..? எங்கம்மா விக்கிது..?'' என்றேன் நான் அவள் பயத்தைக் குறைக்க. என் வகுப்பு வாண்டுகள் எல்லாம் சிரித்துக் கொண்டே, ''மிஸ்... அது அவளோட அண்ணா விக்கியோடது!'' என்று விளக்க

வுரை கொடுக்க, அந்த தேவதைகளின் சிரிப்பில் நானும் ஐக்கியமானேன்!

- பி.எஸ்.லஷ்மி, மதுரை

A.B.C.D. தெரியாத ஆபீஸர்!

என் அப்பாவுக்குக் கண்ணில் பிரச்னை என்பதால் கண் டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். கூடவே என் ஏழு வயது மகனும். மருத்துவமனையில் போர்டில் உள்ள கி,ஙி,சி,ஞி எழுத்துக்களை வாசிக்கச் சொன்னார்கள். என் அப்பா எந்த எழுத்தைக் காண்பித்தாலும், 'தெரியலையேப்பா’ என்று பரிதாபமாகச் சொன்னார். இதை கவனித்துக் கொண்டிருந்த என் வாண்டு, வீடு திரும்பியதும் என் அம்மாவிடம் ஓடிச்சென்று, ''பாட்டி... தாத்தா பெரிய ஆபீஸரா வேலை பார்த்தார்னு சொன்னீங்க..? ஆனா, அவர் ஸ்கூலுக்குக்கூட போகலபோல இருக்கு. ஆஸ்பிட்டல்ல கி,ஙி,சி,ஞி கூட வாசிக்கத் தெரியலையே அவருக்கு!'' என்றான் படபடவென.

நாங்கள் மட்டும் அல்ல, சோர்வாகத் திரும்பிருந்த அப்பாவும் சிரித்து மலர்ந்துவிட்டார்!

- சாந்தி சுந்தர், சென்னை-17