என்.சியாமளாதேவி
படங்கள்: ப.சரவணகுமார்

கிராஃப்ட் ஸ்கூல்!

இனியெல்லாம் ஃபங்ஷன்ஸ் காலம்தான். ஃபங்ஷன்னாலே பட்டுக்கு பஞ்சம் இருக்காது. யூகிச்சிருப்பீங்களே? யெஸ்... நாம இந்த இதழ்ல, பட்டுச் சேலையில 'கிரஷ்டு டிஷ்யூ பேட்ச் வொர்க் டிசைன்' கத்துக்கப் போறோம்.

'பட்டுச் சேலையிலயா... அது ஏற்கெனவே கிராண்ட்தானே!'னு நினைக்கறீங்களா? அப்கோர்ஸ்! பட், நாம இந்த டிசைனுக்காக 'சூஸ்’ பண்ணப் போறது... பார்டர்ல மட்டுமே டிசைன்டா இருக்கிற பிளெய்ன் பட்டுச் சேலை! தைரியமா வாங்க... கத்துக்கிடலாம்!

தேவையான பொருட்கள்: கறுப்பு நிற பட்டுச் சேலை - 1, பாசிப் பருப்பு கலர் கிரஷ்டு டிஷ்யூ - அரை மீட்டர் (துணிக் கடைகளில் கிடைக்கும்), பேர்ல் மெட்டாலிக் கோல்ட் கலர் த்ரீ டி லைனர் - 1 பாட்டில், ஃபேப்ரிக் க்ளூ - 1 பாட்டில்.

செய்முறை: கத்தரிக்கோல் மூலமாக கிரஷ்டு டிஷ்யூவில், உள்ளங்கை அளவுக்கான ஹார்டின் வடிவங்களை வெட்டிக் கொள்ளுங்கள். ஓரங்களில் பிசிறு பிசிறாக இருப்பவற்றை ஃபேப்ரிக் க்ளூ தடவி, உள்பக்கமாக மடித்து ஒட்டி (படம்-1), அரை மணி நேரம் காய விடுங்கள். இப்போது பிசிறு இல்லாத ஹார்டின் வடிவங்கள் கிடைத்திருக்கும் (பட்டுச் சேலையில் எங்கெல்லாம் ஒட்டினால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ற எண்ணிக்கையில் ஹார்டின்களை முன்கூட்டியே தயார் செய்து கொள்ள வேண்டும்).

காய்ந்திருக்கும் ஹார்டின் வடிவத்தின் பின்பக்கத்தில், ஃபேப்ரிக் க்ளூ தடவி, சேலையில் நீங்கள் விரும்பும் பகுதியில் ஒட்டி விடுங்கள் (படம் 2). இப்படியே சிறிது இடம் விட்டு, இடம் விட்டு ஹார்டின் வடிவங்களை ஒட்டுங்கள்.

அடுத்து, ஒட்டப்பட்ட ஹார்டின்கள் மீது டிசைன் செய்ய வேண்டும். அதன் ஓரங்களில் எல்லாம் ஃபேர்ல் மெட்டாலிக் கோல்ட் த்ரீ டி லைனரைப் பயன்படுத்தி, படத்தில் காண்பித்து (படம் 3) உள்ளது போல தடவுங்கள். ஹார்டின் வடிவம் முன்பைவிட இப்போது பளிச்சென்று தெரியும். அதனுள்ளே, சிறியதாக இன்னொரு ஹார்டின், அதனுள்ளே சிறிய டிசைன் என்று படத்தில் காண்பித்து உள்ளது போல வரையுங்கள். ஹார்டினுக்கு வெளியேயும் படத்தில் காட்டியுள்ளது போல டிசைன் (படம் 4) செய்யுங்கள்.

எல்லாம் செய்து முடித்ததும், ஒரு நாள் முழுக்க அப்படியே தரையில் விரித்து, காற்றாட காய வைத்து விடுங்கள். மறுநாள் சேலையை பின்புறமாக திருப்பி அயர்ன் செய்தால்... அட்டகாசமான டிசைனில் பட்டுச் சேலை ரெடி!

'ஹேய்... எங்கே வாங்கினே... இந்த அசத்தலான பட்டுப் புடவையை!' என்றபடி உங்களைச் சுத்தி கூட்டம் வளையவர ஆரம்பித்துவிடும்!

- இன்னும் கத்துக்கலாம்...